மெர்சிடிஸ் ஏ க்ளாஸ் கார் போன்று மாற்றப்பட்ட மாருதி பலேனோ கார்!

Written By:

காருக்கு அலங்காரம் செய்வது பெரும் கலை. சிலர் கூடுதல் ஆக்சஸெரீகளை சேர்த்து நின்றுவிடுவர். ஆனால், தீவிர கார் பிரியர்கள் அதையும் தாண்டி புதுமைகளை செய்ய துணிந்து விடுவர்.

அவ்வாறு, ஒரு கார் பிரியர் தனது மாருதி பலேனோ காரை மெர்சிடிஸ் பென்ஸ் கார் போன்று மாற்றும் முயற்சிகளை செய்திருக்கிறார். அதனை தொடர்ந்து காணலாம்.

ஆர்வம்

ஆர்வம்

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் காருக்கு இணையாக தோற்றத்தை மாற்ற முனைந்திருக்கிறார் அந்த கார் பிரியர். தனது சிவப்பு நிற காரில் சில முக்கிய மாற்றங்களை செய்துள்ளார்.

முகப்பு மாற்றங்கள்

முகப்பு மாற்றங்கள்

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் காரின் வைரக் கற்கள் பதிக்கப்பட்டது போன்ற க்ரோம் பூச்சுடன் கூடிய முகப்பு க்ரில் அமைப்பு இந்த மாருதி பலேனோ காரில் பொருத்தி உள்ளனர். நடுநாயகமாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் நட்சத்திர வடிவ லோகோ பிரதானமாக வீற்றிருக்கிறது.

நேர்த்தியான வேலைப்பாடு

நேர்த்தியான வேலைப்பாடு

முன்புற பம்பர் அமைப்பும் முற்றிலுமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது பலேனோ கார் என்று எளிதாக கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மெர்சிடிஸ் பென்ஸ் காராக மாறியிருக்கிறது.

புதிய அலாய் வீல்கள்

புதிய அலாய் வீல்கள்

மெர்சிடிஸ் பென்ஸ் காருடன் ஒத்துப்போகும் வகையில், புதிய 5 ஸ்போக் அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. லோ புரோஃபைல் டயர்களும் சேர்ந்து மாருதி பலேனோ காரை உயர் வகை கார் மாடலாக மாற்றியிருக்கிறது.

பின்புற மாற்றங்கள்

பின்புற மாற்றங்கள்

பின்புறத்தில் பம்பர் அமைப்பு முற்றிலும் மாற்றப்பட்டிருப்பதுடன், பின்பக்கத்தில் தலா இரண்டு புகைப்போக்கி குழாய்கள் கொண்ட இரட்டை சைலென்சர் அமைப்பு உள்ளது.

 சின்ன சின்ன மாற்றம்

சின்ன சின்ன மாற்றம்

அத்துடன், டிஃபியூசர் போன்ற அமைப்பும் ராலி ரேஸ் கார் போன்ற தோற்றத்தை அளிக்கிறது. அதேநேரத்தில் டெயில் லைட்டுகளில் எந்த மாற்றங்களும் இல்லை.

கவர்ச்சி

கவர்ச்சி

மேலும், சிவப்பு வண்ணம் கொண்ட அந்த மாருதி பலேனோ காரில் மேற்கூரை, பில்லர்கள் கருப்பு வண்ணம் தீட்டப்பட்டிருப்பதும் கவர்ச்சியை கூட்டுகிறது. தற்போது கஸ்டமைஸ் பணிகள் நிறைவு செய்யும் தருவாயில் இருப்பதாக தெரிய வருகிறது.

English summary
The unholy union of a Baleno and a Mercedes A-Class is the reason why getting a custom job right actually needs skill.
Story first published: Thursday, December 1, 2016, 13:35 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos