முதல் பைக்குக்கு புதுப்பொலிவு கொடுக்க டோணி முடிவு!

ரூ.4,500க்கு முதலில் செகண்ட் ஹேண்ட் பைக் வாங்கியதாக இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் மஹேந்திர சிங் டோணி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சிறிய ஓய்வுக்குப் பின் தனது சொந்த ஊரான ராஞ்சி திரும்பிய அவர் டிவிட்டரில் இந்த செய்தியை பகிர்ந்து கொண்டுள்ளார்.

"எனது முதல் வேலையில் மாதச் சம்பளமாக ரூ.2,000 ஐ பெற்றேன். அதில், சிறிய தொகையை மாதாமாதம் சேமித்து ரூ.4,500க்கு செகண்ட் ஹேண்ட் பைக் வாங்கினேன் என்று அவர் அந்த செய்தியில் கூறியிருக்கிறார். மேலும், அந்த பைக்குக்கு விரைவில் புதுப்பொலிவு கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முதல் பைக்

முதல் பைக்

யமஹா ஆர்டி 350 பைக்கைத்தான் டோணி முதலில் விரும்பி வாங்கிய முதல் டூ வீலர்.

16 பைக்குகள்

16 பைக்குகள்

ரூ.4,500க்கு முதல் பைக்கை வாங்கிய டோணியிடம் இப்போது நின்ஜா, ஹெல்கேட் உள்பட அவரிடம் மொத்தம் 16 பைக்குகள் உள்ளனவாம்.

சென்னைக்கு 2 பைக்

சென்னைக்கு 2 பைக்

ராஞ்சியில் உள்ள பைக்குகள் தவிர சென்னையிலும், மும்பையிலும் தலா 2 பைக்குகள் நிறுத்தி வைத்துள்ளார். சென்னை வரும்போது அந்த பைக்குகளில் செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

பைக் ரேஸ் அணி

பைக் ரேஸ் அணி

பைக்குகள் வாங்கி வைத்து ஓட்டுவது நில்லாமல், சொந்தமாகவே பைக் ரேஸ் அணியையும் அவர் நடத்தி வருகிறார். 'எம்எஸ்டி ஆர்-என் ரேஸிங் டீம் இன்டியா' என்ற பெயரை அவர் "மஹி ரேஸிங் டீம் இன்டியா" என மாற்றம் செய்ததும் நினைவிருக்கலாம். இந்த அணியில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவும் ஒரு பார்ட்னர் என்பது குறிப்பிடத்தக்கது.

சைக்கிளையும் விடவில்லை

சைக்கிளையும் விடவில்லை

பைக்குகள் தவிர குறைந்த தூரம் மற்றும் மைதானத்திற்கு செல்வதற்கும், உடற்பயிற்சிக்காகவும் சைக்கிளில் செல்வதை விரும்புகிறார்.

Most Read Articles
English summary
India captain MS Dhoni, who is currently enjoying a break from cricket, plans to get his first motorbike restored.
Story first published: Monday, August 5, 2013, 11:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X