அசத்தலான உலகின் விலையுயர்ந்த டாப் 10 சொகுசு ஹெலிகாப்டர்கள்!

சுற்றுலா, மீட்புப் பணிகள், ராணுவம், தனி நபர் பயன்பாடு என்று பல்வேறு விதங்களில் வான்வழி போக்குவரத்தில் ஹெலிகாப்டர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகவும், மகத்தானதாகவும் இருக்கிறது.

அதில், தனி நபர் பயன்பாட்டுக்கான ஹெலிகாப்டர்கள் கூடுதல் சொகுசு வசதிகளுடன் கட்டமைக்கப்படுகின்றன. அதில், உலகின் மிகவும் விலையுயர்ந்த 10 சொகுசு ஹெலிகாப்டர் மாடல்களையும், அதன் சிறப்பம்சங்களையும் ஸ்லைடரில் காணலாம். ஒவ்வொரு ஹெலிகாப்டர் பற்றிய சிறப்பம்சங்கள் தலா இரண்டு ஸ்லைடுகளில் கொடுக்கப்பட்டுள்ளன.

10. யூரோகாப்டர் ஹெர்மிஸ் இசி 135

10. யூரோகாப்டர் ஹெர்மிஸ் இசி 135

ஜெர்மனியை சேர்ந்த ஏர்பஸ் ஹெலிகாப்டர் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கும் யூரோகாப்டர் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் மாடல். 1996ல் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 1,000க்கும் மேற்பட்ட யூரோகாப்டர் இசி135 ஹெலிகாப்டர்கள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றன. இதுவரை 500க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் ஏர் ஆம்புலன்ஸாக மருத்துவ துறையிலும் மற்றும் கண்காணிப்புப் பணிகளுக்காக காவல் துறையிலும் அதிக அளவில் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டிருக்கிறது. தனி நபர் பயன்பாட்டிற்கு தகுந்தவாறு, இன்டிரியர் கஸ்டமைஸ் செய்து தரப்படுகிறது.

Photo credit: Tim Felce/Wiki Commons

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

பல்வேறு மாடல்களில் கிடைப்பதுடன், அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. தனி நபர் பயன்பாட்டு மாடலில் இன்டிரியர் டிசைனுக்காக மட்டும் 1.8 மில்லியன் டாலர்கள் கூடுதலாக செலவாகும். ஒன்று அல்லது இரண்டு பைலட் மற்றும் 5 முதல் 7 பயணிகள் வரை செல்ல முடியும். ஒருமுறை முழுமையாக எரிபொருள் நிரப்பும்போது 636 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். மணிக்கு 286 கிமீ வேகத்தில் பறக்கும். 6 மில்லியன் டாலர் விலை கொண்டது. இந்திய மதிப்பில் ரூ.39 கோடி விலை மதிப்பு கொண்டது.

Photo credit: Heptagon/Wiki Commons

09. அகுஸ்டா வெஸ்ட்லேண்ட் ஏடபிள்யூ109 வெர்சேஸ் விஐபி

09. அகுஸ்டா வெஸ்ட்லேண்ட் ஏடபிள்யூ109 வெர்சேஸ் விஐபி

சொகுசு ஹெலிகாப்டர் மார்க்கெட்டில் மிகவும் பிரபலமான மாடல். 1976ல் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் உட்புறம் முழுவதுமாக வெர்சாஸ் லெதர் பயன்படுத்தப்பட்டிருப்பதுடன், மிக உன்னதமான இன்டிரியர் அமைப்பை பெற்றிருக்கிறது.

Photo credit: NJR ZA/Wiki Commons

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

ஏர் வெர்சாஸ் என்று அழைக்கப்படும் இந்த ஹெலிகாப்டர் அதிகபட்சமாக 964 கிமீ தூரம் வரை செல்லும். மணிக்கு 285 கிமீ வேகத்தில் பறக்கும். ஒரு ஹெலிகாப்டர் 6.3 மில்லியன் டாலர்கள், அதாவது 40.9 கோடி ரூபாய் மதிப்பு கொண்டது.

Photo credit: The Billionaire Shop

08. யூரோகாப்டர் மெர்சிடிஸ் பென்ஸ் இசி145

08. யூரோகாப்டர் மெர்சிடிஸ் பென்ஸ் இசி145

மெர்சிடிஸ் பென்ஸ் பிராண்டு பிரியர்களுக்கு ஏற்ற தனி நபர் பயன்பாட்டு வகை ஹெலிகாப்டர் மாடல். ஜெர்மானிய ஸ்போர்ட்ஸ் காரின் அனைத்து அம்சங்களையும் இந்த ஹெலிகாப்டரிலும் எதிர்பார்க்கலாம். 2002ல் அறிமுகம் செய்யப்பட்டது. இது நடுத்தர வகை ஹெலிகாப்டர் மாடல். இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த ஹெலிகாப்டரில் 9 பயணிகள் வரை செல்ல முடியும்.

Photo credit: Tim Felce/Wiki Commons

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

மணிக்கு 246 கிமீ வேகம் வரை பறக்கும். அதிகபட்சமாக 686 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். மேலும், தரையிலிருந்து 17,000 அடி உயரம் வரை பறக்கும் வல்லமை கொண்டது. 5.5 மில்லியன் டாலர்கள் விலை கொண்ட இந்த ஹெலிகாப்டரில் இன்டிரியர் வேலைப்பாடுகளுடன் சேர்த்து 7 மில்லியன் டாலர்கள் அடக்க விலையாகிறது. இந்திய மதிப்பில் ரூ.45.5 கோடி மதிப்பு கொண்டது.

Photo credit: Heptagon/Wiki Commons

யூரோகாப்டர் இசி 175

யூரோகாப்டர் இசி 175

2009ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஹெலிகாப்டர் அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் வசதி கொண்டது. இந்த ஹெலிகாப்டரில் 16 பேர் வரை வசதியாக அமர்ந்து பயணிக்க முடியும்.

Photo credit: Duch.seb/Wiki Commons

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

மணிக்கு 286 கிமீ வேகம் வரை பறக்கும் திறன் கொண்டது. அதிகபட்சமாக 555 கிமீ தூரம் வரை செல்லும். ஒரு ஹெலிகாப்டர் 7.9 மில்லியன் டாலர் மதிப்பு கொண்டது. இந்திய மதிப்பில் ரூ.51 கோடி மதிப்பு கொண்டது.

Photo credit: Vitaly V. Kuzmin/Wiki Commons

06. யூரோகாப்டர் இசி 155

06. யூரோகாப்டர் இசி 155

இந்த ஹெலிகாப்டரில் அதிகபட்சாமக 13 பயணிகள் வரை செல்ல முடியும். ஆனால், இந்த மாடல் பிசினஸ் க்ளாஸ் இருக்கைகள் கொண்டதாக கஸ்டமைஸ் செய்யப்பட்டால், அதிகபட்சமாக 6 முதல் 8 பேர் வரை பயணிக்க முடியும்.

Photo credit: Dirk Vorderstraße/Wiki Commons

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

மணிக்கு 322 கிமீ வேகம் வரை பறக்கும் வல்லமை கொண்டது. அதிகபட்சமாக 858 கிமீ தூரம் வரை செல்ல முடியும். 10 மில்லியன் டாலர்கள் விலை மதிப்பு கொண்டது. இந்திய மதிப்பில் ரூ.65 கோடி மதிப்பு கொண்டது.

05. சிகோர்ஸ்கை எஸ்- 76சி

05. சிகோர்ஸ்கை எஸ்- 76சி

பிளாக் ஹாக் என்று அழைக்கப்படும் இந்த ஹெலிகாப்டரில் அதிகபட்சமாக 12 பேர் வரை பயணிக்க முடியும். ஆனால், தனி நபர் பயன்பாட்டு மாடலாக கஸ்டமைஸ் செய்யும்போது, 4 பேர் அமர்ந்து செல்வதற்கான இருக்கை வசதி கொண்டதாக இருக்கும்.

Photo credit: Marcusroos/Wiki Commons

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

அதிகபட்சமாக மணிக்கு 286 கிமீ வேகத்தில் பறக்கும். 761 கிமீ தூரம் வரை செல்லலாம். 12.95 மில்லியன் டாலர் விலை மதிப்பு கொண்டது. இந்திய மதிப்பில் ரூ.84 கோடி மதிப்பு கொண்டது.

Photo credit: Check This

04. அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் ஏடபிள்யூ 139

04. அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் ஏடபிள்யூ 139

தீயணைப்பு, ராணுவ பயன்பாட்டில் அதிகம் இருக்கிறது. தனிநபர் பயன்பாட்டு மாடலாக மாற்றப்படும்போது, 8 பேர் வரை பயணிக்க முடியும்.

Photo credit: Aero Icarus/Wiki Commons

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

மணிக்கு 310 கிமீ வேகம் வரை பறக்கும். அதிகபட்சமாக 922 கிமீ தூரம் வரை செல்ல முடியும். ஒரு ஹெலிகாப்டர் 14.5 மில்லியன் டாலர்கள் விலை மதிப்பு கொண்டது. இந்திய மதிப்பில் ரூ.94.2 கோடியாகும்.

Photo credit: Aviapart Moscow

03. பெல் 525 ரெலன்ட்லெஸ்

03. பெல் 525 ரெலன்ட்லெஸ்

2012ம் ஆண்டு டல்லாஸ் நகரில் நடந்த ஹெலிகாப்டர் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. மிகவும் எதிர்பார்ப்போடு கோடீஸ்வர்கள் ஆர்டர் செய்து காத்திருக்கின்றனர். மிக தாராள இடவசதி கொண்ட இந்த ஹெலிகாப்டரில் அதிகபட்சமாக 16 முதல் 20 பேர் வரை பயணிக்க முடியும்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

மணிக்கு அதிகபட்சமாக 306 கிமீ வேகம் வரை எட்டிப்பிடிக்கும். அதிகபட்சமாக 926 கிமீ தூரம் வரை பறக்கும். ஒரு ஹெலிகாப்டரின் விலை 15 மில்லியன் டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்திய மதிப்பில் ரூ.97 கோடி. வரும் 2017ல் டெலிவிரி துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

02. சிகோர்ஸ்கை எஸ்- 92 விஐபி

02. சிகோர்ஸ்கை எஸ்- 92 விஐபி

அதிகபட்சமாக 9 பேர் வரை பயணிக்க முடியும். இதன் கேபின் மிக சிறப்பான இடவசதியை அளிக்கிறது. பல கோடீஸ்வரர்கள் இந்த ஹெலிகாப்டரின் இன்டிரியரில் தங்க முலாம் மற்றும் விலையுயர்ந்த கற்களை பதித்தும் கஸ்டமைஸ் செய்து வாங்குகின்றனர்.

Photo credit: Shimin Gu/Wiki Commons

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

மணிக்கு அதிதபட்சமாக 312 கிமீ வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட இந்த ஹெலிகாப்டர் அதிதபட்சமாக 956 கிமீ தூரம் வரை செல்லக்கூடியது. இன்டிரியர் வேலைப்பாடுகளை பொறுத்து, ஒரு ஹெலிகாப்டரின் விலை 17 மில்லியன் டாலர்களிலிருந்து 32 மில்லியன் டாலர்கள் வரை நிர்ணயிக்கப்படுகிறது. இந்திய மதிப்பில் ரூ.110 கோடி ஆரம்ப விலை கொண்டது.

Photo credit: junglekey

01. அகஸ்ட்டா வெஸ்ட்லேணட் ஏடபிள்யூ 101 விஐபி

01. அகஸ்ட்டா வெஸ்ட்லேணட் ஏடபிள்யூ 101 விஐபி

உலகின் மிகவும் சொகுசான ஹெலிகாப்டர் மாடலாக விளங்கும் இந்த ஹெலிகாப்டர் உலக அளவில் பிரபலமானது. அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அதிகாரப்பூர்வ ஹெலிகாப்டராக பயன்படுத்துகிறார். ஒரு பைலட், மூன்று பணியாளர்கள் செல்ல முடியும். ஆட்டோபைலட் சிஸ்டம் மூலமாக இயக்கும் வசதி கொண்டது. 6.5 மீட்டர் நீளமும், 2.3 மீட்டர் அகலமும், 1.91 மீட்டர் உயரமும் கொண்ட உடற்கூட்டை பெற்றிருக்கிறது. இதனால், உட்புறத்தில் மிக தாராள இடவசதியை அளிக்கிறது. அதிகபட்சமாக 24 பேர் செல்ல முடியும்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

மணிக்கு அதிகபட்சமாக 309 கிமீ வேகம் வரை செல்லும். அதிகபட்சமாக 1,389 கிமீ தூரம் வரை பறக்கும். ஒரு ஹெலிகாப்டரின் விலை 21 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் 136 கோடி விலை மதிப்பு கொண்டது.

Most Read Articles
English summary
There are few Helicopters which are considered as the Most Expensive Private Helicopters In The World. These Helicopters are special in the aspects of Design, Capacity, Performance, Safety features and Brand Value.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X