உலகளவில் தொலை தூர இரயில் பயணங்களை குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

Written By:

இரயில் பயணங்கள் தொடர்ந்து கொண்டே இருக்குமானால், அதோடு பயணிக்க ஆசைப்படுபவர்கள் தான் இந்த உலகில் அதிகம். இரயில் பயணத்தில் அப்படி என்ன பிரத்யேகமிருக்கிறது என்பதில் ஒரு பெரிய விளக்கமில்லை. இருந்தாலும், இரயில் பயணங்கள் என்றும் மனதை ஆட்கொள்ளக்கூடிய வல்லமை படைத்தவை.

ஒருவேளை இரயிலில் நீண்ட தூரம் பயணிக்க எண்ணம் கொண்டவராக நீங்கள் இருந்தால், இந்த கட்டுரை உங்களை ஆச்சர்யப்படுத்தும். இதோ கீழே நீங்கள் படிக்கப்போகும் நீளமான இரயில் வழித்தடங்களை வாசித்தவாரே சேர்ந்து பயணியுங்கள்.

1. ட்ரான்ஸ்-சைப்பீரியன் இரயில் பாதை (ரஷ்யா)

1. ட்ரான்ஸ்-சைப்பீரியன் இரயில் பாதை (ரஷ்யா)

உலகிலேயே நீளமான இரயில் பாதைகளுக்கான பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது மாஸ்கோ முதல் வலடிவோஸ்டாக் ஆகிய நகரங்களுக்கு இடையேயான வழித்தடம். ரஷ்யாவில் அமைந்திருக்கும் இந்த இரயில் பாதை, 9259 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது.

6 நாட்கள் பயண காலவரையை கொண்ட இந்த பாதையில் பயணிக்கும் இரயில் பெயர் ரோஸையா. ரோஸையா இரயில் செல்லும் அனைத்து பாதைகளும் பச்சை பசேலென ஒரு பட்டு விரிப்பு போர்த்தியது போன்று இருக்கும்.

உலகின் டாப்-10 தொலை தூர இரயில் பயணங்கள்

1891ல் தொடங்கி 1916ம் ஆண்டு வரை ரோஸையா இரயிலுக்கான பாதை அமைக்கப்பட்டது. ரஷ்யாவிற்கு சொந்தமான இரயில் சேவையாக இருந்தாலும், வட கொரியா, மங்கோலியா, சீனா போன்ற நாடுகளுக்கும் இதில் பயணிக்கலாம்.

ரோஸையா இரயிலில் மாஸ்கோ முதல் வலடிவோஸ்டாக் நீங்கள் பயணிக்க வேண்டுமானால், 500 யூரோக்கள் வரை நீங்கள் செலவு செய்யவேண்டும். இந்திய மதிப்பில் அது ரூ.40,345 ஆகும்.

தி கெனடியன்: டொரண்டோ- வான்கூவர் இரயில் பாதை (கனடா)

தி கெனடியன்: டொரண்டோ- வான்கூவர் இரயில் பாதை (கனடா)

இரயில்கள் இணையதள சேவையை (WiFi) வழங்கமுடியாது, அதற்காத்தான் அதிக தொலைவு கொண்ட இரயில் பாதைகள் அனைத்தும் இயற்கை எழில் சார்ந்த பகுதிகளில் கட்டமைக்கப்படுகின்றன. அப்போது தான் அதனுடனான ஆழத்தை நாம் உணர்வோம்.

உலகின் டாப்-10 தொலை தூர இரயில் பயணங்கள்

இந்த புரிதலை கொண்டு உருவாக்கப்பட்டது தான் தி கெனடியன் இரயில் சேவை. கனடா நாட்டின் டொரண்டோ முதல் வாகூவர் வரை செல்லும் தி கெனடியம் இரயில் பல இயற்கை எழில் மிகுந்த பகுதிகளில் பயணிகளை ஈட்டுசெல்கிறது.

உலகின் டாப்-10 தொலை தூர இரயில் பயணங்கள்

எங்கும் பனிப்பொழிவு கொண்ட கனடாவில் இதை கேட்கவா வேண்டும், 4465 கிலோ மிட்டர் செல்லும் இந்த இரயில் பயணத்தை அனுபவிக்க ஒருமுறை அல்ல , நாம் நூறுமுறை போகவேண்டும். அப்போது தான் பயணத்தின் இன்பமறிவோம்.

ஷாங்காய்- லாஹ்ஸா இரயில் பாதை (சீனா)

ஷாங்காய்- லாஹ்ஸா இரயில் பாதை (சீனா)

உலகின் பொருளாதார தலைநகரமாக உள்ள ஷாங்காய் முதல் திபெத்தின் தன்னாட்சி பகுதியான லாஸாவரை அமைக்கப்பட்டுள்ள வழித்தடம் உலகின் 3வது பெரிய இரயில் பாதையாக உள்ளது. ஆசிய கண்டத்தின் வல்லரசு நாடுகளில் ஒன்றான சீனா இதனை கட்டமைத்துள்ளது.

ஷாங்காய் முதல் லாஹ்ஸா வரை செல்லக்கூடிய வழித்தடத்தில் நாம் சென்றால் சீனாவின் அனைத்து கலாச்சாரங்களையும் நாம் கற்றுவிட முடியும். சீனாவின் முந்தைய தலைநகரமான சீயான் நகரம், மலை பாதை என பயணித்து இறுதியாக இந்த இரயில் திபெத்தை அடையும்.

உலகின் டாப்-10 தொலை தூர இரயில் பயணங்கள்

4372 கிலோ மீட்டர் தூரம் செல்லும் இந்த இரயிலில் பயணிக்க ஆகும் செலவு குறைந்தபட்ச செலவு ரூ.3300, 2ம் வகுப்பு, முதலாம் வகுப்பு என நாம் நாட்டில் உள்ள பிரிவு முறைகளும் இந்த ரயிலில் உள்ளன. அதிகபட்ச செலவாக முதல் வகுப்பில் பயணிக்க ரூ.10,600 ஆகும்.

கலிஃபோர்னியா செஃபையர்: எமரிவில்லெ (சான் ஃபிரான்ஸிஸ்கோ)- சிகாககோ

கலிஃபோர்னியா செஃபையர்: எமரிவில்லெ (சான் ஃபிரான்ஸிஸ்கோ)- சிகாககோ

அமெரிக்காவில் இருக்ககூடிய ரயில் போக்குவரத்து பாதைகளிலேயே கண்ணுக்கினிய காட்சிகளை பாரக்கக்கூடிய வாய்ப்பை உருவாக்கி தருகிறது. உலகளவில் அமெரிக்காவின் அடையாளமாகக் இருக்கக்கூடிய கொலரெடோ நதி அதனுடனான மலை வழிப்பாதை ஆகியவற்றில் பயணிக்கிறது.

உலகின் டாப்-10 தொலை தூர இரயில் பயணங்கள்

கலிஃபோர்னியாவில் பெரும்பான்மையான இடங்களை காட்டிவிடக்கூடிய இந்த ரயில் பாதை, நெவடா பாலைவனத்தின் வழியாகவும் பயணிக்கிறது. இயற்கையின் மொத்த வடிவங்களையும் நாம் கலிஃபோர்னியா செஃபையர் இரயில் பயணித்தால் பார்க்கலாம்.

இந்திய பசிஃபிக்: சிட்னி- பெர்த் இரயில் பாதை (ஆஸ்திரேலியா)

இந்திய பசிஃபிக்: சிட்னி- பெர்த் இரயில் பாதை (ஆஸ்திரேலியா)

4351 கிலோ மீட்டர் தொலை தூரம் செல்லக்கூடிய இந்தியன் பசிஃபிக் இரயில் பாதை உலகளவில் பெரிய ரயில் வழிப்பாதைக்கான பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. சிட்னி முதல் பெர்த் நகரத்திற்கு இதில் செல்ல 65 மணி நேரங்கள் ஆகும்.

உலகின் டாப்-10 தொலை தூர இரயில் பயணங்கள்

65 மணி நேர பயணத்திற்கு வசதிகளை பொருத்தவரை கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. காடும் காடு சார்ந்த இடங்கள், நீல மலையின் நீர்வீழ்ச்சி மற்றும் முந்திரிக்காடு என இயற்கையின் புதிய வடிவத்தை நீங்கள் இந்த ரயிலில் பயணித்தால் பார்க்கலாம்.

