பெட்ரோல் வாங்க அண்டை மாநிலத்திற்கு படையெடுக்கும் மக்கள்... எவ்வளவு ரூபாய் குறைவு என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க

பெட்ரோல், டீசல் மிகவும் குறைவான விலையில் கிடைப்பதால் அண்டை மாநிலத்திற்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோல் வாங்க அண்டை மாநிலத்திற்கு படையெடுக்கும் மக்கள்... எவ்வளவு ரூபாய் குறைவு என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இது வாகன உரிமையாளர்களுக்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. அத்துடன் உத்தர பிரதேச மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களின் எல்லையில் உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கும் இந்த பிரச்னை பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது.

பெட்ரோல் வாங்க அண்டை மாநிலத்திற்கு படையெடுக்கும் மக்கள்... எவ்வளவு ரூபாய் குறைவு என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க

உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய இரண்டும் அருகருகே உள்ள மாநிலங்கள் ஆகும். மத்திய பிரதேசத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாயை கடந்து விட்டது. ஆனால் உத்தர பிரதேசத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலின் 100 ரூபாய்க்கும் குறைவாகவே உள்ளது. உத்தர பிரதேசத்தை விட மத்திய பிரதேசத்தில் அதிக வரி விதிப்பதால், அங்கு பெட்ரோல் விலை மிகவும் அதிகமாக உள்ளது.

பெட்ரோல் வாங்க அண்டை மாநிலத்திற்கு படையெடுக்கும் மக்கள்... எவ்வளவு ரூபாய் குறைவு என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க

இந்த பிரச்னை காரணமாக எல்லையோர பகுதிகளில் வசிப்பவர்கள், அண்டை மாநிலத்திற்கு சென்று எரிபொருள் வாங்குவது நடைபெறுகிறது. உதாரணத்திற்கு மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மற்றும் உத்தர பிரதேச மாநிலம் மஹோபா ஆகிய பகுதிகளில் பெட்ரோல் விலையை பார்க்கலாம். கடந்த ஞாயிற்று கிழமை உத்தர பிரதேச மாநிலம் மஹோபா பகுதியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 93.48 ரூபாய்க்கு விற்பனையானது.

பெட்ரோல் வாங்க அண்டை மாநிலத்திற்கு படையெடுக்கும் மக்கள்... எவ்வளவு ரூபாய் குறைவு என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க

ஆனால் அன்றைய தினம் மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 106.3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த இரண்டு பகுதிகளிலும் விற்பனை செய்யப்படும் பெட்ரோலின் விலையில் சுமார் 13 ரூபாய் என மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. எனவே மத்திய பிரதேச மக்கள் உத்தர பிரதேச மாநில எல்லைக்குள் சென்று பெட்ரோல் நிரப்புகின்றனர்.

பெட்ரோல் வாங்க அண்டை மாநிலத்திற்கு படையெடுக்கும் மக்கள்... எவ்வளவு ரூபாய் குறைவு என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க

இதுகுறித்து மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில், ''நான் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவன். ஆனால் உத்தர பிரதேச மாநிலம் மஹோபா எனது வீட்டில் இருந்து சுமாராக 15 கிலோ மீட்டர் தொலைவில்தான் உள்ளது. எனவே எனது வாகனத்தில் ஒரு முறை அங்கு சென்றால், டேங்க்கை முழுமையாக நிரப்பி விடுவேன்.

பெட்ரோல் வாங்க அண்டை மாநிலத்திற்கு படையெடுக்கும் மக்கள்... எவ்வளவு ரூபாய் குறைவு என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க

இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் என்னால் பெரிய தொகையை சேமிக்க முடிகிறது'' என்றார். மேலும் மத்திய பிரதேச மாநிலத்தின் மைய பகுதியில் வசிப்பவர்களுக்கு, எல்லையோரத்தில் வசிக்கும் எங்கள் மீது பொறாமை இருப்பதாகவும் அவர் நகைச்சுவையாக கூறினார். ஆனால் மத்திய பிரதேச மாநில எல்லைக்குள் பெட்ரோல் பங்க் வைத்திருப்பவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெட்ரோல் வாங்க அண்டை மாநிலத்திற்கு படையெடுக்கும் மக்கள்... எவ்வளவு ரூபாய் குறைவு என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ''நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். கடந்த சில ஆண்டுகளில், விற்பனை அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. தற்போது விற்பனை 50 சதவீதத்திற்கும் மேல் சரிந்து விட்டது'' என்றனர். மத்திய பிரதேச மாநிலத்தில் விற்பனையாகும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்கும் அம்மாநில அரசு 27.75 ரூபாயை வரியாக வசூல் செய்கிறது.

பெட்ரோல் வாங்க அண்டை மாநிலத்திற்கு படையெடுக்கும் மக்கள்... எவ்வளவு ரூபாய் குறைவு என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க

அதே நேரத்தில் அம்மாநில அரசு ஒவ்வொரு லிட்டர் டீசலுக்கும் 18.75 ரூபாயை வரியாக வசூலிக்கிறது. இது அதிகப்படியான வரி எனக்கூறும் வாகன ஓட்டிகளும் மற்றும், பெட்ரோல் பங்க் உரிமையாளர்களும் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Madhya Pradesh People Near Border Head To UP For Cheaper Petrol, Diesel. Read in Tamil
Story first published: Wednesday, June 9, 2021, 17:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X