லண்டனில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் சொகுசு குடியிருப்புகள்!

Written By:

சொகுசு கார் தயாரிப்பில் புகழ்பெற்ற ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் லண்டனில் 6 புதிய வாடகை அடுக்குமாடி குடியிருப்புகளை விரைவில் திறக்க இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் லிவிங் @ப்ரேசர் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த அடுக்குமாடி குடியிருப்புகள், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பிராண்டு மதிப்பையும், அதன் கார்களின் சொகுசுத் தன்மையும் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் குறித்து முதல்முறையாக வெளியிடப்பட்டிருக்கும் படங்களையும், கூடுதல் விபரங்களையும் ஸ்லைடரில் காணலாம்.

அமைவிடம்

அமைவிடம்

மேற்கு லண்டன் மாநகரின், கென்சிங்டன் என்ற இடத்தில் இந்த புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

கூட்டணி

கூட்டணி

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும், சங்கிலித் தொடர் ஓட்டல்களை நடத்தி வரும் பிரேசர் ஹாஸ்பிடாலிட்டி குழுமமும் இணைந்து இந்த குடியிருப்புகளை கட்டியுள்ளன.

Recommended Video - Watch Now!
Mercedes-Benz To Offer Exclusive AMG Pit Stop Service In India - DriveSpark
திறப்பு விழா

திறப்பு விழா

அடுத்த மாதம் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 6 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளும் திறக்கப்பட உள்ளன.

 வாடகை குடியிருப்புகள்

வாடகை குடியிருப்புகள்

இந்த அடுக்குமாடி குடியிருப்புகள், லண்டன் வரும் சுற்றுலாப் பயணிகளையும், கோடீஸ்வரர்கள் மற்றும் பெரும் வர்த்தகர்களும் வாடகைக்கு பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.

இடவசதி

இடவசதி

இது வாடகை குடியிருப்பாக அமைக்கப்பட்டிருப்பதால், குடியிருப்பில் இருக்கும் ஒவ்வொரு வீடும் 1,067 சதுர அடி மட்டுமே பரப்பளவு கொண்டது.

அறைகள்

அறைகள்

இரண்டு படுக்கை அறைகள், சாப்பாட்டுக் கூடம் மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய சமயலறையுடன் கட்டப்பட்டுள்ளது.

வசதிகள்

வசதிகள்

மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார்களின் இடவசதியையும், அதில் இடம்பெற்றிருக்கும் வசதிகளையும் பிரதிபலிக்கும் வகையில் வீடுகளின் உட்புறம் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. அதில் குறிப்பிட்டு கூறும்படியான ஒரு வசதி, பர்ம்ஸ்டெர் ஆடியோ சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கிறது.

மெர்சிடிஸ் அப்ளிகேஷன்

மெர்சிடிஸ் அப்ளிகேஷன்

ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் டிவியில் மெர்சிடிஸ் பென்ஸ் ஸ்மார்ட் ஆப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலமாக, மெர்சிடிஸ் பென்ஸ் வாகனங்கள் பற்றிய விபரக்குறிப்புகளையும், வீடியோ மற்றும் படங்களை பார்க்க முடியும்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

மெர்சிடிஸ் பென்ஸ் உயர்வகை கார்களில் பயன்படுத்தப்படும் விலை உயர்ந்த கற்கள், மெர்சிடிஸ் பென்ஸ் லோகோ மற்றும் ஆம்பியன்ட் விளக்குகள் மூலமாக, வரவேற்பு அறை அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.

வாடகை

வாடகை

ஒரு இரவுக்கு 300 முதல் 400 பவுண்ட் வரை வாடகை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய மதிப்பில் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை இருக்கிறது.

சிங்கப்பூரிலும்

சிங்கப்பூரிலும்

இதே பாணியில் சிங்கப்பூரிலும் 9 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை மெர்சிடிஸ் பென்ஸ் திறக்க இருக்கிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் திறக்கப்பட உள்ளது.

 
English summary
Mercedes-Benz To launch their own luxury apartments In London.
Story first published: Friday, October 16, 2015, 11:29 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark