இந்த நம்பர் பிளேட் உங்கள் வாகனத்தை திருட்டில் இருந்து காக்கும்!

திருட்டில் இருந்து வாகனங்களை காக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்திலான நம்பர் பிளேட்டை ஒருவர் உருவாக்கியுள்ளார். அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

குஜராத்தின் வதோதராவை சேர்ந்தவர் துஷார் குஹா, இவர் பிளாஸ்டிக் தொழில்நுட்பத்தில் பொறியல் பட்டம் பெற்றவர். புதிய கண்டுபிடிப்புகளின்மீது கொண்ட மோகத்தால் தான் பார்த்து வந்த வேலையை கடந்த 2008ல் உதறிவிட்டு முதல் புதிதாக எதையாவது கண்டுபிடிக்கத் தொடங்கினார். தற்போது அவர் உயர்பாதுகாப்பு அம்சங்கள் பொருந்திய வாகன நம்பர் பிளேட் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

திருட்டில் இருந்து வாகனத்தை காக்கும் ‘நவீன நம்பர் பிளேட்’

அரசு ஏற்கெனவே அறிமுகப்படுத்திய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய நம்பர் பிளேட்டுகள் தற்போது புழக்கத்தில் உள்ளன, ஆயினும் அதையும் விட தனது நம்பர் பிளேட் பாதுகாப்பு அம்சத்தில் உயர்வானது என கூறுகிறார் துஷார்.

என்ன பாதுகாப்பு?

என்ன பாதுகாப்பு?

துஷார் உருவாக்கியுள்ளது எல்ஈடி கார் நம்பர் பிளேட், வாகனத்திலிருந்து கழற்றவும், சேதப்படுத்தவும் முடியாத வகையில் இதனை உருவாக்கியுள்ளார். நம்பர் பிளேட்டில் உள்ள எல்ஈடி விளக்கு, காரின் இக்னிஷன் சிஸ்டத்துடன் இணைப்பு பெற்றுள்ளது, இதில், வாகன உரிமையாளரின் ஆதார் எண்ணும் இணைக்கப்பட்டுள்ளது.

திருட்டில் இருந்து வாகனத்தை காக்கும் ‘நவீன நம்பர் பிளேட்’

இவரின் கண்டுபிடிப்பை ஒப்பிட்டு பார்த்தால், தற்போது பயன்பாட்டில் உள்ள நம்பர் பிளேட்டுகள் சாதாரணமானவையாகவே கருதப்படுகிறது. இவரின் நம்பர் பிளேட் காரின் இக்னிஷன் சிஸ்டத்துடன் இணைப்பு பெற்றுள்ளதால் எஞ்சினை ஆன் செய்தவுடன் நம்பர் பிளேட்டில் உள்ள விளக்கு எரிகிறது. இதனால் இரவிலும் வாகன எண்ணை தெளிவாக காண இயலும்.

திருட்டில் இருந்து வாகனத்தை காக்கும் ‘நவீன நம்பர் பிளேட்’

யாரையேனும் இடித்துவிட்டு வாகனம் சென்றால் கூட அருகிலிருப்பவர்களால் வாகன எண்ணை தெளிவாக இனம் கண்டு, அதை வைத்து கார் நம்பருடன் இணைப்பு பெற்றுள்ள ஆதார் எண் உதவியுடன் உரிமையாளரை அடையாளம் காணலாம்.

திருட்டில் இருந்து வாகனத்தை காக்கும் ‘நவீன நம்பர் பிளேட்’

ஒருவேளை வாகனத்தை யாரேனும் திருடிவிட்டால் கூட, நம்பர் பிளேட்டை கழற்ற முடியாது என்பதால் திருடியவர் இந்த நம்பர் பிளேட்டுடனேயே வாகனத்தை இயக்க நேரிடும், எனில் சாலையில் பயணிக்கின்ற போது எளிதாக வாகனத்தை கண்டுபிடித்துவிட இயலும். இதன் காரணமாக திருட்டு வாகனத்தை பயன்படுத்தி அதனை முறைகேடான காரியங்களுக்காக பயன்படுத்துவது தவிர்க்கப்படும்.

திருட்டில் இருந்து வாகனத்தை காக்கும் ‘நவீன நம்பர் பிளேட்’

இந்த உயர் பாதுகாப்பு எல்ஈடி நம்பர் பிளேட்டிற்காக காப்புரிமை பெற்றுள்ள துஷார், இதோடு சேர்த்து 5 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

திருட்டில் இருந்து வாகனத்தை காக்கும் ‘நவீன நம்பர் பிளேட்’

தனது கண்டுபிடிப்பு தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்கும், இந்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்துக்கும் தகவல் அனுப்பியுள்ளார், அரசு இதனை நடைமுறைப்படுத்தும் போது கூடுதல் நன்மைகள் கிடைக்கும் என்பது அவரின் எண்ணமாகும்.

திருட்டில் இருந்து வாகனத்தை காக்கும் ‘நவீன நம்பர் பிளேட்’

இவர் முன்னதாக, வீடியோ காசட் அளவிலான பேட்டரியை உருவாகியுள்ளார், இந்த பேட்டரி 10 முதல் 120 மணிநேரங்களுக்கு விளக்கை எரியவைக்கும் ஆற்றல் கொண்டதாகும். மேலும் நீருக்குள்ளும் எரியும் வகையிலான உடைக்கமுடியாத, எல்ஈடி விளக்கையும் கண்டுபிடித்து அதற்கான காப்புரிமையையும் பெற்றுள்ளார்.

வால்வோ எஸ்90 காரின் படங்கள் :

Most Read Articles
English summary
Tushar Guha has invented LED Car number plates, that synchronise with the vehicle’s ignition, thus preventing thefts.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X