பெண்களுக்கான உலகின் முதல் ஆடம்பர படகு!

Posted By:

அரண்மனையை விஞ்சும் அழகுடன், ஆடம்பரம் மிளிரும் பெண்களுக்கான உலகின் முதல் ஆடம்பர படகின் கான்செப்ட்டை மொனாக்கோவை சேர்ந்த பிரபல டிசைனர் லிடியா வடிவமைத்துள்ளார்.

மெர்சிடிஸ் பென்ஸ் கார்களின் சென்னை ஆன்ரோடு விலை

முழுக்க முழுக்க பெண்களை மனதில் கொண்டு ஓர் பெண் டிசைனரால் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய ஆடம்பர படகு கான்செப்ட் உலக அளவில் கோடீஸ்வர பெண்மணிகளின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த ஆடம்பர படகு கான்செப்ட்டின் படங்களை ஸ்லைடரில் வாசகர்கள் கண்குளிர காணலாம்.

லா பெல்லெ

லா பெல்லெ

பெண்களுக்கான இந்த ஆடம்பர படகிற்கு லா பெல்லெ என லிடியா பெர்சானி பெயர் சூட்டியுள்ளார். இந்த படகை உருவாக்க தகுதிவாய்ந்த கோடீஸ்வர பெண்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் இந்த ஆடம்பர கான்செப்ட் படகின் படங்களை அவர் வெளியிட்டிருக்கிறார்.

 வடிவம்

வடிவம்

மிக அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த ஆடம்பர படகு 262 அடி நீளம் கொண்டது. 5 அடுக்குகள் கொண்டதாக உருவாக்கியுள்ளார். மேல்தளத்தில் ஹெலிபேட் இருக்கிறது.

 விருந்தினர் தங்குவதற்கான வசதி

விருந்தினர் தங்குவதற்கான வசதி

இந்த ஆடம்பர படகில் 12 விருந்தினர்கள் தங்குவதற்கான 6 சொகுசு அறைகள் உளளன. இரண்டாவது தளத்தில் மாஸ்டர் பெட்ரூம் உள்ளது. இந்த மாஸ்டர் பெட்ரூமிலிருந்து வெளிப்புற அழகை கண்டு ரசிப்பதற்கான வசதி உள்ளது.

இன்டிரியர்

இன்டிரியர்

மனதை மயக்கும் வண்ணத்திலும், சொகுசான இருக்கைகள், யானை தந்த நிறத்திலான இன்டிரியர் பினிஷிங், விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டு மனதை மயக்கும் விதத்திலும், ஆடம்பரத்தை காட்டும் விதத்திலும் இந்த ஆடம்பர படகு கான்செப்ட்டை உருவாக்கியிருக்கிறார்.

 வெளிப்புற அழகு

வெளிப்புற அழகு

இன்டிரியர் டிசைனில் எந்தளவு ஆடம்பரத்தனம் மிளிர்கிறதோ அதே அளவு வெளிப்புறத்தையும் மிக நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார். மொத்தத்தில் பெண்கள் விரும்பும் டிசைனாக, ஒரு பெண்ணால் உருவாக்கப்பட்டிருப்பதை எளிதாக உணரலாம்.

இதர வசதிகள்

இதர வசதிகள்

நீச்சல்குளம், ஓய்வு அறைகள், சூரிய குளியல் செய்வதற்கான வசதிகள், உணவுக்கூடம், பார், நடன அரங்கம் என அனைத்து வசதிகள் கொண்டதாக டிசைன் செய்யப்பட்டிருக்கிறது.

 விலை

விலை

இந்த ஆடம்பர படகை உருவாக்குவதற்கான விலை குறித்து எந்த தகவலையும் லிடியா இதுவரை தெரிவிக்கவில்லை. இது பெண்களுக்கான உலகின் முதல் ஆடம்பர படகு என்பதோடு, உலகின் அதிக விலை கொண்ட ஆடம்பர படகு பட்டியலிலும் இது இடம்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆடம்பர படகை வாங்குவதற்கு எந்த கோடீஸ்வர பெண்மணி விருப்பம் தெரிவிக்கிறார் என்பதை காண அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

 
மேலும்... #offbeat #ship #ஆஃப் பீட்
English summary
Meet The World's First Luxury Yacht For Women - La Belle Monaco-based luxury designer Lidia Bersani unveils design for superyacht La Belle which is targeted at millionaire women. Take a look. 

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark