பிவி சிந்துவுக்கும் தார் எஸ்யூவி பரிசு: ஆனந்த் மஹிந்திரா அறிவிப்பு

Written By:

ரியோ ஒலிம்பிக்ஸில் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் பங்கேற்க இருக்கும் இந்திய வீராங்கனை பிவி சிந்துவுக்கும் தார் எஸ்யூவியை பரிசாக அறிவித்துள்ளார் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா.

ரியோ ஒலிம்பிக்ஸில் மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த வீராங்கனை சாக்ஷிக்கு ரூ.10 லட்சம் மதிப்புடைய தார் எஸ்யூவியை பரிசாக அறிவித்தார் ஆனந்த் மஹிந்திரா.

பிவி சிந்து
 

இதைத்தொடர்ந்து, தற்போது இந்தியாவுக்கு மற்றொரு பதக்கத்தை உறுதி செய்துள்ள வீராங்கனை பிவி சிந்துவுக்கும் தார் எஸ்யூவியை பரிசாக அறிவித்துள்ளார் ஆனந்த் மஹிந்திரா.

அவர் தங்கம் வெல்வாரா அல்லது வெள்ளி வெல்வாரா என்பதை குறிக்கும் விதத்தில், சிந்துவுக்கு சில்வர் வண்ணத்திலான தார் எஸ்யூவியை வழங்கலாமா அல்லது ஆரஞ்ச் வண்ணமா என்று சுவாரசியமாக குறிப்பிட்டு ஓட்டெடுப்பு ஒன்றையும் திறந்து வைத்திருக்கிறார்.

இந்த நிலையில், இன்று நடைபெறும் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் பிவி சிந்து தங்கப்பதக்கத்தை வென்று வர வேண்டும் என்பதை அனைவரின் விருப்பமாக உள்ளது.

English summary
Mahindra Thar Awaits PV Sindhu — Will It Have A Silver Lining Or A Golden Dawn?
Story first published: Friday, August 19, 2016, 19:27 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark