இமாலய விலைக்கு ஏலம் போன கார்கள் - சிறப்பு தொகுப்பு

சொகுசு மற்றும் ஆடம்பர கார்களின் விலைகள் கோடிகளில் நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்வதே பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். கார்கள் பழமையாவதற்கு தக்கவாறு விலை குறைவதுதான் இயற்கையான நடைமுறை.

ஆனால், சில கார்கள் பல பத்தாண்டுகளை தாண்டியும் கூடுதல் மதிப்புடன் புதிய கார்களைவிட தோற்கடிக்கும் வகையில் பன்மடங்கு அதிக விலையுடன் ஏலம் போகின்றன.

அந்த கார்களின் பின்னணியில் சில சுவையான தகவல்களும் மறைந்து நிற்கும். அவைதான் அந்த காரின் கோடீஸ்வர மதிப்புக்கு காரணமாக இருக்கும். அந்த விதத்தில் அதிக விலைக்கு ஏலம் போன சில கார்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்கிறோம்.

1957 ஃபெராரி 250 டெஸ்டா ரோஸா

1957 ஃபெராரி 250 டெஸ்டா ரோஸா

1960 களில் ரேஸ் டிராக்குகளில் கலக்கிய ஃபெராரி ரேஸ் கார். ஃபெராரி டிஆர் என்றும் அழைக்கப்பட்டது. 1956 முதல் 1961 வரையிலான காலக்கட்டத்தில் மொத்தமே 34 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன. 2011ம் ஆண்டு குட்டிங்ஸ் ஏல நிறுவனத்தால் 16,390,000 டாலருக்கு ஏலம் போனது.

1936 பென்ஸ் 540கே ஸ்பெஷல் ரோட்ஸ்டெர்

1936 பென்ஸ் 540கே ஸ்பெஷல் ரோட்ஸ்டெர்

1935 முதல் 1940 ம் ஆண்டுக்களுக்கு இடையில் தயாரிக்கப்பட்ட மாடல் இது. அந்த காலக்கட்டத்தில் அதிகம் விரும்பப்பட்ட காராக இருந்தது. பிரபலமான வார்னர் பிரதர்ஸ் சினிமா ஸ்டூடியோ நிறுவனத்தின் கையில் இருந்த கார் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 19ந் தேதி குட்டிங்ஸ் ஏல நிறுவனத்தால் 11,77,000 டாலருக்கு ஏலம் விடப்பட்டது.

1960 ஃபெராரி 250ஜிடி கலிஃபோர்னியா எல்டபிள்யூபி காம்படிசன் ஸ்பைடர்

1960 ஃபெராரி 250ஜிடி கலிஃபோர்னியா எல்டபிள்யூபி காம்படிசன் ஸ்பைடர்

இந்த நீண்ட... பெயர் கொண்ட ஃபெராரி கார் வட அமெரிக்க மார்க்கெட்டுக்காக மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காபர்ன் இந்த காரை வைத்திருந்தார். ஏலத்துக்கு வந்த இந்த கார் ரேஸ் மாடல். வெறும் 50 மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. இதுவும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9ந் தேதி குட்டிங்ஸ் நிறுவனம்தான் ஏலத்தில் விட்டது. 11,275,000 டாலருக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.

1968 ஃபோர்டு ஜி40

1968 ஃபோர்டு ஜி40

1964 முதல் 1969ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் தயாரிக்கப்பட்ட கார் மாடல் இது. நான்கு முறை 24 ஹவர்ஸ் லீ மேன்ஸ் கார் பந்தய போட்டியில் வெற்றி பெற்ற வரலாறு படைத்த மாடல். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17ந் தேதி ஆர்எம் ஏல நிறுவனத்தால் 11,000,000 டாலருக்கு விலை போனது.

1931 டியூசென்பெர்க்

1931 டியூசென்பெர்க்

1913 முதல் 1937ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட மாடல். இதன் ஜே வரிசை கார்கள் 1928 முதல் 1937 வரை தயாரிக்கப்பட்டன. இந்த கார்களின் தனித்துவம் என்னவெனில், இவை அனைத்தும் முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17ந் தேதி ஆர்எம் ஏல நிறுவனத்தால் 10,340,00 டாலருக்கு ஏலம் போனது.

1931 புகாட்டி ராயல் கெல்னர் கூபே

1931 புகாட்டி ராயல் கெல்னர் கூபே

புகாட்டி ராயல் கார் தற்போதைய ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் காரைவிட 20 சதவீதம் கூடுதல் நீளம், 25 சதவீதம் கூடுதல் எடை கொண்டது. அதிலும், மொத்தம் 6 ராயல் கார்களை மட்டுமே புகாட்டி தயாரித்தது. அதிலும் வேடிக்கை, 3 கெல்னர் கார்களை மட்டுமே அந்த நிறுவனத்தால் விற்பனை செய்ய முடிந்தது. அதில், 5வது காராக தயாரிக்கப்பட்ட கெல்னர் கடந்த 1987ம் ஆண்டு நவம்பர் 17ந் தேதி கிறிஸ்டி ஏல நிறுவனத்தால் ஏலம் விடப்பட்டது. 9,800,000 டாலருக்கு ஏலம் போனது.

1962 ஃபெராரி 330 டிஆர்ஐ/எல்எம் ஸ்பைடர்

1962 ஃபெராரி 330 டிஆர்ஐ/எல்எம் ஸ்பைடர்

பெராரி நிறுவனத்தால் முன்பக்க எஞ்சினுடன் தயாரிக்கப்பட்ட கடைசி ரேஸ் கார் இதுதான். கடந்த 2007ம் ஆண்டு மே20ல் ஆர்எம் ஏல நிறுவனத்தால் ஏலம் விடப்பட்டது. 9,281,250 டாலருக்கு விலை போனது.

1955 ஃபெராரி 410எஸ்

1955 ஃபெராரி 410எஸ்

1955ல் மொத்தம் 4 ஃபெராரி 410எஸ் கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. கரீரா பான்அமெரிக்கானா ரோட் ரேஸ் போட்டிக்காக தயாரிக்கப்பட்ட பிரத்யேக மாடல். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17ல் ஆர்எம் ஏல நிறுவனத்தால் ஏலத்தில் விடப்பட்டது. 8,250,00 டாலருக்கு ஏலம் போனது.

1937 புகாட்டி டைப் 57எஸ்சி அட்லான்டே கூபே

1937 புகாட்டி டைப் 57எஸ்சி அட்லான்டே கூபே

வித்தியாசமான டிசைன் கொண்ட இந்த புகாட்டி கூபே காரை 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 17ல் குட்டிங்ஸ் ஏல நிறுவனம் ஏலத்தில் விட்டது. 7,920,000 டாலருக்கு ஏலம் போனது.

1929 பென்ட்லீ புளோவர்

1929 பென்ட்லீ புளோவர்

கடந்த ஆண்டு ஜூன் 29ந் தேதி போன்ஹாம்ஸ் நிறுவனம் இந்த பென்ட்லீ காரை ஏலம் விட்டது. 7,906,745 டாலருக்கு ஏலம் போனது.

Most Read Articles
English summary
If you ever decide to get hold of a car at an auction, get ready to spend a premium, as the auctioneer charges a fee called a buyer's premium, anywhere between 5% to 20% in addition to the selling price of the car. Moreover, sometimes you are required to pay a seller's premium as well.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X