இந்த ஆண்டில் வாசகர்களால் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள் தொகுப்பு!

ஆட்டோமொபைல் துறையின் சுவாரஸ்யங்களையும், செய்திகளையும் வாசகர்களுக்கு உடனுக்குடன் அள்ளிக் கொணர்ந்து வருகிறது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம். இதுவரை எங்கும் படித்திராத, கண்டிராத, கேட்டிராத ஆட்டோமொபைல் துறை உலகின் சுவாரஸ்யங்களையும், நடப்புகளையும் வாசகர்களுக்கு வழங்கி வருகிறோம்.

இந்த நிலையில், இந்த ஆண்டில் வாசகர்களால் விரும்பி படிக்கப்பட்டு, அதிக பார்வைகளை அள்ளி வழங்கிய செய்திகளை தொகுத்து வழங்கியுள்ளோம். அந்த சுவாரஸ்யங்களையும், முக்கிய நிகழ்வுகளையும் அசைபோடும் விதமாக இந்த செய்தித் தொகுப்பு அமைகிறது.


சிறப்புத் தொகுப்பு

சிறப்புத் தொகுப்பு

அதிக பார்வைகளை பெற்ற செய்திகளை மாதவாரியாக தொகுத்து வழங்கியுள்ளோம். செய்தியின் இணைப்பும் ஒவ்வொரு ஸ்லைடரில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரியில் டாப் நியூஸ்

ஜனவரியில் டாப் நியூஸ்

கடந்த ஜனவரி மாதத்தில் வாசகர்கள் அதிகம் விரும்பி படித்த செய்தி என்பதுடன், பல வாசகர்கள் திரும்ப, திரும்ப படித்த செய்தி கேபிஎன் நிறுவனத்திற்கு ஸ்கானியா பஸ் டெலிவிரி கொடுக்கப்பட்ட செய்தி. அத்துடன், கோவாவில் நடந்த இந்தியன் பைக் வீக் திருவிழாவிற்கு டிரைவ்ஸ்பார்க் டீம் சென்ற பயணம் பற்றிய, சிறு செய்தித் தொகுப்பும் அதிக வாசகர்களால் விரும்பி படிக்கப்பட்டது. அந்த செய்திகளின் இணைப்பு கிழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

பிப்ரவரியில் டாப் நியூஸ்

பிப்ரவரியில் டாப் நியூஸ்

பிப்ரவரியில் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிலிருந்து டிரைவ்ஸ்பார்க் டீம் நேரடியாக தகவல்களை உடனுக்குடன் தகவல்களை வாசகர்களுக்கு வழங்கியது. டிரைவ்ஸ்பார்க் தளத்தின் 3 நிருபர்கள் வழங்கிய செய்தியை பெங்களூரிலுள்ள எமது செய்தி நிலையத்திலிருந்து வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கினோம். தினசரி அதிகபட்ச செய்திகளை வழங்கிய அந்த நேரத்தில், புதிய கார் மாடல்களின் அறிமுகங்கள் குறித்து வாசகர்கள் பேராவலுடன் படித்து தெரிந்துகொண்டனர். அதில், மாருதி செலிரியோ விற்பனைக்கு வந்த செய்தி அதிகபட்ச பார்வைகளை பெற்றது. அதற்கு அடுத்ததாக மஹிந்திரா நிறுவனத்தின் புதிய மாடல்கள் அறிமுகம் குறித்த செய்தி அதிக பார்வைகளை பெற்றது.

மார்ச்சில் டாப் நியூஸ்

மார்ச்சில் டாப் நியூஸ்

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் தாக்கத்திலிருந்து சற்று விடுபட்ட மார்ச் மாதத்தில், கடலில் மூழ்கிய டைட்டானிக் சொகுசு கப்பலின் மாதிரியிலேயே புதிய டைட்டானிக்-2 சொகுசு கப்பல் தயாராகி வருவது குறித்த சிறப்புச் செய்தியை வழங்கியிருந்தோம். டைட்டானிக் சினிமா அளவுக்கு வாசகர்கள் இந்த செய்திக்கு பெரும் வரவேற்பை அளித்தனர். அதுதவிர, ஹைதராபாத்தில் பார்வைக்கு நிறுத்தப்பட்டிருந்த உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏ380 விமானம் பற்றிய செய்தியும் அதிக பார்வைகளை பெற்றது.

ஏப்ரலில் டாப் நியூஸ்

ஏப்ரலில் டாப் நியூஸ்

வெயில் மண்டையை பிளந்த கோடைகாலத்துக்காக வெளியிடப்பட்ட கோடைகாலத்துக்கான டாப்- 10 ஆக்சஸெரீஸ் செய்தித் தொகுப்பு மிகுந்த வரவேற்பை பெற்றது. அத்துடன், உலகின் அபாயகரமான விமான ஓடுபாதைகள் குறித்த செய்தித்தொகுப்பும் அதிக பார்வைகளை குவித்தது.

மே மாத டாப் நியூஸ்

மே மாத டாப் நியூஸ்

காரில் அதிக மைலேஜ் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து வெளியிடப்பட்ட செய்தித்தொகுப்பும் அதிக பார்வைகளை பெற்றது. இதற்கடுத்து, மத்தியில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ பிஎம்டபிள்யூ கார் குறித்த செய்தித்தொகுப்பையும் வாசகர்கள் விரும்பி படித்த செய்தியானது.

ஜூன் டாப் நியூஸ்

ஜூன் டாப் நியூஸ்

மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே கார் விபத்தில் சிக்கி மரணமடைந்த நிலையில், அவர் சீட் பெல்ட் அணிந்து காரில் சென்றிருந்தால், உயிர் தப்பியிருக்கூடும் என்று செய்திகள் வெளியானது. அதன் அடிப்படையில் சீட் பெல்ட அணிவதன் அவசியம் குறித்து வெளியிடப்பட்ட செய்தியும் அதிக பார்வைகளை பெற்றது. அடுத்ததாக, காரிலிருந்து வரும் வித்தியாசமான வாடைகளும், பிரச்னைகளும் என்ற செய்தியும் வாசகர்களின் அமோக வரவேற்பை பெற்றது.

ஜூலை டாப் நியூஸ்

ஜூலை டாப் நியூஸ்

நீண்டகால பயன்பாட்டில் குறைவான பிரச்னைகள் கொண்ட சிறந்த கார்கள் பற்றி வெளியிடப்பட்ட செய்தி கடந்த ஜூலை மாதத்தின் டாப் நியூஸ் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. அதிக வாசகர்களால் படிக்கப்பட்ட செய்தியும் இதுதான்.

ஆகஸ்ட் மாத டாப் நியூஸ்

ஆகஸ்ட் மாத டாப் நியூஸ்

ஆகஸ்ட் மாதம் சாலையில் வரையப்பட்ட 3டி ஓவியங்கள் குறித்த செய்தித்தொகுப்பு அதிகபட்ச பார்வைகளை பெற்றது. இதற்கு இணையான பார்வைகளை உலகின் அபாயகரமான ரயில் பாதைகள் செய்தித்தொகுப்பு பெற்றது.

செப்டம்பர் மாத டாப் நியூஸ்

செப்டம்பர் மாத டாப் நியூஸ்

காரில் தவிர்க்க வேண்டிய சில ஆக்சஸெரீகள் பற்றி வெளியிடப்பட்ட செய்தியும், சிறப்பான பார்வைகளை பெற்றது.இதற்கடுத்ததாக, யானையின் கோரப்பிடியில் சிக்கிய போலோ கார் பற்றிய செய்தி அதிகபட்ச பார்வைகளை பெற்றது.

அக்டோபர் டாப் நியூஸ்

அக்டோபர் டாப் நியூஸ்

ரஷ்யாவில், விளம்பர பலகை பொருத்தப்பட்ட டிரக்குகளால் ஒரே நாளில் 517 விபத்துக்கள் ஏற்பட்டது குறித்து வெளியிடப்பட்ட செய்தி அதிக பார்வைகளை பெற்றது. இதற்கடுத்து, ஆபத்தை விளைவிக்கும் கார் ஆக்சஸெரீகள் குறித்த செய்தி வாசகர்களால் அதிகம் படிக்கப்பட்டிருக்கிறது.

நவம்பர் டாப் நியூஸ்

நவம்பர் டாப் நியூஸ்

துபாய் சாலைகளில் ஓர் ரவுண்டப் என்ற செய்தி எதிர்பார்ப்புகளை விஞ்சி பார்வைகளை பெற்றது. இதற்கடுத்து, இந்தியாவின் ஆரம்ப நிலை ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டிற்கு அடித்தளமிட்ட பைக் மாடல்கள் குறித்து எமது செய்தி பெரும் வரவேற்பை பெற்றது.

டிசம்பர் டாப் நியூஸ்

டிசம்பர் டாப் நியூஸ்

டட்சன் கோ ப்ளஸ் எம்பிவி காரின் சாதக, பாதகங்கள் குறித்து அலசும் வகையில் வெளியிடப்பட்ட முதல் பார்வை செய்தி, இந்த மாதம் அதிகபட்ச பார்வைகளை பெற்றிருக்கிறது. இதற்கடுத்து, விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் டாடா போல்ட் காரின் முதல் பார்வை பற்றிய செய்தியும் அதிகபட்ச பார்வைகளை பெற்றிருக்கிறது.

Most Read Articles
English summary
2014 has been a very eventful year. There has been lots of launches as well as tons of news, and many eye openers. Here are some of the best of 2014 from DriveSpark Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X