Subscribe to DriveSpark

பிக்கப் டிரக் அவதாரத்தில் புதிய ஸ்கார்ப்பியோ... மஹிந்திரா கஸ்டமைஸ் நிறுவனம் அசத்தல்!

Written By:

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ அடிப்படையிலான பிக்கப் டிரக் மாடல் கேட்வே என்ற பெயரில் விற்பனையில் இருந்து வருகிறது. ஆனால், அது பழைய மாடலின் அடிப்படை டிசைனை கொண்டது. இந்த நிலையில், புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ அடிப்படையிலான புதிய கேட்வே பிக்கப் டிரக் தீவிரமாக சாலை சோதனைகளில் வைக்கப்பட்டு இருப்பது குறித்து அண்மையில் செய்தி வழங்கியிருந்தோம்.

இந்த நிலையில், மஹிந்திரா நிறுவனத்தின் கஸ்டமைஸ் பிரிவு, புதிய தலைமுறை ஸ்கார்ப்பியோ மிக நேர்த்தியான பிக்கப் டிரக் மாடலாக மாற்றி அசத்தியிருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்கள், படங்களை இந்த செய்தியில் காணலாம்.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
பிக்கப் டிரக் அவதாரத்தில் புதிய ஸ்கார்ப்பியோ

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எக்ஸ்ட்ரீம் என்ற பெயரில் இந்த கஸ்மடைஸ் மாடல் குறிப்பிடப்படுகிறது. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவியின் எஸ்-2 என்ற பேஸ் வேரியண்ட் முதல் எஸ்-10 என்ற டாப் வேரியண்ட் வரை அனைத்து வேரியண்ட்டுகளையும் கஸ்டமைஸ் செய்து பெற முடியும்.

பிக்கப் டிரக் அவதாரத்தில் புதிய ஸ்கார்ப்பியோ

மஹிந்திரா ஸ்கார்ப்பியோவின் முதல் இரண்டு வரிசை இருக்கைக்கு பின்புறம் உள்ள பகுதியை பக்கெட் கொண்ட பிக்கப் டிரக் ரக வாகனமாக மாற்றியிருக்கின்றனர். அதாவது, டியூவல் கேபின் கொண்ட பிக்கப் டிரக்ககா மாற்றப்பட்டுள்ளது.

பிக்கப் டிரக் அவதாரத்தில் புதிய ஸ்கார்ப்பியோ

முகப்பில் அதிக மாறுதல்கள் செய்யப்படவில்லை. ஆனால், பக்கவாட்டில் பெரிய வீல் ஆர்ச்சுகள், ஃபுட் போர்டு, புதிய அலாய் வீல்கள், ஆஃப் ரோடு டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. பாடி கிராஃபிக் ஸ்டிக்கர்களுடன் அலங்கரிக்கும் வாய்ப்பும் உண்டு.

பிக்கப் டிரக் அவதாரத்தில் புதிய ஸ்கார்ப்பியோ

பின்புறத்தில் உள்ள பக்கெட்டை மூடி போட்டிருப்பதன் மூலமாக பொருட்களை பத்திரமாக வைத்து எடுத்துச் செல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சைக்கிள்களை வைத்து எடுத்துச் செல்வதற்கான கேரியர், கூடுதல் எரிபொருள் எடுத்துச் செல்வதற்கான ஜெர்ரி கேன், ரூஃப் ரெயில்கள், பின்புறத்தில் கைப்பிடிகள், ரியர் வைப்பர் என நீண்டு கொண்டே செல்கிறது ஆக்சஸெரீகளின் பட்டியல்.

பிக்கப் டிரக் அவதாரத்தில் புதிய ஸ்கார்ப்பியோ

இன்டீரியரை பொறுத்தவரையில் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, மூடு லைட்டிங், லெதர் அப்ஹோல்ஸ்டரி, உயர் வகை மியூசிக் சிஸ்டம் என அசத்தலான கூடுதல் ஆக்சஸெரீகளை வாடிக்கையாளர்கள் விருப்பப்படி தேர்வு செய்து பொருத்திக் கொள்ளலாம்.

பிக்கப் டிரக் அவதாரத்தில் புதிய ஸ்கார்ப்பியோ

அதன்படியே, ஸ்கார்ப்பியோ எக்ஸ்ட்ரீம் பிக்கப் டிரக்கை விரும்பும் வண்ணத்தில் பெயிண்ட் செய்து பெறும் வாய்ப்பையும் மஹிந்திரா கஸ்டமைஸ் நிறுவனம் வழங்குகிறது.

பிக்கப் டிரக் அவதாரத்தில் புதிய ஸ்கார்ப்பியோ

எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. ஸ்கார்ப்பியோவில் இருக்கும் 120 பிஎச்பி பவரை அளிக்க வல்ல அதே 2.2 லிட்டர் டீசல் எஞ்சின்தான் தக்க வைக்கப்பட்டுள்ளது. 4 வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் 2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல்களில் கிடைக்கும்.

பிக்கப் டிரக் அவதாரத்தில் புதிய ஸ்கார்ப்பியோ

மும்பையிலுள்ள கன்டிவாலி என்ற இடத்தில் செயல்படும் மஹிந்திரா நிறுவனத்தின் கஸ்டமைஸ் மையத்தில் புதிய ஸ்கார்ப்பியோ எஸ்யூவி ஒன்றை வாங்கி கொண்டு நிறுத்தினால் இவ்வாறு மாறுதல்களை செய்து தருகின்றனர்.

பிக்கப் டிரக் அவதாரத்தில் புதிய ஸ்கார்ப்பியோ

தற்போது விற்பனையில் இருக்கும் பழைய ஸ்கார்ப்பியோ கேட்வே பிக்கப் டிரக் மாடல் வீல் பேஸ் அதிகம் கொண்டது. ஆனால், இந்த ஸ்கார்ப்பியோ எக்ஸ்ட்ரீம் பிக்கப் டிரக்கை வீல் பேஸில் மாற்றம் இல்லாமல் கஸ்டமைஸ் செய்யப்படுவதன் காரணமாக வாடிக்கையாளர்களிடத்தில் வரவேற்பு எழுந்துள்ளது. இதுபோன்று மாற்றி தருவதற்கு வரிகள் உள்பட ரூ.7 லட்சம் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Image Source: Rajesh Khera

English summary
Mahindra Scorpio SUV in Pick truck avatar.
Story first published: Tuesday, October 25, 2016, 16:09 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark