இந்திய ராணுவத்தின் முதுகெலும்பாக விளங்கும் 45 ராணுவ வாகனங்கள்!

உலக அரங்கில் நான்காவது பலம் வாய்ந்த ராணுவத்தை பெற்றிருக்கும் நாடு என்ற பெருமையை இந்தியா தக்க வைத்து வருகிறது. உலகிலேயே மிகவும் நவீனமான பல ராணுவ வாகனங்களை இந்தியா பெற்றிருக்கிறது.

பரந்து விரிந்த எல்லைகளையும், பலவகையான நில அமைப்புகளையும் கொண்ட இந்தியாவின் பாதுகாப்பை நிலைநிலைநாட்டுவதற்கா நம் நாட்டு ராணுவம் பல்வேறு வகையான விசேஷமான வாகனங்களை பயன்படுத்துகிறது. அதில், சில முக்கியமான அல்லது அதிக அளவில் பயன்படுத்தப்படும் ராணுவ வாகனங்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

 01. அர்ஜுன் எம்பிடி

01. அர்ஜுன் எம்பிடி

ராணுவ வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தயாரிப்புதான் அர்ஜுன் பீரங்கி. நம் நாட்டு ராணுவத்தின் முக்கிய ராணுவ பீரங்கிகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த பீரங்கியை 4 பேர் இயக்க முடியும். அர்ஜுன் எம்பிடி பீரங்கியில் 120மிமீ துப்பாக்கி பொருத்தப்பட்டு இருக்கிறது. இது ஒரு இந்திய தயாரிப்பு.

Picture Credit: moddb

 02. டி-90எஸ் [பீஷ்மா]

02. டி-90எஸ் [பீஷ்மா]

டி-90எஸ் என்ற குறிப்பிடப்படும் பீஷ்மா மற்றும் டி-90எம் ஆகிய பீரங்கிகள் இந்திய ராணுவத்திற்கு முக்கிய பீரங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த பீரங்கியில் 125மிமீ ஸ்மூத்போர் டேங்க் கன் என்ற வகையை சேர்ந்த துப்பாக்கி பொருத்தப்ட்டிருக்கிறது. 700 கிமீ தூரம் வரை இயக்க முடியும். இது ரஷ்யாவை பூர்வீகமாக கொண்டது.

Picture Credit: Wikimedia

03. டி-72 அஜேயா

03. டி-72 அஜேயா

சென்னை, ஆவடியில் உள்ள ஆலையில் தயாரிக்கப்படும் பீரங்கி மாடல். சோவியத் யூனியன் தயாரிப்பான இந்த பீரங்கியில் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் உக்திகளுடன் பல்வேறு சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

Picture Credit: Defenceforum

04. பிஎம்பி-2 சரத்

04. பிஎம்பி-2 சரத்

மேடக்கில் உள்ள ராணுவ தளவாட தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது 900க்கும் மேற்பட்ட பிஎம்பி-2 பீரங்கிகள் சேவையில் உள்ளன. இதுவும் சோவியத் யூனியனின் தயாரிப்பு.

Picture: Credit:defenceforumindia

05. பிடிஆர் - 50

05. பிடிஆர் - 50

துருப்புகளை ஏற்றிச் செல்லும் ஆம்பிபியஸ் வாகனம்.

நீரிலும், நிலத்திலும் செல்லும். போர் முனைக்கு வீரர்களை எளிதாக கொண்டு செல்வதற்காக விசேஷ கட்டமைப்புடன் உருவாக்கப்பட்ட மாடல்.

Picture Credit: Wikipedia

06. பீரங்கி எதிர்ப்பு வாகனம்

06. பீரங்கி எதிர்ப்பு வாகனம்

Nag Missile Carrier என்று குறிப்பிடப்படும் இந்த வாகனத்தில் 12 ஏவுகணைகளை வைத்து எடுத்துச் செல்ல முடியும். இதில், 8 ஏவுகணைகள் எப்போது வேண்டுமானாலும் ஏவுவதற்கு தயார் நிலையில் வைத்திருக்க முடியும். இது ஒரு இந்திய தயாரிப்பு.

Picture Credit:defencyclopedia

07. சிஎம்டி

07. சிஎம்டி

தொடர்ச்சியாக சுடுவதற்கான இரட்டை குழல் துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட கவச வாகனம். நீரிலும், நிலத்திலும் செல்லும் தகவமைப்பு கொண்டது.

Picture Credit:photodivision

 08. டோபாஸ் 2-ஏ

08. டோபாஸ் 2-ஏ

போர் முனைக்கு துருப்புகளை கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்ட இந்த கவச வாகனம் பின்னாளில் தொழில்நுட்ப உதவி புரியும் வாகனமாக மாற்றங்கள் செய்யப்பட்டது. போர் முனையில் மிக முக்கிய பங்களிப்பை வழங்கும்.

Picture Credit: Wikipedia

09. கவச ஆம்புலன்ஸ்

09. கவச ஆம்புலன்ஸ்

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான டிஆர்டிஓ வடிவமைத்த கவச ஆம்புலன்ஸ் வாகனம். போர் முனைகளில் காயமடையும் வீரர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கும், முதலுதவி செய்வதற்குமான வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டிருக்கும் வாகனம்.

Picture Credit: DRDO

 10. என்பிசி ஆய்வு வாகனம்

10. என்பிசி ஆய்வு வாகனம்

என்பிசி என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த உளவு வாகனத்தையும் டிஆர்டிஓ., அமைப்புதான் உறுவாக்கியது. அணுக்கதிர், உயிரி மற்றும் ரசாயன தாக்குதல்கள் குறித்து கண்டறிவதற்காக விசேஷ கருவிகளுடன் கட்டமைக்கப்பட்டிருக்கும் கவச வாகனம். இதுவும் இந்தியாவின் சொந்த தயாரிப்பு.

Picture Credit: Wikimedia

11. பிஆர்பி-3

11. பிஆர்பி-3

எதிரிகளின் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் குண்டு வீச்சு வாகனங்களின் நடமாட்டத்தை கண்டறிவதற்காக உருவாக்கப்பட்ட விசேஷ வாகனம். சோவியத் யூனியனிடமிருந்து அப்போது பெறப்பட்டது.

Picture Credit: Armyrecognition

12. காஸ்பிர்

12. காஸ்பிர்

கண்ணி வெடித்தாக்குதல்களில் இருந்து வீரர்களை பாதுகாக்கவும், வீரர்களை பத்திரமாக போர் முனைக்கு கொண்டு செல்வதற்கு பயன்படும் வாகனம். தற்போது 90 வாகனங்கள் இந்திய ராணுவத்திடம் உள்ளது. இது தென் ஆப்ரிக்காவை பூர்வீகமாக கொண்டது.

Picture Credit: Wikipedia

13. டார்மர் ஏஎஃப்வி

13. டார்மர் ஏஎஃப்வி

நிலத்தில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகளை அகழ்ந்து செயலிழக்க செய்வதற்கு பயன்படும் வாகனம். இதனை பின்தொடர்ந்து, பிற ராணுவ வாகனங்கள் போர் முனையை நோக்கி விரையும். இது இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட கவச வாகனம்.

Picture Credit: Defenceforum

14. ஹைட்ரெம்மா

14. ஹைட்ரெம்மா

இதுவும் கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக பயன்படும் வாகனம். அதிகபட்சமாக 3.5 மீட்டர் அகலத்திற்கு கண்ணி வெடிகளை அகற்றி முன்னேறும். இது டென்மார்க் தயாரிப்பு.

Picture Credit: Team BHP

15. ஆதித்யா எம்விபி

15. ஆதித்யா எம்விபி

தீவிரவாத தாக்குதல்களை முறியடிக்கும் விதத்தில் டிஆர்டிஓ அமைப்பு உருவாக்கிய கவச வாகனம்.

Picture Credit: Wikipedia

16. டிஆர்டிஓ டேக்ஷ்

16. டிஆர்டிஓ டேக்ஷ்

பேட்டரியில் இயங்கும் ரோபோ. வெடிகுண்டுகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபடுத்துவதற்காக டிஆர்டிஓ உருவாக்கிய ரோபோ. இதனை ரிமோட் கன்ட்ரோல் மூலமாக இயக்க முடியும்.

Picture Credit: Wikipedia

17. கர்திக் ஏபிஎல்

17. கர்திக் ஏபிஎல்

போர்முனைகளில் தற்காலிக பாலமாக செயல்படும் கவச வாகனம். வேண்டும்போது ஹைட்ராலிக் சிஸ்டத்தின் உதவியுடன் விரிவடைந்து பாலமாக மாறும். இந்த பாலம் 21 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் உடையது. உலகிலேயே மிக பெரிய கவச வாகன பாலமாகவும் குறிப்பிடப்படுகிறது. இதில், எந்திர துப்பாக்கியும் பொருத்தப்பட்டு இருக்கிறது. மத்திய போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமும், புனேயில் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து தயாரித்தது.

Picture Credit: Vatsrohit

18. டாங்கி எம்டி-55

18. டாங்கி எம்டி-55

இதுவும் தற்காலிக பாலம் அமைப்பதற்கான வாகனம். சோவியத் யூனியனின் தயாரிப்பு.

Picture Credit: Wikipedia

19. சர்வத்ரா

19. சர்வத்ரா

75 மீட்டர் அளவுக்கு தற்காலிக பாலம் அமைக்கும் வாகனம். டிஆர்டிஓ அமைப்பால் உருவாக்கப்பட்டது.

Picture Credit: Defenceforum

20. டி-72 பிஎல்டி

20. டி-72 பிஎல்டி

இது டி-72 டாங்கியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பாலம் அமைக்கும் வாகனம். தற்போது 12 டி-72 பிஎல்டி வாகனங்கள் உள்ளன.

Picture Credit: DRDO

 21. சீஸ்

21. சீஸ்

இதுவும் தற்காலிக பாலம் அமைக்கும் வாகனம்தான். தற்போது 6 வாகனங்கள் நம் நாட்டு ராணுவத்திடம் உள்ளது.

picture Credit: Imageshack

22. ஆய்வு வாகனம்

22. ஆய்வு வாகனம்

சமவெளி, பாலைவனம், ஆற்றுப் படுகைகளில் தற்காலிக பாலங்களை அமைக்க முடியுமா? என்பதை ஆய்வு செய்வதற்கான வாகனமாக பயன்படுகிறது.

Picture Credit: Armyrecognition

23. பிஎம்பி-2 ஏஏடி

23. பிஎம்பி-2 ஏஏடி

கண்ணி வெடிகளை அகற்றுவது, நிலத்தை சமன் செய்வது உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படும் வாகனம். இந்த வாகனத்தில் உள்ள வின்ச் மூலமாக 8,000 கிலோ எடையை இழுக்க முடியும். நீரிலும், நிலத்திலும் இயக்க முடியும் என்பது மற்றொரு விசேஷம்.

Picture Credit: Imageshack

24. எஃப்வி180 டிராக்டர்

24. எஃப்வி180 டிராக்டர்

போர் முனைகளில் இழுவைப் பணிகள், பாலம் அமைப்பது போன்றவற்றிற்கு பயன்படும் வாகனம். தாக்குதல் மற்றும் தற்காப்புக்காக ஆயுதங்களும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இங்கிலாந்து நாட்டிலிருந்து பெறப்பட்டது.

Picture Credit: Military Today

25. டபிள்யூஇசட்டி-2

25. டபிள்யூஇசட்டி-2

இது மீட்பு கவச வாகனம். பழுதான டாங்கிகளை சரிசெய்வதற்கான உபகரணங்கள், இழுத்து வருவதற்கும் பயன்படும் வாகனம். போலந்து தயாரிப்பு.

Picture Credit:Wikipedia

 26. டபிள்யூஇசட்டி-3எம்

26. டபிள்யூஇசட்டி-3எம்

முந்தைய ஸ்லைடில் பார்த்த வாகனத்தின் மேம்படுத்தப்பட்ட எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல். தற்போது நமது ராணுவத்திடம் இதுபோன்று 300 வாகனங்கள் உள்ளன.

Picture Credit: Military Today

27. விடி-72பி ஏஆர்வி

27. விடி-72பி ஏஆர்வி

போர் முனைகளில் பழுதாகும் வாகனங்களை அங்கேயே பழுது நீக்குவதற்கும், மீட்டு வருவதற்கும் பயன்படும் வாகனம். சோவியத் யூனியனிடமிருந்து பெறப்பட்ட மாடல்.

