இந்தியாவின் விந்தையான சாலைகள் மற்றும் பாலங்களின் ஆச்சர்யம் தரும் சிறப்பம்சங்கள்...!!

இந்திய சாலைகள் மொத்தமாக சுமார் 4,320,000 கி.மீ பரப்பளவு கொண்டது. அதில் எக்ஸ்பிரஸ் சாலை- 1000 கி.மீ , தேசிய நெடுஞ்சாலை- 79,243 கி.மீ , ஊரக பகுதிகள் உட்பட மாநில சாலை வழிகள்- 1,31,899 கி.மீ பரபரப்பளவில் உள்ளன.

சிறந்த எக்ஸ்பிரஸ்வே

சிறந்த எக்ஸ்பிரஸ்வே

95 கி.மீ நீளம் கொண்ட குஜராத்தின் அஹமதாபாத் வடதோரா சாலை வழி இந்தியாவில் சிறந்த எக்ஸ்பிரஸ் சாலையாக உள்ளது.

2004ம் ஆண்டில் கோல்டன் குவாட்ரிலேட்டர் திட்டத்தின் கீழ் அஹமதாபாத் வடதோரா எஸ்க்பிரஸ்வே கட்டப்பட்டது.

இந்திய சாலைகளின் சிறப்பம்சங்கள்..!!

இதுதவிர மும்பை-பூனே எக்ஸ்பிரஸ்வே மற்றும் யமுனா எக்ஸ்பிரஸ்வே போன்ற சாலைகளும் இந்தியாவில் முக்கியத்துவம் பெறுகின்றன.

நீளமான உயர்நிலை சாலை

நீளமான உயர்நிலை சாலை

சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை உயர்நிலை எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது கட்டமைக்கப்பட்டால், 19 கி.மீ நீளத்துடன் இந்தியாவில் உயர்நிலை சாலை வழியில் சென்னை துறைமுகம் - மதுரவாயல் எக்ஸ்பிரஸ்வே முதல் இடத்தில் இருக்கும்.

பெரிய இடைவெட்டு சந்திப்பு

பெரிய இடைவெட்டு சந்திப்பு

ஆசியாவில் இருக்கும் பெரிய இடைவெட்டு சாலை அமைப்புகளில், சென்னை கத்திபாரா சந்திப்பு முதலிடத்தில் உள்ளது.

குளோவர்லீஃப் இன்டர்சேஞ்ச் என்ற ஆங்கிலத்தில் குறிப்பிடும் இது, இலை மடிப்புகளை கொண்ட வடிவமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

பெரிய நகர்புற மேம்பாலம்

பெரிய நகர்புற மேம்பாலம்

பெங்களூரில் சுமார் 5.23 கி.மீ நீளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள ஃப்லையோவர், இந்தியாவின் பெரிய நகர்புற மேம்பாலமாக விளங்குகிறது.

இந்தியாவின் கட்டிட துறையில் சிறந்த கட்டுமானமாக உள்ள இந்த ஃப்லையோவர், பெங்களூரில் நிலவும் டிராஃபிற்கு சிறந்த வடிகாலாகவும் உள்ளது.

நீண்ட சாலை சுரங்கம்

நீண்ட சாலை சுரங்கம்

ஜம்மு காஷ்மீரில் செனைய் மற்றும் நஷ்ரீ பகுதிகளை இணைக்கும் சுரங்க வழிப்பாதை கடந்த மார்ச் முதல் பயன்பாட்டிற்கு வந்தது. 9.2 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த பாதை இந்தியாவின் நீண்ட சுரங்க வழித்தடமாக உள்ளது. காஷ்மீரின் ஆப்பிள் வியாபாரிகளுக்கு முக்கிய வழித்திடமாகவும் இது இயங்கி வருகிறது.

நீண்ட ஆற்றுப் பாலம்

நீண்ட ஆற்றுப் பாலம்

பீஹாரில் கங்கை ஆற்றின் மேல் எழுப்பப்பட்டுள்ள மஹாத்மா காந்தி சேது பாலம், பாட்னா மற்றும் ஹஜிப்பூர் போன்ற பகுதிகளுக்கு இடையில் முக்கிய போக்குவரத்தாக இருந்து வருகிறது.

இந்திய சாலைகளின் சிறப்பம்சங்கள்..!!

5.5 கி.மீ நீளம் கொண்ட இந்த பாலம், 4 லேன் அமைப்பில் செயல்படுகிறது. 48 தூண்கள் இந்த பாலத்தை தாங்கி பிடிக்கின்றன.

இதன்காரணமாக இந்தியாவின் அதிக நீளம் மற்றும் இடவசதி கொண்ட முதல் ஆற்றுப்பாலமாக

பீஹாரின் மஹாத்மா காந்தி சேது பாலம் உள்ளது.

பெரிய சுங்கச் சாவடி

பெரிய சுங்கச் சாவடி

32 லேன் அமைப்புகளுடன் டெல்லி- கூர்கான் எல்லையில் அமைந்திருக்கிறது இந்தியாவின் பெரிய சுங்கச் சாவடி.

தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடக்கும் இந்த சுங்கச்சாவடி இந்தியளவில் மட்டுமில்லாமல், ஆசிய அளவில் பெரிய சுங்க சாவடியாக விளங்குகிறது.

நீண்ட கடல் பாலம்

நீண்ட கடல் பாலம்

மும்பையில் பந்த்ரா-வோர்லியை இணைக்கும் கடல்வழிப் பாலமும் உலகின் விந்தையான பாலங்களில் ஒன்றுதான். 5.6 கிமீ., நீளம் கொண்ட இந்த பாலம் அழகாக வடிவமைக்கப்பட்ட பாலமும் கூட. பாலத்தின் அழகை படத்தில் கண்டு ரசியுங்கள். முடிந்தால் மும்பைக்கு செல்லும்போது இந்த பாலத்தை காணத்தவறாதீர்.

Most Read Articles

English summary
Read in Tamil: Most Amazing Facts About The Indian Road Network. Click for Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X