பெங்களூர்: ஆண்களுக்கே உரித்தான துறைகளில் அனாயசமாக கலக்க ஆரம்பித்துள்ள பெண்கள் வரிசையில் இப்போது பெங்களூரைச் சேர்ந்த ஷீஜா மாத்யூஸும் இணைந்துள்ளார். உலகப் புகழ் பெற்ற ஹார்லி டேவிட்சன் பைக்கை இவர் வாங்கி இந்தியாவிலேயே இந்த பைக்கை ஓட்டும் முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த 34 வயதான எச்.ஆர். அதிகாரியான ஷீஜா, கடந்த பத்து வருடங்களாக பைக்கில்தான் தனது அலுவலகத்திற்குப் போய் வருகிறார். இது நாள் வரை தனது கணவரின் யமஹா ராஜ்தூத் 350 பைக்கில்தான் ஆபீஸ் போய் வந்தார் ஷீஜா. தற்போது இவருக்கே சொந்தமாக ஒரு ஹார்லிடேவிட்சன் பைக்கை வாங்கி விடஜ்டார்.
வாரத்திற்கு ஒருமுறையாவது ஹார்லியில் தனது அலுவலகத்திற்குப் போக திட்டமிட்டுள்ளாராம் ஷீஜா.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் மோடடார் சைக்கிளை வாங்கிய முதல் பெண் நான்தான் என்பது எனக்கு முதலில் தெரியாது. அந்த நிறுவனத்தினர்தான் இதைத் தெரிவித்தனர். ஹார்லி வாங்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவாகும்.
நீண்ட காலமாக எனது கணவரின் பழைய பைக்கையே ஓட்டிக் கொண்டிருந்தேன். எனவேதான் புதிய பைக் வாங்க வேண்டும், அதுவும் ஹார்லி வாங்க வேண்டும் என்று விரும்பினேன் என்றார் ஷீஜா.
ஷீஜாவின் 7 வயது மகனுக்கும் ஹார்லி என்றால் பிரியமாம். தினசரி தன்னை இந்த பைக்கில்தான் ஸ்கூலுக்குக் கொண்டு போய் விட வேண்டும் என்று கூறுகிறானாம் ஷீஜாவிடம். இந்தப் பைக்கை வாங்குவதற்காக ஷீஜா செலவிட்ட தொகை ஜஸ்ட் ரூ. 8 லட்சம்தான்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள்கள் உலகப் புகழ் பெற்றவை. சமீபத்தில்தான் இந்தியாவில் இந்த மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தினர். ஹரியானாவில் வைத்து அசெம்பிள் செய்து இதை இந்தியாவில் விற்கின்றனர்.
Most Viewed Videos
வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Allow Notifications
You have already subscribed