ஃபெராரி கார் எஞ்சினுடன் அசரடிக்கும் ஓர் குவாட் பைக்!

இதுவரை விதவிதமான மோட்டார்சைக்கிள் குறித்து பல செய்திகளை வழங்கியிருக்கிறோம். ஆனால், இந்த குவாட் பைக் முற்றிலும் வித்தியாசமானது. ஆம், வஸுமா வி8 எஃப் என்று பெயரிடப்பட்ட இந்த நான்கு சக்கர பைக் பார்ப்பதற்கு மட்டுமல்ல, ஓட்டுவதிலும் அலாதியான அனுபவத்தை நிச்சயம் வழங்கும் என்பதில் ஐயமில்லை.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வஸுமா என்ற பெயரில் கான்செப்ட் நிலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த நவீன குவாட் பைக் தற்போது தயாரிப்பு நிலையை எட்ட இருக்கிறது. ஆர்டரின் பேரில் தயாரித்து விற்பனை செய்யப்பட இருக்கும் இந்த வாகன பொறியியலின் அதிசயத்தை பற்றிய பல சுவராஸ்யமான கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஃபிரெஞ்ச் பிராண்டு

ஃபிரெஞ்ச் பிராண்டு

வஸுமா வி8 எஃப் மோட்டார்சைக்கிளை பிரான்சை சேர்ந்த லாசரேத் என்ற பிரபல கார் மற்றும் மோட்டார்சைக்கிள் கஸ்டமைசேஷன் நிறுவனம்தான் உருவாக்கியுள்ளது. இரண்டிலும் பாண்டித்தியம் பெற்ற லாசரேத் கார் மற்றும் மோட்டார்சைக்கிள் பாகங்களை வைத்து இந்த அசத்தலான மோட்டார்சைக்கிள் போன்ற வாகனத்தை வடிவமைத்துள்ளது.

 தோற்றம்

தோற்றம்

எஞ்சினுக்கு மேல்புறத்தில் ஒரு இருக்கையை போட்டு, நான்கு பெரிய சக்கரங்களை கோர்த்துவிட்டு வஸுமாவை வடிவமைத்துள்ளது லாசரேத். டிசைனில் எங்கும் சொதப்பிவிடாதபடி, மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருப்பதுதான் இதன் சிறப்பு.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த கான்செப்ட் வாகனத்தில் 1970ம் ஆண்டு ஃபெராரி 308 காரின் 3.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 250 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

பிஎம்டபிள்யூ டிரான்ஸ்மிஷன்

பிஎம்டபிள்யூ டிரான்ஸ்மிஷன்

எஞ்சின் பவர் பின்புற சக்கரங்களுக்கு கடத்தப்படுகிறது. பிஎம்டபிள்யூ எம்3 காரின் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன்தான் இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

எடை

எடை

இந்த வாகனம் 650 கிலோ எடை கொண்டது. மேலும், ஒரு டன் எடைக்கு 384 பிஎச்பி என்ற விகிதத்திலான அபரிமிதமான பவர் கொண்டது. இது ஃபெராரி 458 இட்டாலியா சூப்பர் காருக்கு இணையான பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

ஓடுதளங்களில் இந்த வாகனம் மணிக்கு 322 கிமீ வேகம் வரை செல்லத்தக்கது.

 எஞ்சின் பெர்ஃபார்மென்ஸ்

எஞ்சின் பெர்ஃபார்மென்ஸ்

இந்த வாகனத்தின் எஞ்சின் பெர்ஃபார்மென்சை வசதிக்கேற்ப கூட்டிக் கொள்ள முடியும்.

சக்கரங்கள்

சக்கரங்கள்

இந்த வாகனத்தில் 18 இஞ்ச் மோமோ ரிம்களும், ஸ்லிக் டயர்களும் பொருத்தப்பட்டுள்ளன.

டயர் பரிமானம்

டயர் பரிமானம்

முன்புறத்தில் 285‐30ZR18 டயர்களும், பின்புறத்தில் 315‐30ZR18 டயர்களும் பொருத்தப்பட்டுள்ளன.

முந்தைய மாடல்

முந்தைய மாடல்

இதற்கு முன்னர் யமஹா ஆர்1 பைக் எஞ்சினுடன் கூடிய வஸுமா ஆர்1 என்ற நான்குசக்கர மோட்டார்சைக்கிளை லாசரேத் தயாரித்தது.

 விலை

விலை

இந்த வாகனத்திற்கு 2.60 லட்சம் டாலர் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இயக்கம்

இயக்கம்

இந்த வாகனத்தை சட்டரீதியாக சாலையில் இயக்குவதற்கான அனுமதி இல்லை என தெரிவிக்கப்படுகிறது. எனவே, ஓடுதளங்களில் ஓட்டிப் பார்த்து ஆசையை தீர்த்துக் கொள்ளலாம்.

வீடியோ

வஸுமா வி8 எஃப் மோட்டார்சைக்கிளின் செயல்பாடுகளை வீடியோவில் காணலாம்.

Most Read Articles
English summary
What you'll see in the image gallery and in the video below is not a movie prop. The quad is an actual working machine that you can ride if you have the money to pay. Some of might be familiar with the Lazareth Wazuma V8F quad since a red one off model was seen a couple of years back.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X