256பிஎச்பி பவருடன் கர்ஜிக்கும் மஹிந்திரா பொலிரோ கேம்பர்!

Written By:

குறைவான பராமரிப்பு செலவு கொண்ட யுட்டிலிட்டி ரக வாகனமாக மஹிந்திரா பொலிரோ விளங்குகிறது. இதனால், வாடிக்கையாளர் மத்தியில் மஹிந்திரா பொலிரோவுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. போட்டி மிகுதியானாலும் கூட, மஹிந்திரா பொலிரோவுக்கான வரவேற்பு குறையவில்லை.

இடவசதி, மைலேஜ், நம்பகமான எஞ்சின் என்று பொலிரோவுக்கான வரவேற்புக்கு பல காரணங்களை கூறலாம். இந்தநிலையில், தென் ஆப்ரிக்காவை சேர்ந்த உரிமையாளர் ஒருவர் மஹிந்திரா பொலிரோவில் இருக்கும் டீசல் எஞ்சின் பொருத்தமாக இல்லை என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது. அதன் விளைவு என்ன ஆனது என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

 யானை பசிக்கு சோளப்பொறி...

யானை பசிக்கு சோளப்பொறி...

ஆம், மிரட்டலான மஹிந்திரா பொலிரோவுக்கு, அதிலுள்ள 75 பிஎச்பி பவரை அதிகபட்சம் வழங்கும் திறன் கொண்ட 2.5 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தமாக இல்லை என்று இந்த மஹிந்திரா பொலிரோவின் உரிமையாளர் கருதியிருக்கிறார்.

விளைவு

விளைவு

எனவே, மிக சக்திவாய்ந்த எஞ்சினை பொருத்தினால்தான் பொலிரோவின் தோற்றத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைத்துவிட்டார். அதன் விளைவாக உருவானதுதான் மஹிந்திரா பொலிரோ வி8 மாடல். இதற்காக, அங்கு பிரபலமான கார் மெக்கானிக் ஷாப்பை அணுகியிருக்கிறார்.

 விறுவிறு

விறுவிறு

மஹிந்திரா பொலிரோ கேம்பர் எனப்படும் பிக்கப் டிரக் மாடல் இது. இதில், எஞ்சினை பொருத்தி தருவதற்கு உரிமையாளர் தெரிவித்த விருப்பத்தை ஏற்று அந்த மெக்கானிக் ஷாப்பில் விறுவிறுப்பாக பணிகள் துவங்கின.

எஞ்சின் தேர்வு

எஞ்சின் தேர்வு

தனது பொலிரோவின் எஞ்சின் பகுதியில் சில மாறுதல்களுடன் பொருத்தக்கூடிய எஞ்சின் குறித்து ஆய்வு செய்தனர். மேலும், அது விலை மலிவாகவும் இருக்க வேண்டும் என்பது அவரது நோக்கம்.

வி8 எஞ்சின்

வி8 எஞ்சின்

அவரது நோக்கத்திற்கு பொருத்தமானதாக லெக்சஸ் வி8 எஞ்சின் இருந்தது. இதையடுத்து, தனது பொலிரோவில் டொயோட்டா லெக்சஸ் வி8 எஞ்சினை பொருத்துவதற்கான முயற்சியில் இறங்கினார். இதற்காக, ஒரு வி8 எஞ்சின், கியர்பாக்ஸ், சாதனங்களை வாங்கினர். பின்னர், எஞ்சின் சர்வீஸ் செய்யப்பட்டது.

பவர்ஃபுல் எஞ்சின்

பவர்ஃபுல் எஞ்சின்

மஹிந்திரா பொலிரோ எஸ்யூவியில் பொருத்துவதற்கு முடிவு செய்யப்பட்ட 4.0 லிட்டர் லெக்சஸ் வி8 பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 256 பிஎச்பி பவரையும், 353 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது. [மேம்படுத்தப்பட்ட இதே எஞ்சின் தற்போது 290பிஎச்பி பவருடன் வர இருக்கிறது].

4 வீல் டிரைவ் சிஸ்டம்

4 வீல் டிரைவ் சிஸ்டம்

இந்த எஞ்சினுடன் 4 சக்கரங்களுக்கும் எஞ்சின் ஆற்றலை கடத்தக்கூடிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸையும் இதன் உரிமையாளர் சேர்த்தே வாங்கினார். இதனால், இது ஒரு முழுமையான 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலாகவும் இருக்கும்.

மாற்றங்கள்

மாற்றங்கள்

எஞ்சினை பொருத்துவதற்கான மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. கியர் லிவர் இருந்த பகுதியும் முற்றிலும் நீக்கப்பட்டு, புதிய ஆட்டோமேட்டிக் கியர் லிவர் கொடுக்கப்பட்டுள்ளது. கூலண்ட் சிஸ்டத்திலும் சிறிய மாறுதல்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

தயார்

தயார்

அனைத்து மாறுதல்களும் முடிந்து தற்போது மஹிந்திரா பொலிரோ கேம்பர் பிக்கப் டிரக் தயார் நிலையில் இருக்கிறது. உரிமையாளர் ஓட்டிப் பார்த்து என்ன சொல்கிறார் என்பதை காண்பதற்கு கார் கராஜின் பணியாளர்களை போன்று நாமும் ஆர்வமாக இருக்கிறோம்.

மாற்றம்

மாற்றம்

இதேபோன்று, உங்கள் காரில் ஏதேனும் மாறுதல்கள் செய்திருந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

வி8 எஞ்சின் பொருத்தப்பட்ட மஹிந்திரா பொலிரோ கேம்பர்!

கச்சிதமாக பொருந்திவிட்ட வி8 எஞ்சின்.

வி8 எஞ்சின் பொருத்தப்பட்ட மஹிந்திரா பொலிரோ கேம்பர்!

உயிர்பெறுவதற்கு உரிமையாளருக்காக காத்திருக்கிறது இந்த மஹிந்திரா பொலிரோ கேம்பர் வாகனத்தின் வி8 எஞ்சின்.

 

Source

English summary
Mahindra Bolero Camper With Lexus V8 Engine.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark