Just In
- 18 min ago சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- 40 min ago ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- 1 hr ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- 2 hrs ago தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
Don't Miss!
- Movies விஜய் கையில் இவ்வளவு பெரிய காயமா?.. வெளியான புகைப்படம்.. ரசிகர்கள் சோகம்
- News பிரதமர் மோடி பேச்சால்.. பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்.. ராகுல் காந்திக்கும் சிக்கல்!
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
உலகின் அதிபயங்கர மரணச் சாலையில் ஓர் திக் திக் பயணம்...!!
உலகின் அதிபயங்கரமான சாலைகளில் மிக மோசமானதாக பொலிவியா நாட்டில் உள்ள டெத் ஹைவே வர்ணிக்கப்படுகிறது. பிரபல டாப் கியர் ஆட்டோமொபைல் இதழின் குழுவினர் இந்த சாலையில் பயணித்து வீடியோ தொகுப்பு ஒன்றை வெளியிட்டனர்.
மிரள வைத்த அந்த வீடியோ தொகுப்பை விஞ்சும் வகையில் தற்போது அந்த பாதையில் சென்ற மற்றொரு குழுவினர் வெளியிட்டிருக்கும் வீடியோ இணையதளங்களில் வெளியாகியுள்ளது. கத்தரி போடாமல் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவையும், கூடுதல் தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.
டெத் ஹைவே
லா பாஸ் மற்றும் கொராய்கோ பகுதிகளை 70 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த மரணச் சாலை இணைக்கிறது.
மோசமான பகுதி
இந்த சாலையின் இடையிலான 3,600 மீட்டர் நீளத்துக்கான சாலை மிக மிக மோசமானதாக குறிப்பிடப்படுகிறது. இந்த பகுதியில் விழுந்த வாகனங்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது என்கின்றனர்.
புள்ளிவிபரம்
இந்த பாதையில் ஆண்டுக்கு சராசரியாக 26 வாகனங்கள் பாதாளத்தில் உருண்டு விபத்துக்குள்ளாவதாகவும், ஆண்டுக்கு 100 பேர் மாண்டுவிடுவதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அறிவிப்பு
1995ம் ஆண்டில் அமெரிக்க மேம்பாட்டு வங்கி இந்த சாலையை உலகின் அதிபயங்கர மரணச் சாலையாக அறிவித்தது.
சாகச பிரியர்கள்
இந்த சாலையில் இருக்கும் அபாயங்கள், உயிரிழப்புகளை பொருட்படுத்தாது, இந்த சாலையில் பயணிக்க உலகம் முழுவதும் இருந்து சாகச பிரியர்கள் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.