ரூபாய் நோட்டுக்களால் காரை அலங்கரித்து கிறுக்குத்தனம் செய்து சிக்கிய இளைஞர்..!

Written By: Staff

உலகம் முழுவதும் இருக்கக்கூடிய காதலர்களுக்கு இன்று ஒரு நாள் மிகவும் முக்கியமான நாளாக இருக்கும் ஏனெனில் இன்று தான் உலகக் காதலர்கள் தினம். ஆண்டுதோறும் பிப்ரவரி 14ல் 'காதலர் தினம்' கொண்டாடப்படுகிறது.

காதலர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தும் வகையில் வாழ்த்து அட்டை, ரோஜா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவது வழக்கம். வெளிநாடுகளைப்போல், இந்தியாவிலும் கடந்த சில ஆண்டுகளாக காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

 காதலியை கவர்வதற்காக 2,000 ரூபாய் நோட்டுகளால் காரை அலங்கரித்த வாலிபர்!

காதலர்கள் மட்டுமல்லாது, காதலித்து திருமண பந்தத்தில் இணைந்தோறும், காதலிக்காமலே திருமணமான இளம் தம்பதியரும் தங்களது துணையுடன் காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்கின்றனர்.

 காதலியை கவர்வதற்காக 2,000 ரூபாய் நோட்டுகளால் காரை அலங்கரித்த வாலிபர்!

இந்நிலையில், மற்றொரு ரகத்தினரும் இருக்கின்றனர், அவர்கள் ‘ ஒருதலைக் காதலர்கள்', தங்களின் காதலை வெளிப்படுத்தாமலும் அல்லது வெளிப்படுத்திவிட்டு காதலர்/காதலியின் முடிவுக்காக காத்திருப்பவர்கள்.

 காதலியை கவர்வதற்காக 2,000 ரூபாய் நோட்டுகளால் காரை அலங்கரித்த வாலிபர்!

இவர்கள் தங்களின் காதலை வெளிப்படுத்த பல்வேறு யுக்திகளையும், இன்னபிற வேலைகளிலும் ஈடுபட்டு எப்படியாயினும் அவர்களின் விருப்பத்தை ஈர்க்க முற்படுவர்.

இப்படிப்பட்ட ஒரு முயற்சியால் தற்போது ஒருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அப்படி அவர் என்ன தான் செய்தார்?

 காதலியை கவர்வதற்காக 2,000 ரூபாய் நோட்டுகளால் காரை அலங்கரித்த வாலிபர்!

மும்பையைச் சேர்ந்த இளைஞர் தன் காதலை தனது காதலிக்கு வெளிப்படுத்த மிகவும் நூதன முறையை கையாண்டுள்ளார், தனது ஹோண்டா சிட்டி காரை , புதிதாக அறிமுகமான 2000 ரூபாய் தாள்களைக் கொண்டு அலங்கரித்துள்ளார். காரின் முகப்பு கண்ணாடியை தவிர்த்து முழு காரின் மீதும் ரூபாய் தாள்களாலேயே ஒட்டியுள்ளார். காரின் பேனட்டில் காதல் தின வாழ்த்துச் செய்தி ஒன்றினையும் தீட்டியுள்ளார் அவர்.

 காதலியை கவர்வதற்காக 2,000 ரூபாய் நோட்டுகளால் காரை அலங்கரித்த வாலிபர்!

ரூபாய் தாள்களால் அலங்கரிக்கப்பட்ட தனது காரை தனது காதலியிடம் காண்பிக்க எடுத்துச் சென்ற போது தான் காவல்துறையால் காரும் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த வாலிபரும் கைதாகியுள்ளார்.

எனினும், இது தன் மேல் தனது காதலி பரிதாபப்பட அந்த வாலிபர் மேற்கொண்ட செயல் எனவும் கூறப்படுகிறது.

Source: Amarujala

புதிய ஹோண்டா சிட்டி காரின் படங்கள்!

இந்தியாவில் இன்று விற்பனைக்கு வந்திருக்கும் மேம்படுத்தப்பட்ட ஹோண்டா சிட்டி காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Lover Decorates Car With Rs 2000 Notes As A Gift For His Girlfriend.
Please Wait while comments are loading...

Latest Photos