இந்த ஆண்டில் அதிகம் வாசிக்கப்பட்ட டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் டாப் செய்திகள்!

Written By:

ஆட்டோமொபைல் துறையின் நிகழ்வுகளையும், சுவாரஸ்யங்களையும், செய்திகளையும் வாசகர்களுக்கு உடனுக்குடன் அள்ளிக் கொணர்ந்து வருகிறது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம். இதுவரை எங்கும் படித்திராத, கண்டிராத, கேட்டிராத ஆட்டோமொபைல் துறை உலகின் சுவாரஸ்யங்களையும், நடப்புகளையும் வாசகர்களுக்கு வழங்கி வருகிறோம்.

இந்த நிலையில், இந்த ஆண்டில் வாசகர்களால் விரும்பி படிக்கப்பட்டு, கூகுள் அனலிடிக்ஸ் புள்ளி விபரங்கள் அடிப்படையில், அதிக பார்வைகளை அள்ளி வழங்கிய செய்திகளை தொகுத்து வழங்கியுள்ளோம். அந்த சுவாரஸ்யங்களையும், முக்கிய நிகழ்வுகளையும் அசைபோடும் விதமாக இந்த செய்தித் தொகுப்பு அமைகிறது.

ஜனவரி டாப் செய்திகள்

ஜனவரி டாப் செய்திகள்

ஜனவரியில் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வருகை தந்தபோது, அவரது ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம் குறித்து வெளியிடப்பட்ட செய்தித் தொகுப்பு அதிக பார்வைகளை பெற்று முதலிடத்தை பெற்றிருக்கிறது.

இரண்டாவதாக, இவர் டோணியும் இல்லை, கோலியும் இல்லை... யார் இவர்? என்ற தலைப்பில் எழுதப்பட்டிருந்த டக்கார் ராலியில் அசத்திய, முதல் இந்திய பைக் பந்தய வீரர் என்ற பெருமைக்குரிய சி.எஸ்.சந்தோஷ் பற்றிய செய்தித் தொகுப்பு அதிக பார்வைகளை பெற்றிருக்கிறது.

மூன்றாவதாக, லிட்டருக்கு 96.9 கிமீ மைலேஜ் தரும் புதிய பஜாஜ் பிளாட்டினா அறிமுகம் பற்றிய செய்தித் தொகுப்பு அதிக பார்வைகளை பெற்றது.

01. அணுகுண்டையும் ஊதித்தள்ளும் அமெரிக்க அதிபர் ஒபாமா விமானத்தின் ரகசிய பக்கம்

02.இவர் யார்னு தெரியுமா?

03. புதிய பஜாஜ் பிளாட்டினா பைக்

பிப்ரவரி டாப் செய்திகள்

பிப்ரவரி டாப் செய்திகள்

பிப்ரவரியில் கார்களின் ஆன்ரோடு விலை விபரத்தை அறிந்து கொள்ளும் சேவையை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் துவங்கியது. அதில், மாருதி ஸ்விஃப்ட் காரின் ஆன்ரோடு விலை பகுதி அதிக பார்வைகளை பெற்றிருக்கிறது.

இரண்டாவதாக, ஸ்விஃப்ட் அழகை சிதைத்த டிசி டிசைன் என்ற பெயரில் வெளியிடப்பட்ட, மாருதி ஸ்விஃப்ட் காரின் கஸ்டமைஸ் மாடல் குறித்த செய்தித் தொகுப்பு அதிக பார்வைகளை பெற்றிருக்கிறது.

மூன்றாவதாக, கோவாவில் நடந்த இந்தியா பைக் வீக் திருவிழாவின் ஹை-லைட்ஸ் செய்தித் தொகுப்பு அதிக பார்வைகளை பெற்றிருக்கிறது.

01.ஸ்விஃப்ட் காரின் தமிழக ஆன்ரோடு விலை

02. டிசி டிசைனின் கஸ்மடைஸ் ஸ்விஃப்ட்

03. இந்திய பைக் வீக் நிகழ்வின் ஹை-லைட்ஸ்

மார்ச்சில் டாப் செய்திகள்

மார்ச்சில் டாப் செய்திகள்

மார்ச் மாதத்தில், அவமானப்படுத்திய ஃபோர்டுக்கு கை கொடுத்த ரத்தன் டாடா என்ற செய்தித் தொகுப்பு அதிக பார்வைகளை பெற்றிருக்கிறது.

இரண்டாவதாக, ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் க்ராஸ்ஓவர் மாடலின் அதிகாரப்பூர்வ படங்கள் குறித்த செய்தித் தொகுப்பு அதிக பார்வைகளை பெற்றிருக்கிறது.

மூன்றாவதாக, பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் குறித்து நினைவுகூர்ந்து எழுதிய செய்தித் தொகுப்பு அதிக பார்வைகளை பெற்றிருக்கிறது.

01. பழசை மறந்து ஃபோர்டுக்கு உதவிய ரத்தன் டாடா

02. புதிய ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் க்ராஸ்ஓவர் படங்கள்

02. பஜாஜ் சேட்டக்கின் சிறப்பம்சங்கள்

ஏப்ரலில் டாப் செய்திகள்

ஏப்ரலில் டாப் செய்திகள்

ஏப்ரலை பொறுத்தவரை இந்த ஆண்டில் அதிக பார்வைகளை பெற்று டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் புதிய உச்சத்தை தொட்டது.

01. கடந்த 2014-15ம் நிதி ஆண்டில் அதிகம் விற்பனையான டாப்-10 இருசக்கர வாகனங்கள் குறித்த செய்தித் தொகுப்பு அதிக பார்வைகளை பெற்றிருக்கிறது.

இரண்டாவதாக, ஹோண்டாவின் ஜெட் விமானம் முதல்முறையாக வெற்றிகரமாக பறந்தது குறித்த செய்தித் தொகுப்பு இடம்பெற்றிருக்கிறது.

மூன்றாவதாக, இந்த பாலத்தை பார்த்தவுடனே கண்ணை கட்டுதா என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட செய்தித் தொகுப்பு ஏப்ரலில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.

01.டாப் 10 டூ வீலர்கள்

02.முதல் ஹோண்டா பயணிகள் ஜெட் விமானம்

03. வயிற்றில் புளியை கரைக்கும் பாலம்

மே மாத டாப் செய்திகள்

மே மாத டாப் செய்திகள்

மே மாதத்தில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானி ரூ.10 கோடியில் வாங்கிய குண்டு துளைக்காத கார் பற்றிய செய்தித் தொகுப்பு முதலிடத்தை பெற்றிருக்கிறது.

இரண்டாவதாக, இந்தியாவின் காப்பிகேட் கார்கள் பற்றிய செய்தித்தொகுப்பு அதிக பார்வைகளை பெற்றிருக்கிறது.

மூன்றாவதாக, பெங்களூர் போலீசில் மஹிந்திரா கவச வாகனம் வாங்கிய குறித்த செய்தித் தொகுப்பு பெற்றிருக்கிறது.

01.முகேஷ் அம்பானியின் புல்லட் புரூஃப் கார்

02.இந்தியாவின் அட்டக்காப்பி கார்கள்

03. மஹிந்திராவின் புதிய கவச வாகனம்

ஜூனில் டாப் செய்திகள்

ஜூனில் டாப் செய்திகள்

ஜூன் மாதத்தில், மாருதி ஸ்விஃப்ட் ஹைபிரிட் கார் மாடல் பற்றிய சிறப்பம்சங்களை விளக்கும் செய்தித் தொகுப்பு அதிக பார்வைகளை பெற்றிருக்கிறது.

இரண்டாவதாக, நடிகர் விஜய் கார் கலெக்ஷன் பற்றிய செய்தித் தொகுப்பு அதிக பார்வைகளை பெற்றிருக்கிறது.

முதல்வர் ஜெயலலிதாவின் கார்கள் பற்றிய செய்தித் தொகுப்பு மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.

01.லிட்டருக்கு 48 கிமீ தரும் ஸ்விஃப்ட் ஹைிபிரிட்

02.இளமை தளபதியின் கார்கள்

03. முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய கார்கள்

 ஜூலையில் டாப் செய்திகள்

ஜூலையில் டாப் செய்திகள்

ஜூலையில், விற்பனையில் இந்தியாவின் பரிதாககரமான கார்கள் என்ற செய்தித் தொகுப்பு அதிக பார்வைகளை பெற்று முதலிடத்தை பெற்றிருக்கிறது.

இரண்டாவதாக, வாகன இன்ஸ்யூரன்ஸ்களில் இருக்கும் மறைமுக விஷயங்களை பற்றி எடுத்துக்கூறும் செய்தித் தொகுப்பு அதிக பார்வைகளை பெற்றிருக்கிறது.

மூன்றாவதாக, யூஸ்டு மார்க்கெட்டில் டாப் 10 கார்கள் என்ற செய்தித் தொகுப்பு பெற்றிருக்கிறது.

01. விற்பனையில் கவலைக்கிடமான கார்கள்

02. வாகன இன்ஸ்யூரன்ஸின் இன்னொரு பக்கம்

03. இந்தியாவின் சிறந்த 10 பயன்படுத்தப்பட்ட கார்கள்

 ஆகஸ்ட்டில் டாப் செய்திகள்

ஆகஸ்ட்டில் டாப் செய்திகள்

ஆகஸ்ட் மாதத்தை பொறுத்தவரை மாருதி ஸ்விஃப்ட் காரை வாங்குவதை தவிர்ப்பதற்கான சில காரணங்கள் என்ற செய்தித் தொகுப்பு அதிக பார்வைகளை பெற்றிருக்கிறது.

அதற்கடுத்து, துபாயில் ஆண்டுதோறும் 3,000 கார்கள் அனாதையாக கைவிடப்படுவது குறித்த செய்தித் தொகுப்பு பெற்றிருக்கிறது.

மூன்றாவதாக, இந்தியாவின் விலையுயர்ந்த டாப்-10 கார்கள் குறித்த செய்தித் தொகுப்பு இடம்பிடித்துள்ளது.

01.வேண்டாமே மாருதி ஸ்விஃப்ட்

02.அனாதையாகும் சொகுசு கார்கள்

03. இந்தியாவின் காஸ்ட்லி கார்கள்

செப்டம்பரில் டாப் செய்திகள்

செப்டம்பரில் டாப் செய்திகள்

செம்படம்பரில், ரெனோ க்விட் கார் அறிமுகம் குறித்த செய்தித் தொகுப்பு அதிக பார்வைகளை பெற்று அசத்தியது.

இரண்டாவதாக, மாருதிக்கு நாலா பக்கமும் இடி என்ற செய்தித் தொகுப்பு அதிக பார்வைகளை பெற்றது.

மூன்றாவதாக, அரபு ஷேக்குகளுக்கு இணையான தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மோட்டார் உலகம் என்ற செய்தித் தொகுப்பு அதிக பார்வைகளை பெற்றது.

01.ரெனோ க்விட் விலை விபரம்

02. நாலா புறமும் நெருக்கடியில் மாருதி

03.முகேஷ் அம்பானியின் காஸ்ட்லி கார்கள்

அக்டோபரில் டாப் செய்திகள்

அக்டோபரில் டாப் செய்திகள்

அக்டோபரில் ரெனோ க்விட் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட் செய்தி அதிக பார்வைகளை பெற்றது.

இரண்டாவதாக, நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் முதல் கார் பற்றிய செய்தித் தொகுப்பு அதிக பார்வைகளை பெற்றிருக்கிறது.

மூன்றாவதாக, கார் கடனுக்கு எத்தனை ஆண்டுகள் மாதத் தவணைகள் போடுவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்த செய்தித் தொகுப்பு அதிக பார்வைகளை பெற்றிருக்கிறது.

01. ரெனோ க்விட் எப்படி என்பதை அலசும் கட்டுரை

02.வடிவேலுவின் முதல் கார் எது தெரியுமா?

03. கார் கடன் வாங்கும்போது EMI போடும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

நவம்பரில் டாப் செய்திகள்

நவம்பரில் டாப் செய்திகள்

நவம்பரில், புதிய தலைமுறை டொயோட்டா காரின் அதிகாரப்பூர்வ படங்கள் குறித்த செய்தி அதிக பார்வைகளை பெற்றிருக்கிறது.

அடுத்த ஆண்டு இந்தியா வரும் 14 புதிய மோட்டார்சைக்கிள்கள் பற்றிய எமது கட்டுரை அதிக பார்வைகளை பெற்று நவம்பரில் இரண்டாமிடத்தை பெற்றிருக்கிறது.

மூன்றாவதாக, கனமழையின்போது கார் ஓட்டும் முறைகளை விளக்கும் செய்தித் தொகுப்பு இடம்பெற்றிருக்கிறது.

01.புதிய டொயோட்டா கார் படங்கள்

02. 2016ல் வரும் புதிய பைக் மாடல்கள்

03. பூந்தமல்லியிலிருந்து அத்திப்பள்ளி வரை

டிசம்பரில் டாப் செய்திகள்

டிசம்பரில் டாப் செய்திகள்

டிசம்பரில், சென்னை வெள்ளத்தின்போது, வீடுகளில் சிக்கியவர்களை மஹிந்திரா ஜீப்பில் துணிச்சலாக சென்ற ஜீப் அலி செய்தித் தொகுப்பு அதிக பார்வைகளை பெற்றிருக்கிறது.

கார் பயணத்தை இனிமையாக்கும் இளையராஜாவின் டாப்-20 பாடல்கள் அடங்கிய செய்தித் தொகுப்பு அதிக பார்வைகளை பெற்று இரண்டாம் இடத்தை பெற்றிருக்கிறது.

வெள்ளத்தில் மூழ்கிய கார்களுக்கு இழப்பீடு கோரும் முறைகள் குறித்த செய்தித் தொகுப்பு அதிக பார்வைகளை பெற்றிருக்கிறது.

01.இடுப்பளவு தண்ணீரில் ஜீப் ஓட்டிய துணிச்சல்காரர்

02.கார் பயணங்களுக்கு ஏற்ற இளையராஜா ஹிட்ஸ்

03.வெள்ளப் பாதிப்பு காருக்கு இழப்பீடுக்கான வழிமுறைகள்

சமூக வலைதள பக்கங்கள்

சமூக வலைதள பக்கங்கள்

டிரைவ்ஸ்பார்க் தமிழ் ஃபேஸ்புக் பக்கம்

டிரைவ்ஸ்பார்க் தமிழ் டுவிட்டர் பக்கம்

 
English summary
Most Viwed Drivespark Tamil Articles In 2015.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark