2014ம் ஆண்டில் 9 ஃபெராரி கார்கள் 900 கோடிக்கு ஏலம் விடப்பட்டு சாதனை!

கார் சேகரிப்பாளர்களிடம் ஃபெராரி கார்களுக்கு எப்போதுமே மவுசு அதிகம். அவற்றை பொக்கிஷங்களாக கருதி பாதுகாத்து வருகின்றனர். ஒவ்வொரு காருக்கும் அதன் வயசு ஏற, ஏற அதன் மதிப்பு பன்மடங்கு கூடுவதுதான் இதற்கு முக்கிய காரணம்.

இதனை மெய்ப்பிக்கும் விதத்தில், கடந்த ஆண்டு ஏலம் விடப்பட்ட 9 ஃபெராரி கார்கள் 900 கோடிக்கு ஏலம் போய் மலைக்க வைத்துள்ளது. அது எந்தெந்த கார்கள், அதன் ஏல மதிப்பு ஆகிய தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.


9. ஃபெராரி 250(1953)

9. ஃபெராரி 250(1953)

இத்தாலியில் 1927 முதல் 1957 வரை நடத்தப்பட்ட மைல் மிக்லியா என்ற நீண்ட தூர கார் பந்தயத்திற்காக வெளியிடப்பட்ட மாடல் இது. பினின் ஃபரீனா நிறுவனம் உடற்பகுதியை கட்டமைத்து கொடுத்தது. இந்த காரில் 237 எச்பி பவரை அளிக்கும் வி12 எஞ்சின் இருந்தது. மிகவும் அரிதான இந்த கார் கடந்த ஆண்டு போனிஹாம் நிறுவனத்தால் ஏலம் விடப்பட்டது. இந்திய மதிப்பில் ரூ.49,79 கோடிக்கு ஏலம் போய் அசத்தியது. பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் இந்த கார் கிட்டத்தட்ட 50 கோடிக்கு ஏலம் போன நிலையில், அடுத்தடுத்த ஸ்லைடுகளில் இருக்கும் கார்களின் விலை மயக்கமுறை செய்யும் என்பதில் ஐயமில்லை.

8. ஃபெராரி 275 ஜிடிபி/சி(1966)

8. ஃபெராரி 275 ஜிடிபி/சி(1966)

1964 முதல் 1968 வரை தயாரிப்பில் இருந்தது. இந்த காரில் 3.3 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது. 1966ம் ஆண்டு லீ மான்ஸ் கார் பந்தயத்தில் 8வது இடத்தை பிடித்தது. மொத்தம் 12 கார்கள் தயாரிக்கப்பட்டன. அதில், 10 பந்தய களத்திற்கான சிறப்பம்சங்களை கொண்டதாகவும், 2 கார்கள் சாதாரண சாலைகளில் இயக்குவதற்கான சிறப்பம்சங்களையும் கொண்டது. மிகவும் பிரத்யேகமான இந்த கார் இந்திய மதிப்பில் ரூ.49.79 கோடிக்கு ஏலம் போயுள்ளது.

7.ஃபெராரி 250ஜிடி எல்டபிள்யூபி(1958)

7.ஃபெராரி 250ஜிடி எல்டபிள்யூபி(1958)

ஆர்எம் ஏல நிறுவனத்தால் கடந்த ஆண்டு ஏலம் விடப்பட்ட இந்த கார் கலிஃபோர்னியா எல்டபிள்யூ வரிசையில் தயாரிக்கப்பட்ட 50 கார்களில் 11வது கார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காரில் 222.5 பிஎச்பி பவரை அளிக்கும் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.55.73 கோடிக்கு ஏலம் போனது.

6.ஃபெராரி ஜிடிபி/4(1967)

6.ஃபெராரி ஜிடிபி/4(1967)

இந்த ஃபெராரி கார் ரூ.64.46 கோடிக்கு ஏலம் போயுள்ளது. மொத்தம் 970 கார்கள் தயாரிக்கப்பட்டன. பினின் ஃபரீனா நிறுவனத்தால் டிசைன் செய்யப்பட்ட மாடல்.

5.ஃபெராரி 250எல்எம்

5.ஃபெராரி 250எல்எம்

ரூ.73.15 கோடிக்கு ஏலம் போய் வியக்க வைத்திருக்கிறது. இதுவும் ஆர்எம் ஏல நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. ஃபெராரி 250எல்எம் வரிசையில் தயாரிக்கப்பட்ட 30 கார்களில் இது 19வது கார்.

4.ஃபெராரி 250ஜிடி SWB கலிஃபோர்னியா(1961)

4.ஃபெராரி 250ஜிடி SWB கலிஃபோர்னியா(1961)

கடந்த ஆண்டு ஏலத்தில் விடப்பட்ட இந்த ஃபெராரி கார் ரூ.96.08 கோடிக்கு ஏலம் போனது. இங்கிலாந்தை சேர்ந்த பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் கிறிஸ் இவான்ஸ் இந்த காரை ஏலத்தில் எடுத்தார்.

3.ஃபெராரி 375 ப்ளஸ் ஸ்பைடர் காம்படிஷன்(1954)

3.ஃபெராரி 375 ப்ளஸ் ஸ்பைடர் காம்படிஷன்(1954)

1953 முதல் 1955 வரை தயாரிக்கப்பட்ட மிக பிரத்யேகமான ஃபெராரி மாடல் இது. இந்த காரில் 4,954சிசி வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது. பினின் ஃபரீனா நிறுவனம்தான் இந்த காரையும் வடிவமைத்து கொடுத்தது. மணிக்கு 299 கிமீ வேகத்தில் செல்லும் திறன் படைத்தாக வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு ரூ.116.57 கோடி விலையில் ஏலம் போனது.

2.ஃபெராரி 275 ஜிடிபி/சி

2.ஃபெராரி 275 ஜிடிபி/சி

ஆர்எம் ஏல நிறுவனத்தால் இந்த கார் ரூ.167.27 கோடிக்கு ஏலம் விடப்பட்டது. 320 எச்பி பவரை அளிக்கும் 3,286சிசி வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

1.ஃபெராரி 250ஜிடிஓ

1.ஃபெராரி 250ஜிடிஓ

உலகின் மிக அதிக விலை மதிப்புடைய கார் மாடல் இதுதான். இந்த கார் ரூ.241.49 கோடி விலையில் ஏலம் போய் மலைக்க வைத்துள்ளது. . கடந்த 1962 முதல் 1964ம் ஆண்டுகளுக்கு இடையில் 39 ஃபெராரி 250 ஜிடிஓ கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. லீ மான்ஸ் 24 ஹவர் ரேஸ் உள்ளிட்ட கார் பந்தயங்களுக்காக இந்த கார்களை ஃபெராரி தயாரித்தது. இந்த கார் இத்தாலியை சேர்ந்த ஃபெராரி கார் சேகரிப்பாளரும், ரேஸருமான ஃபேப்ரிஸோ வயோலடி என்பவரிடம் இருந்தது. கடந்த 1965ம் ஆண்டு இந்த காரை அவர் வாங்கினார். அதிக காலம் இந்த காரை வைத்திருந்த பெருமையும் அரையே சேரும். கடந்த 1962ல் பிரான்ஸில் நடந்த ரேஸ் ஒன்றில் பிரபல பனிச்சறுக்கு வீரரான ஹென்றி ஓரியல்லர் இந்த காரை ஓட்டியபோது விபத்துக்குள்ளாகி மரணமடைந்தார். பின்னர் இந்த கார் ஃபெராரி தொழிற்சாலையில் வைத்து மறுகட்டமைப்பு செய்யப்பட்டு பின்னர் ஏலத்தில் விலை உயர்ந கார் என் றபெருமையை தட்டிச் சென்றுள்ளது. இந்த கார்களில் 300 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட, இந்த கார் மணிக்கு 280 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது.இந்த கார்களுக்கு கண்ணை மூடிக் கொண்டு பல நூறு கோடிகளை கார் பிரியர்கள் கொட்டி கொடுத்து வாங்குவதால், இதனை கார்களின் மோனலிசா என்று ஆட்டோமொபைல் துறையினர் வர்ணிக்கின்றனர்.


Most Read Articles
English summary
Ferrari has released a list of cars that stood at the pinnacle of the auctions hammer in 2014. Here’s how they stand.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X