விமானங்களில் இருக்கும் இந்த ரகசிய அறை எதற்காக தெரியுமா? இதை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க

விமானங்களில் ரகசியமாக ஒரு அறை அமைக்கப்பட்டிருக்கும். அது எதற்காக? என்பது குறித்த ஆச்சரியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விமானங்களில் இருக்கும் இந்த ரகசிய அறை எதற்காக தெரியுமா? இதை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க

விமான பயணங்கள் ஒவ்வொருவருக்கும் புதுவிதமான அனுபவத்தை கொடுக்க கூடியவை. விமானங்களில் பயணம் செய்யும்போது, நாம் ஹாயாக ஓய்வு எடுத்து கொண்டும், தூங்கி கொண்டும் வரலாம். அதேசமயம் விமானங்களின் பைலட்கள் மற்றும் பணிப்பெண்களுக்கும் நிச்சயம் ஓய்வு தேவை. குறிப்பாக நீண்ட தூர விமானங்களின் ஊழியர்களால் ஓய்வு இல்லாமல் பணியாற்றவே முடியாது.

விமானங்களில் இருக்கும் இந்த ரகசிய அறை எதற்காக தெரியுமா? இதை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க

ஆனால் விமான ஊழியர்கள் ஓய்வு எடுப்பதை நீங்கள் எப்போதாவது பார்த்துள்ளீர்களா? நிச்சயமாக அதற்கு வாய்ப்பே இருக்க முடியாது. 14-15 மணி நேரம் இடைவிடாமல் பயணம் செய்யும் நீண்ட தூர விமானங்களில் செல்லும் போது, பைலட்கள் மற்றும் விமான பணிப்பெண்களின் சீருடை கொஞ்சம் கூட கசங்காமல் இருப்பதை நீங்கள் கவனித்துள்ளீர்களா?

விமானங்களில் இருக்கும் இந்த ரகசிய அறை எதற்காக தெரியுமா? இதை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க

அதற்காக அவர்கள் ஓய்வு இல்லாமல் பணியாற்றுகிறார்கள் என நினைத்து கொள்ள வேண்டாம். நிச்சயமாக அவர்கள் ஓய்வு எடுப்பார்கள். அது பயணிகளுக்கு தெரியாது என்பதுதான் உண்மை. இதற்கு காரணம் ஒரு ரகசிய அறைதான். ஆம், பைலட்கள் மற்றும் பணிப்பெண்கள் ஓய்வு எடுப்பதற்கு என விமானங்களில் பிரத்யேகமான ரகசிய படுக்கை அறை வழங்கப்பட்டிருக்கும்.

விமானங்களில் இருக்கும் இந்த ரகசிய அறை எதற்காக தெரியுமா? இதை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க

இந்த ரகசிய படுக்கை அறையானது பைலட்கள் மற்றும் விமான ஊழியர்களுக்கு என தனிப்பட்ட முறையில் மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் விமானங்களின் பணிப்பெண்கள் சற்று நெருக்கடியான இடத்தில்தான் ஓய்வு எடுப்பார்கள் என கூறப்படுகிறது. எனினும் பைலட்களுக்கு என தனியாக ஸ்லீப்பிங் கம்பார்ட்மெண்ட் இருக்கும்.

விமானங்களில் இருக்கும் இந்த ரகசிய அறை எதற்காக தெரியுமா? இதை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க

நீண்ட தூர விமானங்களில் தங்களுடைய பாதி நேரத்தை அவர்கள் இங்குதான் செலவிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பைலட்கள் ஓய்வு எடுக்கும் காம்பார்ட்மெண்ட் முதல் வகுப்பிற்கு மேலே காக்பிட்டிற்கு பின்னால் அமைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலான விமானங்களில் பைலட்கள் ஓய்வு அறை இங்குதான் உள்ளது.

விமானங்களில் இருக்கும் இந்த ரகசிய அறை எதற்காக தெரியுமா? இதை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க

எனவேதான் பெரும்பாலான பயணிகளால் அதை ஒருபோதும் பார்க்க முடிந்ததில்லை. படிக்கட்டு அல்லது ஏணியில் ஏறுவதன் மூலமாக பைலட்களால் இந்த ஓய்வு அறைக்கு செல்ல முடியும். இந்த கம்பார்ட்மெண்ட் இரண்டு பிஸ்னஸ் கிளாஸ் இருக்கைகள் மற்றும் பிளாட் பெட்களை உள்ளடக்கியதாக இருக்கும். திரை சீலைகளால் அவை பிரிக்கப்பட்டிருக்கும்.

விமானங்களில் இருக்கும் இந்த ரகசிய அறை எதற்காக தெரியுமா? இதை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க

மேலும் இந்த அறையில் போன் ஒன்றும் வழங்கப்பட்டிருக்கும். ஓய்வு எடுத்து கொண்டிருக்கும் பைலட்டின் உதவி அவசரமாக தேவைப்பட்டால் இதன் மூலமாக அழைப்பார்கள். சில ஓய்வு அறைகளில் டிவி ஸ்க்ரீன் இடம்பெற்றிருக்கும். இது நிச்சயமாக உங்களது வழக்கமான எக்கனாமி கிளாஸ் ஸ்க்ரீனை விட பெரிதாகதான் இருக்கும்.

விமானங்களில் இருக்கும் இந்த ரகசிய அறை எதற்காக தெரியுமா? இதை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க

இன்னும் சில ஓய்வு அறைகள் பாத்ரூம் வசதிகளுடன் காணப்படுகின்றன. அதாவது சொகுசாக இருக்கலாம். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமானது, நெவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்திற்கும், சாங்கி ஏர்போர்ட்டிற்கும் இடையே நான்-ஸ்டாப் விமானத்தை இயக்கி கொண்டுள்ளது. உலகில் நீண்ட தூரம் பயணிக்கும் விமானங்களில் இதுவும் ஒன்று.

விமானங்களில் இருக்கும் இந்த ரகசிய அறை எதற்காக தெரியுமா? இதை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க

இதில், விமான ஊழியர்களுக்கான ஓய்வு அறை மிகவும் லக்ஸரியாக இருக்கும். இங்கு 8 ஊழியர்கள் ஓய்வு எடுக்க முடியும். இதற்காக 5 படுக்கைகள், தூணிகளை தொங்க விடுவதற்கான பகுதி, ரீடிங் விளக்குகள், எண்டர்டெயின்மெண்ட் சிஸ்டம் உள்பட பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் விமானங்கள் மற்றும் விமான நிறுவனங்களை பொறுத்து ஓய்வு அறையின் டிசைன் மாறுபடும்.

விமானங்களில் இருக்கும் இந்த ரகசிய அறை எதற்காக தெரியுமா? இதை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க

ஒரு சில விமான நிறுவனங்கள் தங்கள் பைலட்களுக்கு சொகுசான ஓய்வு அறையை வழங்குகின்றன. ஆனால் சில விமானங்களில் ஓய்வறை அவ்வளவு விசாலமாக இருக்காது. இது ஓய்வு அறைதான் என்றாலும், அவசர நேரங்களில் எப்போது அழைத்தாலும் உடனடியாக பணிக்கு திரும்ப கூடிய நிலையில்தான் விமான ஊழியர்கள் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Secret Bedroom In Long Flights For Pilots. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X