விவேக் விரைவு வண்டி: திப்ரூகார்- கன்யாகுமாரி (இந்தியா)

விவேக் விரைவு வண்டி: திப்ரூகார்- கன்யாகுமாரி (இந்தியா)

உலகிலேயே முன்னணி இரயில் சேவையை கொண்டுள்ள நமது இந்தியா இந்த பட்டியலில் இடம்பெறாமல் இருக்குமா என்ன? 4237 கிலோ மீட்டர் தூரம் கொண்ட விவேக் எக்ஸ்பிரஸ் இரயில் சேவை இந்தியளவில் முதலிடத்திலும், உலகளவில் அதிக தொலைவு கொண்ட இரயில் பாதைகளில் 6வது இடத்தில் உள்ளது.

உலகின் டாப்-10 தொலை தூர இரயில் பயணங்கள்

அசாமின் திப்ரூகார்க் பகுதியில் இருந்து தென்கோடியாக கன்யாகுமரி பகுதிக்கு வந்து சேர கிட்டத்தட்ட 82 மணி நேரமாகும். இதற்கிடையில் 57 நிலையங்களில் விவேக் விரைவு வண்டி நிற்கும். மேலும் குறைந்த அளவிலான கட்டணத்தை வசூலிக்கக்கூடிய இரயில் சேவை என்ற பெயரை இது பெற்றுள்ளது.

பாரீஸ்-மாஸ்கோ எக்ஸ்பிரஸ்: பாரீஸ்(ஃபிரான்ஸ்)- மாஸ்கோ(ரஷ்யா)

பாரீஸ்-மாஸ்கோ எக்ஸ்பிரஸ்: பாரீஸ்(ஃபிரான்ஸ்)- மாஸ்கோ(ரஷ்யா)

ஐரோப்பிய நாடுகளில் இருக்கக்கூடிய இரயில் போக்குவரத்தில் பாரீஸ் முதல் ரஷ்யாவின் மாஸ்கோ இடையிலான இரயில் பாதை, உலகளவிலான நீளமான இரயில்வே வழித்தடத்தில் 7வது இடத்தை பெற்றுள்ளது. 3215 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் பாரீஸ்-மாஸ்கோ எக்ஸ்பிரஸில் பயணிக்க விசா எடுக்க வேண்டும்.

உலகின் டாப்-10 தொலை தூர இரயில் பயணங்கள்

ப்ரூஸ்லஸ், கோலொன்ஞ், பெர்லின், வார்ஷா மற்றும் மின்ஸ்க் போன்ற ஐரோப்பாவின் முக்கிய நகரங்களை பாரீஸ்-மாஸ்கோ எக்ஸ்பிரஸ் கடந்து செல்லும். வசதிகளுக்கு ஏற்றவாறு ரூ. 11980 ரூபாயிலிருந்து ரூ.44,507 வரை கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

குறிப்பாக ஒரு நாட்டிலிருந்து மற்றோரு நாட்டிற்கு பாரீஸ்-மாஸ்கோ இரயில் கடந்துசெல்வதல் விஸா எடுப்பதும் இதில் பயணிக்க அவசியத் தேவையாகி விடுகிறது.

தி கான்: டார்வின் - அடிலேய்டு (ஆஸ்திரேலியா)

தி கான்: டார்வின் - அடிலேய்டு (ஆஸ்திரேலியா)

ஆஸ்திரேலியாவின் இரண்டு முக்கிய நகரங்களுக்கு மத்தியில் போகும் தி கான் இரயில் சேவை, அந்த நாட்டின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்று. அடிலேய்டு மற்றும் டார்வின் ஆகிய நகரங்கள் ஆஸ்திரேலியாவின் இருதயமாக பார்க்கப்படுகிறது.

உலகின் டாப்-10 தொலை தூர இரயில் பயணங்கள்

டார்வினிலிருந்து புறப்படும் தி கான் ரயில் 47 மணி நேரம், 2979 கிலோ மீட்டர் பயணித்து அடிலேய்டு நகரத்தை அடையும். இரண்டு இரவுகள் பயணிக்கக்கூடிய இந்த இரயிலில் வசதிகளுக்கு ஏற்றவாறு கட்டணம் பெறப்படுகிறது.

மேலும் ஆஸ்திரேலியாவின் மற்ற முக்கிய ஆலிஸ், மோனொலித், உலூரு போன்ற நகரங்களையும் தி கான் இரயிலில் பயணித்தால் நீங்கள் பார்க்கலாம்.

ஈஸ்டர்ன் ஓரியண்டல் எக்ஸ்பிரஸ்: பாங்காங் (தாய்லாந்து)- சிங்கப்பூர்

ஈஸ்டர்ன் ஓரியண்டல் எக்ஸ்பிரஸ்: பாங்காங் (தாய்லாந்து)- சிங்கப்பூர்

ஆசியாவில் இருவேறு நாடுகளுக்கு இடையே ஓடும் ரயில்களில் மிக முக்கியமான ஒன்று ஈஸ்டர்ன் ஓரியண்டல் எக்ஸ்பிரஸ். 2180 கிலோ மீட்டருக்கு இடையில் ஓடும் இந்த ரயில் தாய்லாந்து தலைநகரம் பாங்காங்கிலிருந்து, சிங்கப்பூர் நாட்டிற்காக இயக்கப்படுகிறது.

உலகின் டாப்-10 தொலை தூர இரயில் பயணங்கள்

மேலும் தாய்லாந்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் மலேசிய தலைநகர் கோலம்பூர் நகரத்திற்கும் செல்லும். தினமும் இயக்கப்பட்டு வரும் இந்த ரயில் பாங்காங்கிலிருந்து, சிங்கப்பூர் சென்றடையை மூன்று பகல், மூன்று இரவு காலவரையை எடுத்துக்கொள்ளும்.

ப்ளூ டிரெய்ன்: ப்ரீடோரியா- கேப் டவுன் (தென் ஆஃப்ரிக்கா)

ப்ளூ டிரெய்ன்: ப்ரீடோரியா- கேப் டவுன் (தென் ஆஃப்ரிக்கா)

தென் ஆஃப்ரிக்காவின் பெருமைமிகு அடையாளமாக திகழும் போக்குவரத்து சேவை தான் ப்ளு டிரெய்ன். ப்ரீடோரியா முதல் கேப் டவுன் நகரங்களுக்கு இடையே பயணிக்கும் இந்த இரயில், அந்நாட்டின் தொலைதூரம் செல்லும் போக்குவரத்திற்கான சேவையில் முதலிடத்தில் உள்ளது.

உலகின் டாப்-10 தொலை தூர இரயில் பயணங்கள்

ப்ரீடோரியாவிலிருந்து கேப் டவுனிற்கு ப்ளூ டிரெயினில் செல்ல 27 மணிநேரமாகும். 1599 கிலொ மீட்டர் தூரம் வரை செல்லும் இந்த இரயிலில் பயணிக்க தேவைகளை பொருத்து கட்டணங்கள் வசூலீக்கப்படுகின்றன.

மேலும் இந்த நகரங்களுக்கு இடையில் செல்லும்போது மட்ஜியெஸ்ஃபாந்தின், கிம்பெர்லி போன்ற தென் ஆஃப்ரிக்காவின் முக்கிய நகரங்களுக்கு நாம் செல்லலாம்.

உலகின் டாப்-10 தொலை தூர இரயில் பயணங்கள்

உலகின் முக்கிய மற்றும் தொலைதூர இரயில் சேவைகளில் குறித்து பல அரிய தகவல்களை பார்த்தோ. இரயில் பயணங்கள் ஒரு போக்குவரத்து சாதனையாக மட்டுமில்லாமல், பலதரப்பட்ட மக்கள், அவர்களின் கலாச்சாரங்கள், நிகழ்வுகள் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் பாலமாகவும் இருக்கிறது.

அதை பல உலக நாடுகள் புரிந்துகொண்டுதான் வேவ்வேறு முறையில் ஆட்சி செய்யும் நாடுகளாக இருந்தாலும் கூட, மக்களுக்கான தொடர்புகளை மேம்படுத்துவதில் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளில் இறங்கி வருகிறது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
world's largest train journey in the world. Click here, it might suprirse you...
Story first published: Saturday, April 15, 2017, 8:30 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos