நேவிகேஷன் திரையுடன் புதிய ஹெல்மெட்: விலை ரூ.88,000

வழிகாட்டு தகவல்களை தரும் புதிய ஹெல்மெட்டை ரஷ்யாவை சேர்ந்த எஞ்சினியர்கள் வடிவமைத்துள்ளனர். இந்த ஹெல்மெட்டை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

லைவ்மேப் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய ஹெல்மெட் மூலம் வழிகாட்டு தகவல்கள், வேகம் மற்றும் எங்கு இருக்கிறோம் என்பது உள்ளிட்ட தகவல்களை ஹெல்மெட்டில் இருக்கும் திரை மூலம் பெற முடியும். மேலும், வாய்ஸ் கமென்ட் வசதியும் கொண்ட இந்த ஹெல்மெட் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 ஆன்ட்ராய்டு ஓஎஸ்

ஆன்ட்ராய்டு ஓஎஸ்

இந்த ஹெல்மெட் ஆன்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. லைவ் மேப், இருக்குமிடம் உள்ளிட்ட தகவல்களை பெறுவதற்கு உதவும். மேலும், பாதுகாப்பு கருதி வீடியோ விளையாட்டு, சினிமா உள்ளிட்டவற்றை பார்க்கும் வசதி கொடுக்கப்படவில்லை என வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 சாதனங்கள்

சாதனங்கள்

இந்த ஹெல்மெட்டில் ஒரு மைக்ரோபோன், இரண்டு இயர்போன்கள், வைசர் எனப்படும் கண்ணாடியில் தகவல்களை காண்பிக்கும் சிறிய திரை ஆகியவை உள்ளன.

விசேஷ திரை

விசேஷ திரை

பைக் ஓட்டிக் கொண்டிருக்கும்போது பார்வை திறன் பாதிக்கப்படாத அளவுக்கு தகவல்கள் தெரியும் வகையில், தானாகவே மாறிக் கொள்ளும் விஷேச தொழில்நுட்பம் கொண்ட வைசருடன் இந்த ஹெல்மெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வாய்ஸ் கமென்ட் வசதி

வாய்ஸ் கமென்ட் வசதி

ஆப்பிள் சிரி போன்றே வாய்மொழி உத்தரவுகள் மூலம் தகவல்களை பெறும் வசதியும் இருக்கிறது. எனவே, பயணத்தின்போது இடையூறு இல்லாமல் செல்லாம். ஒருவேளை, ஆபத்து அல்லது விபத்து சமயங்களில் வாய்மொழி உத்தரவின் மூலம் உரியவர்களுக்கு தகவல் தெரிவிக்கமுடியும்.

தானியங்கி திரை

தானியங்கி திரை

லைட் சென்சார் இருப்பதால் பகல் மற்றும் இரவு நேரத்தின் வெளிச்சத்துக்கு தக்கவாறு இதன் திரையின் பின்னணி மாறிக் கொள்ளும் என்பதால் தெளிவாக தகவல்களை பார்த்துக் கொள்ள முடியும்.

 பேட்டரி

பேட்டரி

இந்த ஹெல்மெட்டில் இருக்கும் சாதனங்களை சிறப்பாக இயக்குவதற்காக 3,000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது.

திட்ட நிதி உதவி

திட்ட நிதி உதவி

இந்த லைவ்மேப் ஹெல்மெட் வடிவமைப்பு திட்டத்துக்கு மாஸ்கோ அறிவியல் துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிடமிருந்து நிதி உதவி கிடைத்துள்ளது. எனவே, விரைவில் இந்த ஹெல்மெட் வணிக ரீதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விற்பனை

விற்பனை

மேற்கத்திய நாடுகளில் இந்த ஹெல்மெட்டை முதலில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளனர்.

Most Read Articles
English summary
LiveMap is Russian company developing an advanced helmet for motorcyclists, also named LiveMap. The basic function of this advanced helmet is to provide hands free navigation for bikers.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X