உலகின் விலையுயர்ந்த டாப்- 10 ஆடம்பர படகுகள்

By Saravana

கடந்த வாரம் உலகின் மிக பிரம்மாண்டமான சொகுசு சுற்றுலா கப்பல்களை பார்த்து ரசித்திருப்பீர்கள். இன்று உலகின் விலையுயர்ந்த ஆடம்பர படகுகளை காணலாம்.

நவீன வசதிகளுடன் மிதக்கும் மாளிகைகளாக வலம் வரும் இந்த ஆடம்பர படகுகளின் விலையும், வசதிகளும் பிரம்மிக்க வைக்கின்றன. இவற்றில் பல ஆடம்பர படகுகள் பில்லியனர்களின் கனவு உலகமாக இருக்கின்றன. உலகின் டாப்- 10 ஆடம்ர படகுகளை ஸ்லைடரில் காணலாம்.

10. தி ரைசிங் சன்

10. தி ரைசிங் சன்

இந்த ஆடம்பர படகின் முதல் உரிமையாளர் ஆரக்கிள் நிறுவனத்தின் சிஇஓ லாரி எல்லிசனுடையதாக இருந்தது. தற்போது இந்த படகு சினிமா துறையின் ஜாம்பவனான டேவிட் ஜெஃபின் வசம் இருக்கிறது. மிதக்கும் மாளிகை எந்ற பெயருடம் வலம் வரும் இந்த ஆடம்பர படகில் கூடை பந்து மைதானம், ஹெலிபேட் ஆகிய வசதிகள் கொண்டது. 5 தளங்கள் கொண்ட இந்த ஆடம்பர படகில் 82 அறைகள் உள்ளன. அதிகபட்சமாக மணிக்கு 53 கிமீ வேகத்தில் செல்லும். 200 மில்லியன் டாலர் மதிப்புடையது.

9. செவன் சீஸ்

9. செவன் சீஸ்

ஜுராஸிக் பார்க் புகழ் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் மெகா ஆடம்பர படகின் பெயர்தான் செவன் சீஸ். 200 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ஆடம்பர படகை டென்மார்க்கை சேர்ந்த ஓசியானோ ஷிப்யார்டில் உருவாக்கப்பட்டது. ஸ்பீல்பெர்க்கின் ரசனைக்கும், விருப்பத்திற்கும் ஏற்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. ஜிம், ஹெலிபேட் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் உள்ளன. 12 விருந்தினர்கள் தங்கும் வசதி கொண்ட இந்த ஆடம்பர படகில் விருந்தினர்களை உபசரிப்பதற்காக 26 சிப்பந்திகள் உள்ளனர்.

8. லேடி மயூரா

8. லேடி மயூரா

சவூதி அரேபியாவின் மெகா கோடீஸ்வரர் நஸீர் அல் ரஷீத்தின் ஆடம்பர படகுதான் லேடி மயூரா. இது 210 மில்லியன் டாலர் மதிப்புடையது. இந்த படகிலும் ஏராளமான சொகுசு வசதிகள் இருக்கின்றன. இது 105 மீட்டர் நீளமும், 7,700 டன் எடையும் கொண்டது.

7. அல் மிர்காப்

7. அல் மிர்காப்

இது 250 மில்லியன் டாலர் விலை மதிப்புடையது. கத்தார் பிரதம மந்திரி ஹமாத் பின் ஜாஸிம் பின் ஜாபர் அல் தானிக்கு சொந்தமானது. இதனை டிம் ஹெவுட் நிறுவனம் வடிவமைத்தது. பீட்டர்ஸ் சிஃபாபூ வெவெல்ஸ்ப்ளெத் யார்டில் கட்டப்பட்டது. 10 சூட் அறைகள் கொண்ட இந்த ஆடம்பர படகில் 24 விருந்தினர்கள் தங்கலாம். இதில் 2 விஐபி அறைகள் உரிமையாளருக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. அல் மிர்காப் படகில் சினிமா தியேட்டர், சூரிய குளியல் பகுதி, நீச்சல் குளம், ஹெலிபேட் போன்ற வசதிகள் உள்ளன. இது தற்போது இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா வசம் உள்ளது. இந்தியன் எம்ப்ரெஸ் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

 6. தில்பர்

6. தில்பர்

இது 263 மில்லியன் டாலர் விலை கொண்டது. ரஷ்யாவை சேர்ந்த அலிஷர் உஸ்மனோவ் என்ற தொழிலதிபருக்கு சொந்தமானது. 2008ம் ஆண்டு கட்டப்பட்டது. இதுவும் டிம் ஹெவுட் நிறுவனத்தால் டிசைன் செய்யப்பட்டது. 20 விருந்தினர்கள் தங்கும் வசதிகொண்ட இந்த ஆடம்பர படகில் 47 சிப்பந்திகள் உள்ளனர்.

 5. அல் சயீத்

5. அல் சயீத்

இது 300 மில்லியன் டாலர் விலை மதிப்புடையது. ஓமன் சுல்தான் காபூஸ் பின் சயீத் அல் சயீத்துக்கு சொந்தமானது. 2008ம் ஆண்டில் இது கட்டப்பட்ட போது உலகின் இரண்டாவது பெரிய ஆடம்பர படகு என்ற பெருமைக்குரியதாக இருந்தது. இதில், 70 பயணிகள் தங்குவதற்கான வசதியும், 154 பணியாளர்களும் உள்ளனர்.

4. சூப்பர் யாட்

4. சூப்பர் யாட்

ரஷ்ய பில்லியனர் அன்ட்ரேய் மெல்னிசென்கோவின் பிரத்யேக வடிவமைப்பு கொண்ட ஆடம்பர படகு இது. இதில், 14 விருந்தினர்கள் தங்க முடியும. 43 பணியாளர்களை கொண்டது.

3. துபாய்

3. துபாய்

இது 350 மில்லியன் டாலர் விலை மதிப்புடையது. 1996ல் இந்த ஆடம்பர படகை புருனே இளவரசர் ஜெஃப்ரி போல்கியாவுக்காக கட்டப்பட்டது. ஆனால், போதிய நிதி இல்லாத காரணத்தால் இந்த படகின் கட்டமைப்பு பணிகள் பாதியிலேயே கைவிடப்பட்டன. இதையடுத்து, 5 ஆண்டுகள் கழித்து இந்த படகை வாங்குவதற்கு ஐக்கிய அரபு எமிரேட் பிரதம மந்திரி ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்டம் விருப்பம் தெரிவித்து நிதி அளித்தார். இதைத்தொடர்ந்து, இந்த ஆடம்பர படகு மீண்டும் கட்டப்பட்டு 2001ல் டெலிவிரி கொடுக்கப்பட்டது. இந்த படகில், மசாஜ் மையம், நீச்சல் குளம், ஹெலிபேட் போன்ற வசதிகள் உள்ளன.

 2. எக்லிப்ஸ்

2. எக்லிப்ஸ்

இது 800 மில்லியன் டாலர் மதிப்புடைய உலகின் மிக விலையுயர்ந்த ஆடம்பர படகுகளில் ஒன்று. 528 அடி நீளம் கொண்ட இந்த ஆடம்பர படகில் 70 பணியாளர்கள் மற்றும் 24 விருந்தினர்கள் தங்குவதற்கான வசதி கொண்டது. இதில், இரண்டு ஹெலிபேடுகள் உள்ளன. ரஷ்ய பில்லியனர் ரோமன் அப்ரோமோவிச்சுக்கு சொந்தமானது. இதில், பல பாதுகாப்பு வசதிகள் மற்றும் கண்காணிப்பு வசதிகள் உள்ளன. ஜெர்மனியின் ஹம்பர்க்கில் கட்டப்பட்டது.

1. ஹிஸ்டரி சுப்ரீம்

1. ஹிஸ்டரி சுப்ரீம்

இது 4.8 பில்லியன் டாலர் மதிப்புடையது. மலேசியாவை சேர்ந்த பில்லியனருக்கு சொந்தமானது. இன்டிரியர் தங்கம், பிளாட்டினம் போன்றவற்றால் இழைக்கப்பட்டுள்ளது. மேலும், விலை மதிப்பற்ற கற்களும் பதிக்கப்பட்டுள்ளன. இதைவிட சுவாரஸ்யமான விஷயம், இந்த படகில் டைனோசர் எலும்புகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளதாம். இங்கிலாந்தை சேர்ந்த பிரபல படகு தயாரிப்பு நிறுவனம் இந்த ஆடம்பர படகை 3 ஆண்டுகளில் கட்டமைத்து கொடுத்துள்ளது.

Most Read Articles
English summary
Most Expensive Yachts in The World. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X