Picture Credit: AAME

28. பழுது நீக்கும் வாகனம்

28. பழுது நீக்கும் வாகனம்

மேடக்கில் தயாரிக்கப்படும் இந்த ராணுவ வாகனம், இதர ராணுவ வாகனங்களை பழுது நீக்கும் கவச வாகனமாக பயன்படுகிறது. இது பிஎம்பி-2 கவச வாகனத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

Picture Credit: Armyrecognition

29. சிஎல்-70

29. சிஎல்-70

வழுக்குப் பாறைகள், நீர் நிலைகள்,மணல் சார்ந்த பிரதேசங்களில் எளிதான போக்குவரத்தை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட டிரக்.

Picture Credit: DRDO

 30. யுக்திரத் இலகு மீட்பு வாகனம்

30. யுக்திரத் இலகு மீட்பு வாகனம்

மேடக்கில் தயாரிக்கப்படும் இந் வாகனம் போர் முனைகளில் பழுதான வாகனங்களை மீட்டு வருவதற்கு பயன்படும். லேசான பழுது நீக்கும் பணிகளை செய்வதற்கான கருவிகளையும் கொண்டது.

Picture Credit: Wikipedia

31. KrAZ-6322

31. KrAZ-6322

இது 6 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட ஆஃப்ரோடு டிரக். துருப்புகளை போர் முனைக்கு கொண்டு செல்வதற்கு பயன்படும். உக்ரைன் நாட்டு தயாரிப்பு.

Picture Credit: Photobucket

32. மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட்

32. மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட்

ராணுவத்தில் மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் முக்கிய போக்குவரத்து வாகனமாக விளங்குகிறது. குறிப்பாக, அதிகாரிகள் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டிருக்கிறது. இது ஜப்பான் நாட்டு தயாரிப்பு என்பது நீங்கள் அறிந்ததே.

Picture Credit: Armyrecognition

33. சிஸி நஸு

33. சிஸி நஸு

டிராக் வீலில் இயங்கும் இந்த வாகனத்தை எந்தவொரு பிரதேசத்திலும் எளிதாக பயன்படுத்த முடியும். இதில், 17 பேர் வரை பயணிக்க முடியும். இரண்டு பிரிவாக இணைக்கப்பட்டிருக்கிறது. பின்லாந்து நாட்டு தயாரிப்பு.

Picture Credit: Military Today

34. ஹினோ சூப்பர் டால்பின் FZ9J

34. ஹினோ சூப்பர் டால்பின் FZ9J

இது துருப்புகளை கொண்டு செல்வதற்கும், குடி நீர் கொண்டு செல்லும் டேங்கராகவும் பயன்படுகிறது. இது வலிமையான கட்டமைப்பு கொண்ட வாகனம் என்பது இதன் விசேஷம். ஜப்பானை சேர்ந்த ஹினோ மோட்டார்ஸ் தயாரிப்பு.

Photo Credit: Wikimedia

 35. மஹிந்திரா 550 டிஎக்ஸ்பி

35. மஹிந்திரா 550 டிஎக்ஸ்பி

அனைத்து பகுதிகளிலும் இயக்குவதற்கான அம்சங்களை கொண்ட எஸ்யூவி வகை மாடல். இந்த எஸ்யூவியில் இருக்கும் 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் இந்த எஸ்யூவி 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. மேலும், 1,425 கிலோ அளவுக்கு ராணுவ கருவிகள் மற்றும் ஆயுதங்களை பொருத்தக்கூடிய வசதியும் உடையது. 45 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்க் பொருத்தப்பட்டு இருக்கிறது.

picture Credit: Team BHP

36. ஸ்வராஜ் மஸ்தா

36. ஸ்வராஜ் மஸ்தா

நமது நாட்டு ராணுவத்தின் பல விதமான தேவைகளை நிறைவு செய்யும் மினி பஸ் மாடலாகவும், ஆம்புலன்ஸாகவும் பயன்படுகிறது.

Picture Credit: Hollilla

37. மாருதி ஜிப்ஸி

37. மாருதி ஜிப்ஸி

குறுகிய சாலைகள், தற்காலிக பாலங்களின் மீது எளிதாக செல்லும் வடிவம் கொண்டது. அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கிறது.

Picture Credit: Indiandefence

38. விண்டி 505

38. விண்டி 505

இந்திய ராணுவத்தின் முதல் காப்புரிமை பெறப்பட்ட தாக்குதல் வாகனம். விரைவாக சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது. மோசமான மலைச்சாலைகளில் கூட ஆயுதங்களை சுமந்து செல்வதற்கும், உளவு பார்ப்பதற்கும் பயன்படுகிறது.

Picture Credit: Team BHP

39. டாடா எல்பிடிஏ 713டிசி

39. டாடா எல்பிடிஏ 713டிசி

இந்திய ராணுவத்தின் இலகு ரக பன்முக பயன்பாட்டு வாகனம். துருப்புகளை ஏற்றிச் செல்வதற்கும், போர் கருவிகளை எடுத்துச் செல்வதற்கும் பயன்படுகிறது. இதுவரை 15,000 அதிகமான வாகனங்கள் இந்திய ராணுவத்திற்கு டாடா மோட்டார்ஸ் சப்ளை செய்துள்ளது.

Picture Credit: apheritage

 40. அசோக் லேலண்ட் டாப்ச்சி

40. அசோக் லேலண்ட் டாப்ச்சி

அசோக் லேலண்ட் ஸ்டாலியன் குடும்பத்தில் இருந்து ராணுவ பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட மாடல் டாப்ச்சி. இதுவும் ராணுவத்தின் பன்முக பயன்பாட்டு வாகனமாக பயன்படுகிறது. இந்த வாகனம் 5 டன் வரை இழுவை கொண்டது.

Picture Credit: Trucksplanet

41. அசோக் லேலண்ட் ஸ்டாலியான் எம்கே-2 மற்றும் எம்கே4

41. அசோக் லேலண்ட் ஸ்டாலியான் எம்கே-2 மற்றும் எம்கே4

ராணுவத்திற்காக அசோக் லேலண்ட் நிறுவனம் தயாரிக்கும் பன்முக பயன்பாட்டு டிரக்குகள். அனைத்து சாலைகளையும் எதிர்கொள்ளும் விதத்தில், 4 வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் 6 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக கிடைக்கிறது. தளவாட போக்குவரத்தில் இந்திய ராணுவத்தின் முதுகெலும்பாக விளங்குகிறது. இதுவரை 60,000 ஸ்டாலியன் டிரக்குகள் பயன்பாட்டிற்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன.

Picture Credit: Wikipedia

42. அசோக் லேலண்ட் தீயணைப்பு வாகனம்

42. அசோக் லேலண்ட் தீயணைப்பு வாகனம்

இந்திய ராணுவத்திற்காக அசோக் லேலண்ட் தயாரித்து கொடுத்த தீயணைப்பு வாகனம். Crash Fire Tender என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

Picture Credit: Indiamart

43. டாடா எல்பிடிஏ 1615 டிசி

43. டாடா எல்பிடிஏ 1615 டிசி

ராணுவத்திற்காக விசேஷமாக டாடா மோட்டார்ஸ் தயாரித்து கொடுக்கும் டிரக் மாடல். அனைத்து சாலைநிலைகளிலும் எளிதாக இயக்கும் அம்சங்களை கொண்டது.

picture Credit: offroadvehicle

44. தத்ரா டீகன்டாமினேஷன் வெஹிக்கிள்

44. தத்ரா டீகன்டாமினேஷன் வெஹிக்கிள்

ரசாயண தாக்குதல்களுக்கு உள்ளான வாகனங்களை சுத்தப்படுத்துவதற்கான வாகனம். இதற்காக விசேஷ திரவங்கள் நிரப்பப்பட்ட கருவிகள் தத்ரா டிரக்கில் பொருத்தப்பட்டிருக்கிறது.

Picture Credit: DRDO

45. பெம்மல் தத்ரா

45. பெம்மல் தத்ரா

பெம்மல் தத்ராவின் இந்த பன்முக பயன்பாட்டு வாகனம், வீரர்களும், தளவாடங்களையும் எடுத்துச் செல்வதற்கான சிறப்பு கட்டமைப்பு வசதிகளை கொண்டது. இதுபோன்று, இன்னும் ஏராளமான வாகனங்கள் நம் நாட்டு ராணுவத்தில் எந்நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கின்றன.

Picture Credit:firangionindia

Most Read Articles
மேலும்... #ராணுவம் #military
English summary
List Of 45 Vehicles Used By Indian Army.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X