ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியை அட்டகாசமாக கஸ்டமைஸ் செய்த பெங்களூர் நிறுவனம்!

Written By:

புதிய தலைமுறை ஃபோர்டு எஸ்யூவியின் கம்பீரமும், ஸ்டைலுக்கும் பல வாடிக்கையாளர்கள் க்ளீன் போல்டு ஆகியுள்ளனர். இதனால், விற்பனையிலும் சிறப்பான இடத்தை பிடித்து உள்ளது.

இந்த நிலையில், புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் கம்பீரத்தையும், அழகையும் கூட்டி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது பெஙகளூரை சேர்ந்த மோட்டார்மைன்ட் ஆட்டோமோட்டிவ் டிசைன்ஸ் நிறுவனம்.

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியை கஸ்டமைஸ் செய்த பெங்களூர் நிறுவனம்!

வெள்ளை நிற புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் கவர்ச்சிகர அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் இருந்த க்ரோம் பட்டை க்ரில் அமைப்புக்கு பதிலாக ஃபோர்டு ராப்டர் பிக்கப் டிரக்கில் பயன்படுத்தப்படும் மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட க்ரில் அமைப்பு பொருத்தப்பட்டு இருக்கிறது. அதில், FORD என்ற நிறுவனத்தின் ஆங்கில எழுத்துக்கள் மிகுந்த கம்பீரத்தை தருகிறது.

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியை கஸ்டமைஸ் செய்த பெங்களூர் நிறுவனம்!

க்ரில் அமைப்பின் மேல்புறத்தில் மூன்று எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இதனால், மிகுந்த கம்பீரத்தையும், கவர்ச்சியையும் பெற்றிருக்கிறது முகப்பு.

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியை கஸ்டமைஸ் செய்த பெங்களூர் நிறுவனம்!

அடுத்ததாக, மேட் பினிஷ் செய்யப்பட்டது போன்ற முன்பக்க பம்பர், அதன் இருமுனைகளிலும் எல்இடி பகல்நேர விளக்குகள் சிறப்பு சேர்க்கின்றது. ஹெட்லைட்டின் உட்புறம் கரும் பூச்சு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியை கஸ்டமைஸ் செய்த பெங்களூர் நிறுவனம்!

பக்கவாட்டில் வீல் ஆர்ச்சுகள் இன்னும் வலுவானதாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. சைடு மிரர்கள் பளபளப்பு மிகுந்த கருப்பு வண்ண கவர்கள் மாட்டப்பட்டுள்ளன. மேக்சிஸ் ஆல் டெர்ரெய்ன் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியை கஸ்டமைஸ் செய்த பெங்களூர் நிறுவனம்!

பின்புறத்தில் பம்பரின் வடிவமைப்பு மாறுதல் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக சேர்க்கப்பட்ட பம்பர் பாகத்தின் அடிப்புறத்தில் மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட ஸ்கிட் பிளேட் உள்ளது.

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியை கஸ்டமைஸ் செய்த பெங்களூர் நிறுவனம்!

மேலும், கூடுதலாக சேர்க்கப்பட்ட பம்பரில் இரண்டு பிரேக் லைட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கன்றன. அதேநேரத்தில், கூடுதலாக சேர்க்கப்பட்ட பம்பர் பாகம் வித்தியாசம் காட்டுகிறதே தவிர, கவரும் வகையில் இல்லை.

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியை கஸ்டமைஸ் செய்த பெங்களூர் நிறுவனம்!

எஞ்சின் மற்றும் உட்புறத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்த தகவலோ அல்லது படங்களோ இல்லை. எனவே, அதிக மாற்றங்கள் இல்லை என்று கருதலாம்.

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியை கஸ்டமைஸ் செய்த பெங்களூர் நிறுவனம்!

இந்த எஸ்யூவியில் 3.2 லிட்டர் ட்யூராடார்க் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 200 பிஎஸ் பவரையும், 470 என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த மாடலில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

Images Source: Motormind

English summary
Modified New Ford Endeavour From Bangalore Custom House.
Story first published: Thursday, December 8, 2016, 10:38 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos