ரொம்ப ரேர்... டோனி சொந்தமாக்கிய அபூர்வமான காரின் மர்மம்... பிரம்மிப்பில் வாயடைத்து போன ரசிகர்கள்...

மிகவும் அரிதான விண்டேஜ் கார் ஒன்றை தல டோனி தற்போது சொந்தமாக்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரொம்ப ரேர்... டோனி சொந்தமாக்கிய அபூர்வமான காரின் மர்மம்... பிரம்மிப்பில் வாயடைத்து போன ரசிகர்கள்...

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் டோனி, சர்வதேச போட்டிகளில் இருந்து ஒரு சில நாட்களுக்கு முன்பு திடீரென ஓய்வை அறிவித்தார். இந்திய கிரிக்கெட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்ற டோனியின் ஓய்வு, அவரது ரசிகர்களை கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளது. எனினும் ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாடுவார் என்பது கொஞ்சம் ஆறுதல்.

ரொம்ப ரேர்... டோனி சொந்தமாக்கிய அபூர்வமான காரின் மர்மம்... பிரம்மிப்பில் வாயடைத்து போன ரசிகர்கள்...

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தல டோனி விடைபெற்றிருந்தாலும் கூட, அவரது 'கராஜ்' ஸ்கோர் தொடர்ந்து அதிகமாகி கொண்டேதான் உள்ளது. கிரிக்கெட்டிற்கு நிகராக கார் மற்றும் பைக்குகளையும் டோனி அதிகம் நேசிக்க கூடியவர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். சென்னை மற்றும் ராஞ்சி சாலைகளில், கார் மற்றும் பைக்குகளில் டோனி வலம் வந்ததை நாம் பல முறை பார்த்துள்ளோம்.

ரொம்ப ரேர்... டோனி சொந்தமாக்கிய அபூர்வமான காரின் மர்மம்... பிரம்மிப்பில் வாயடைத்து போன ரசிகர்கள்...

மிகவும் அரிதான விண்டேஜ் கார்களையும், இக்காலத்திற்கு ஏற்ற அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்ட கார்களையும் டோனி சேகரித்து வைத்துள்ளார். ஹம்மர் ஹெச்2, ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் ஷேடோ சீரிஸ் 1, மிட்சுபிஷி பஜீரோ எஸ்எஃப்எக்ஸ், ஆடி க்யூ7, லேண்ட்ரோவர் ஃப்ரீலேண்டர் 2 மற்றும் ஃபெராரி 599 ஜிடிஓ ஆகியவை டோனியிடம் உள்ள கார்களில் மிகவும் முக்கியமானவை.

ரொம்ப ரேர்... டோனி சொந்தமாக்கிய அபூர்வமான காரின் மர்மம்... பிரம்மிப்பில் வாயடைத்து போன ரசிகர்கள்...

இவை தவிர, கிராண்ட் செரோக்கி ட்ராக்ஹாக், மெர்சிடிஸ்-பென்ஸ் எஃப்எல்இ மற்றும் நிஸான் 4டபிள்யூ73 ஆகிய கார்களையும் டோனி சொந்தமாக வைத்துள்ளார். ஏற்கனவே குறிப்பிட்டதை போல் டோனியின் வீட்டில் இரு சக்கர அசூரர்களுக்கும் பஞ்சமில்லை. ஏராளமான இரு சக்கர வாகனங்களையும் டோனி சொந்தமாக வைத்துள்ளார்.

ரொம்ப ரேர்... டோனி சொந்தமாக்கிய அபூர்வமான காரின் மர்மம்... பிரம்மிப்பில் வாயடைத்து போன ரசிகர்கள்...

இதில், கவாஸாகி நின்ஜா ஹெச்2, கவாஸாகி நின்ஜா இஸட்எக்ஸ்14ஆர் மற்றும் பிரபலமான கான்ஃபெடரேட் ஹெல்கேட் எக்ஸ்132 ஆகிய இரு சக்கர வாகனங்கள் மிகவும் முக்கியமானவை. தல டோனி தொடர்ச்சியாக பல்வேறு புதிய வாகனங்களை வாங்கி கொண்டேதான் இருக்கிறார். இந்த வகையில் தற்போது புதிய விண்டேஜ் கார் ஒன்று அவரது சேகரிப்பில் இணைந்துள்ளது.

ரொம்ப ரேர்... டோனி சொந்தமாக்கிய அபூர்வமான காரின் மர்மம்... பிரம்மிப்பில் வாயடைத்து போன ரசிகர்கள்...

மஹேந்திர சிங் டோனியின் மனைவியான சாக்ஸி, இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் பகிர்ந்திருந்த புகைப்படம் மற்றும் காணொளி மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது. போன்டியாக் ஃபயர்பேர்டு (Pontiac Firebird) கார்தான் டோனி வீட்டின் புதுவரவு. இது மிகவும் அரிய விண்டேஜ் கார் ஆகும். இந்திய சாலைகளில் இந்த காரை பார்ப்பது என்பது மிகவும் அபூர்வமான ஒரு விஷயம்.

ரொம்ப ரேர்... டோனி சொந்தமாக்கிய அபூர்வமான காரின் மர்மம்... பிரம்மிப்பில் வாயடைத்து போன ரசிகர்கள்...

பொதுவாக தல டோனி ஒரு காரை வாங்கினால், அதனை பொது சாலைகளில் யாருக்கும் தெரியாமல் ஓட்டி வருவதை அவ்வப்போது வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் இந்த கார் பொது சாலைக்கு வருமா? என்பது கொஞ்சம் சந்தேகம்தான். ஏனெனில் இந்த கார் இடது கை ஓட்டுதல் (Left Hand Drive) முறையை கொண்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரொம்ப ரேர்... டோனி சொந்தமாக்கிய அபூர்வமான காரின் மர்மம்... பிரம்மிப்பில் வாயடைத்து போன ரசிகர்கள்...

ஆனால் இந்தியாவில் வலது கை ஓட்டுதல் (Right Hand Drive) முறைதான் அமலில் உள்ளது. எனினும் இந்த காரின் விலை எவ்வளவு? என்பது மர்மமாக உள்ளது. ஆனால் இந்த காரின் விலை 68.3 லட்ச ரூபாயாக இருக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இதே மாடல் கார், இந்த தொகைக்குதான் ஏலம் விடப்பட்டது.

ரொம்ப ரேர்... டோனி சொந்தமாக்கிய அபூர்வமான காரின் மர்மம்... பிரம்மிப்பில் வாயடைத்து போன ரசிகர்கள்...

அதை வைத்துதான் டோனி புதிதாக வாங்கியுள்ள காரின் விலையும் இதுவாக இருக்க கூடும் என கணிப்புகள் வெளியாகியுள்ளன. மற்றபடி இந்த காரின் விலை எவ்வளவு? என்பது தெளிவாக தெரியவில்லை. இப்படி மிகவும் அரிதான வாகனங்களை டோனி வாங்கி குவிப்பது அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் காலங்களில் இன்னும் அரிய வாகனங்களை அவர் வாங்கலாம்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mahendra Singh Dhoni Buys Rare Vintage Car. Read in Tamil
Story first published: Monday, August 17, 2020, 14:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X