Just In
- 32 min ago
யம்மாடியோவ்... மஹிந்திரா மோஜோ பைக்கா இது!! சத்தியமா நம்ப முடியல
- 2 hrs ago
லாக்டவுண் அறிவித்த கையோடு உதவி தொகையையும் அறிவித்த மஹாராஷ்டிரா அரசு... ஆட்டோ டிரைவர்கள் உற்சாகம்!!
- 4 hrs ago
புல் பார்களால் இவ்ளோ பிரச்னையா!.. இந்த வீடியோவ பாருங்க ஏன் தடை போட்டாங்கனு உங்களுக்கே தெரியும்!!
- 16 hrs ago
7-இருக்கை ஜீப் காம்பஸ் மீண்டும் இந்தியாவில் சோதனை!! ஸ்பை படங்கள் வெளியீடு!
Don't Miss!
- News
சென்னையில் உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி.. விரைவில் அறிவிப்பு.. பிரகாஷ் தகவல்
- Sports
உலக அளவுல சிறப்பான டெத் பௌலர் அவர்... என்னோட வேலையை ஈஸியாக்கிட்டாரு... போல்ட் பாராட்டு
- Movies
நயன்தாரா, விக்னேஷ் சிவன்… விவேக்கின் மறைவுக்கு உருக்கமான இரங்கல் !
- Finance
7வது சம்பள கமிஷன்.. இந்த அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் தான்..!
- Lifestyle
க்ரீமி சிக்கன் கிரேவி
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆளுக்கு ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருக்கும் குடும்பம்... விலை எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க...
ஆளுக்கு ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருக்கும் குடும்பம் பற்றிய பிரம்மிப்பான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கார்களில் கிடைக்க கூடிய சொகுசு, வேறு எந்த கார்களிலாவது கிடைக்குமா? என்பது நிச்சயமாக சந்தேகம்தான். எனவே ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் சொகுசு வசதிகளின் உச்சகட்டமாக கருதப்படுகின்றன. வாழ்க்கையில் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் காரையாவது வாங்க வேண்டும் என்ற ஆசை பெரும்பாலானோருக்கு உள்ளது.

வெறும் ஆசை என்பதுடன் இல்லாமல், சொந்தமாக ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்குவதை தங்களின் வாழ்நாள் லட்சியமாக வைத்திருப்பவர்களும் ஏராளம். ஆனால் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் மிகவும் விலை உயர்ந்தவை என்பதால், ஒரு சிலரால் மட்டுமே அந்த கனவை நிறைவேற்ற முடிகிறது. அதாவது கோடீஸ்வரர்களாக இருந்தால் மட்டுமே ரோல்ஸ் ராய்ஸ் கனவு சாத்தியப்படும்.

தற்போதைய நிலையில், கோஸ்ட் (Rolls-Royce Ghost) மாடல்தான் இந்திய சந்தையில் கிடைக்கும் விலை மலிவான ரோல்ஸ் ராய்ஸ் கார். ஆனால் 'மலிவான' என்ற வார்த்தையை கேட்டு மயங்கி விடாதீர்கள். ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரின் ஆரம்ப விலையே 5.25 கோடி ரூபாய். இந்த விலையில் இருந்து 6.83 கோடி ரூபாய் வரையிலான விலைகளில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் விற்பனை செய்யப்படுகிறது.

இதுவும் எக்ஸ் ஷோரூம் விலை மட்டும்தான். குறைந்தபட்சமாக இவ்வளவு பெரிய தொகையை செலவிட்டால் மட்டுமே, ஒரு புதிய ரோல்ஸ் ராய்ஸ் காரை உங்கள் வீட்டில் நிறுத்த முடியும். ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் வேறு கார்கள் என்றால், நீங்கள் இன்னும் ஒரு சில கோடிகளை கூடுதலாக செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

இவ்வளவு அதிகமான விலை என்ற காரணத்தால்தான், இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை காண்பது மிகவும் அரிதாக உள்ளது. இருந்தாலும் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் காரையாவது வாங்கி விட வேண்டும் என்ற கனவுடன் பலர் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், அதே இந்தியாவில் ஒரு சிலரோ ஒன்றுக்கும் மேற்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்களை சொந்தமாக வைத்துள்ளனர்.

கேரளாவை சேர்ந்த ஒரு குடும்பத்திடம் மூன்று வெவ்வேறு வண்ணங்களில் மூன்று ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் உள்ளன. இங்கே நாம் பேசி கொண்டிருக்கும் மூன்று ரோல்ஸ் ராய்ஸ் கார்களும் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான கல்யாணராமன் மற்றும் அவரது மகன்களான ரமேஷ் மற்றும் ராஜேஷ் ஆகியோருக்கு சொந்தமானது.

இவர்கள் மூவரும் தங்களது ரோல்ஸ் ராய்ஸ் கார்களை தொடர்ச்சியாக பயன்படுத்தி வருகின்றனர். இதில், கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான கல்யாணராமன் ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் சீரிஸ் II (Rolls Royce Phantom Series II) காரை பயன்படுத்தி வருகிறார். இதன் விலை தோராயமாக 10 கோடி ரூபாய்க்கும் நெருக்கமாக வருகிறது.

அவரது கார் கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. அவரது 2 மகன்களும் ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் சீரிஸ் II கார்களைதான் பயன்படுத்தி வருகின்றனர். இதில் ஒரு கார் சில்வர் நிறத்திலும், மற்றொன்று வெள்ளை நிறத்திலும் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன. ஆக மொத்தத்தில், கல்யாணராமன் குடும்பத்தினரிடம் 3 ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் சீரிஸ் II கார்கள் உள்ளன.

இந்த மூன்று கார்களும் கராஜில் ஒன்றாக நிறுத்தப்பட்டிருப்பதை காட்டும் காணொளிகள் பல இணையத்தில் உள்ளன. வெளியில் எங்கு செல்வதாக இருந்தாலும் அவர்கள் மூவரும் ரோல்ஸ் ராய்ஸ் கார்களைதான் பயன்படுத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்திடம் மூன்று ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் இருப்பது என்பது நிச்சயமாக அரிதான ஒரு விஷயம்தான்.

இந்தியாவில் மட்டுமல்லாது, உலக அளவிலும் இது ஒரு அரிதான விஷயமாகதான் பார்க்கப்படுகிறது. இந்த சமயத்தில், இந்தியாவிலேயே மிகப்பெரிய பணக்கார குடும்பமான அம்பானி குடும்பத்தினரிடம் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் இல்லையா? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். அவர்களிடத்திலும் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் நிறைய இருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan), ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் டிஹெச்சி (Rolls Royce Phantom DHC) மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் VIII (Rolls Royce Phantom VIII) ஆகிய கார்களை அம்பானி குடும்பத்தினர் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவை மிகவும் அரிதாகதான் கராஜை விட்டு வெளியே வரும்.