டோணியின் கராஜில் இருக்கும் டாப் 10 கார்கள் மற்றும் பைக்குகள்- சிறப்புத் தொகுப்பு!

Posted By:

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோணியின் மோட்டார் உலகம் பற்றிய அவ்வப்போது செய்திகள் தொடர்ந்து வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம்.  விதவிதமான மோட்டார்சைக்கிள்களாலும், கார்களாலும் அவரது வீட்டு கார் கராஜ் நிரம்பி வழிகிறது.

அவரது மோட்டார்சைக்கிள் ஆர்வத்தையும், கார் ஆர்வத்தையும் பற்றி ஏற்கனவே பல செய்திகளை வழங்கியிருக்கிறோம். இந்த நிலையில், அவர் அடிக்கடி பயன்படுத்தும் அவருக்கு விருப்பமான டாப் 10 கார் மாடல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

[குறிப்பு: கடைசி ஸ்லைடில் டோணியின் மோட்டார் உலகம்!]

10. ஹம்மர் எச்2

10. ஹம்மர் எச்2

உலகின் பெரும் பணக்காரர்கள் விரும்பும் எஸ்யூவி வாகனங்களில் ஒன்று. ராணுவ பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட ஹம்வீ எஸ்யூவியின் அடிப்படையில் வடிவைமக்கப்பட்ட தனி நபர் மார்க்கெட்டிற்கான மாடல் இது. டோணியின் விருப்பத் தேர்வுகளில் முதன்மையான இடம் ஹம்மருக்கு உண்டு. ஏனெனில், இந்த தோற்றம் டோணி என்றில்லை, அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும். இந்த எஸ்யூவியில் 393 பிஎச்பி பவரை அளிக்கும் 6.2 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது மூன்று டன் எடை கொண்டது.

09. ஃபெராரி 599 ஜிடிஓ

09. ஃபெராரி 599 ஜிடிஓ

டோணியிடம் ஃபெராரி 599 ஜிடிஓ ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றும் உள்ளது. இந்த காரில் 661 பிஎச்பி பவரையும், 620 என்எம் டார்க்கையும் வழங்கும் 6.0 லிட்டர் வி12 எஞ்சின் உள்ளது. இந்த அதிசக்திவாய்ந்த காரை ஓய்வுநேரங்களில் பயன்படுத்துகிறார்.

08. டொயோட்டா கரொல்லா

08. டொயோட்டா கரொல்லா

தினசரி பயன்பாட்டுக்கும், குடும்பத்தினருடன் செல்லும்போது அதிகமாக டொயோட்டா கரொல்லாவை பயன்படுத்துவார்.

07. மாருதி சுஸுகி எஸ்எக்ஸ் 4

07. மாருதி சுஸுகி எஸ்எக்ஸ் 4

செடான் கார்களிலேயே 190மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக இருந்த மாருதி எஸ்எக்ஸ்4 காரும் டோணியிடம் இருக்கிறது. மாருதி பிராண்டு மகிமையை பார்ப்பதற்காக மஹி வாங்கிய மாடல் இது என்று பெருமை கூறுகின்றனர்.

06. மிட்சுபிஷி அவுட்லேண்டர்

06. மிட்சுபிஷி அவுட்லேண்டர்

டோணி ஒரு எஸ்யூவி பிரியர் என்பது இந்த செய்தியை படிக்கும்போதே உணரலாம். அவரது கராஜில் எஸ்யூவி வகை மாடல்களின் ஆக்கிரமிப்பு அதிகம். அந்த வகையில், மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி ஒன்றும் டோணியிடம் உள்ளது. இந்த எஸ்யூவியில் 170 பிஎச்பி பவரையும், 226 என்எம் டார்க்கையும் வழங்கும் 2.4 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. சிறப்பான ஆஃப்ரோடு எஸ்யூவி மாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

05. மிட்சுபிஷி பஜெரோ எஸ்எஃப்எக்ஸ்

05. மிட்சுபிஷி பஜெரோ எஸ்எஃப்எக்ஸ்

எஸ்யூவி வகை வாகனங்களுக்கான சாமுத்ரிகா லட்சணம் பொருத்திய மாடல். இன்றளவும் இந்த எஸ்யூவிக்கு ரசிகர்கள் உண்டு. இந்த எஸ்யூவியில் 120 பிஎச்பி பவரையும், 280 என்எம் டார்க்கையும் வழங்கும் 2.8 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதற்கு மாற்றாக தற்போது பஜெரோ ஸ்போர்ட் மாடல் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. இன்றைக்கும் பழைய கார் மார்க்கெட்டில் பஜெரோ எஸ்யூவிக்கு நல்ல மரியாதை இருக்கிறது.

04. ஆடி க்யூ7

04. ஆடி க்யூ7

இந்திய பணக்காரர்கள் அனைவருக்கும் ஆடி க்யூ7 இருப்பதை கவுரவமாக கருதுகின்றனர். அந்த வகையில், டோணியிடம் ஒன்று இருப்பதில் ஆச்சரியமில்லை. வாடிக்கையாளர்கள் விரும்பும் சொகுசு அம்சங்களை கச்சிதமாக நிறைவேற்றும் இந்த சொகுசு எஸ்யூவியை அடிக்கடி பயன்படுத்துவதில் ஆனந்தப்படுகிறார் டோணி.

03. ஜிஎம்சி சியாரா

03. ஜிஎம்சி சியாரா

அமெரிக்காவின் பிரபலமான ஜிஎம்சி சியாரா பிக்கப் டிரக் ஒன்றையும் இறக்குமதி செய்து வாங்கி வைத்திருக்கிறார் டோணி. இந்த எஸ்யூவியில் இருக்கும் டீசல் எஞ்சின் 1,036 என்எம் டார்க்கையும் வழங்கும். ஜிஎம்சி சியாராவில் இருக்கும் 6.6 லிட்டர் வி8 எஞ்சின் 397 பிஎச்பி பவரை அளிக்கும்.

 02. லேண்ட்ரோவர் ஃப்ரீலேண்டர் 2

02. லேண்ட்ரோவர் ஃப்ரீலேண்டர் 2

லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ஆரம்ப நிலை மாடலான ஃப்ரீலேண்டர் 2 எஸ்யூவியும் டோணி கராஜில் இடம்பெற்றிருக்கிறது. இந்த எஸ்யூவியில் 148 பிஎச்பி பவரையும், 420 என்எம் டார்க்கையும் வழங்கும் 2.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

01. கஸ்டமைஸ் ஸ்கார்ப்பியோ

01. கஸ்டமைஸ் ஸ்கார்ப்பியோ

இந்தியாவின் மிகவும் பிரபலமான எஸ்யூவி மாடலான மஹிந்திரா ஸ்கார்ப்பியோவும் டோணி கார் கராஜை அலங்கரிக்கிறது. அலங்கரிக்கிறது என்று கூறுவதற்கு கார்ணம், டோணி தனது ஸ்கார்ப்பியோவை கஸ்டமைஸ் செய்து வாங்கினார். டோணியின் கஸ்டமைஸ் ஸ்கார்ப்பியோவின் படங்கள், கூடுதல் தகவல்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

விருப்பமான மாடல்

விருப்பமான மாடல்

2007ம் ஆண்டு இந்த கஸ்டமைஸ் ஸ்கார்ப்பியோவை டோணி வாங்கினார்.

கூரை இல்லை

கூரை இல்லை

டோணியிடம் உள்ள ஸ்கார்ப்பியோ கூரை இல்லாமல் ரோல்கேஜ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

கேப்டன் சீட்ஸ்

கேப்டன் சீட்ஸ்

ஸ்கார்ப்பியோவின் 7 இருக்கைகளை எடுத்துவிட்டு 4 கேப்டன் இருக்கைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஸ்கார்ப்பியோ மீதான காதல்

ஸ்கார்ப்பியோ மீதான காதல்

ஸ்கார்ப்பியோ மீதான காதலை வெளிப்படுத்தும் விதமாக ஆட்டோகிராஃப் இடும் டோணி.

டோணியின் மோட்டார் உலகம்

டோணியின் மோட்டார் உலகம்

01. ரூ.4,500க்கு டோணி வாங்கிய முதல் பைக்...

02. டோணியின் ஹெல்கேட் சூப்பர் பைக்...

03. ஃபார்முலா ஒன் டிராக்கை ஒரு கை பார்த்த டோணி அண்ட் கோ...

04. ஒர்க்ஷாப்பில் தூங்கிய ஹார்லியை தட்டி எழுப்பி கூட்டி வந்த டோணி...

05. டோணியின் கவாஸாகி எச்2 சூப்பர் பைக்...

06. பைக் ரேஸ் அணியை துவங்கிய டோணி...

 
English summary
Mahendra Singh Dhoni Car Collection.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark