புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்!! வீடியோ...

மெர்சிடிஸ் பிராண்டின் சமீபத்திய அறிமுக மாடலான மேபக் ஜிஎல்எஸ்650 காரை மும்பையை சேர்ந்த இளம் தொழிலதிபர் ஒருவர் வாங்கியுள்ளார். வாங்கிய கையோடு அவர் காரினை சாலையில் இயக்கிவருவது தொடர்பான வீடியோவை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்!! வீடியோ...

மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ்650 என்ற செயல்திறன்மிக்க கார் இந்திய சந்தைக்கென வெறும் 50 யூனிட்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 50 யூனிட்களுக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டு, ஏற்கனவே அனைத்தும் விற்று தீர்க்கப்பட்டுவிட்டன.

புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்!! வீடியோ...

ரூ.2.43 கோடியை எக்ஸ்ஷோரூம் விலையாக பெற்றுவந்துள்ள இந்த மெர்சிடிஸ்-மேபக் காரினை இந்திய கோடிஸ்வரர்களும், சினிமா பிரபலங்களும் போட்டி போட்டுக்கொண்டு முன்பதிவு செய்துள்ளனர். இந்த வகையில் முன்பதிவு செய்து சமீபத்தில் பிரபல நடிகர் சோனு சூட் டெலிவிரி பெற்றிருந்தார்.

முன்பதிவு செய்த 50 நபர்களில் மற்றொருவர் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் அமித் சிங் என்பது மேல் உள்ள வீடியோவின் மூலம் தெரிய வருகிறது. சிஎஸ் 12 விலாக்ஸ் (Image Courtesy: CS 12 VLOGS) என்ற யுடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் மாலை, பூ அலங்காரங்களுடன் சாலையில் கம்பீரமாக நடைப்போட்டு வரும் மேபக் ஜிஎல்எஸ் 650 காரினை அமித் சிங் ஓட்டி வருவதை பார்க்கலாம்.

புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்!! வீடியோ...

கருப்பு மற்றும் வெள்ளை என்ற ட்யுல்-டோன் நிறத்தில் இந்த மெர்சிடிஸ் காரை வாங்கியுள்ள அமித் சிங் பாட்னாவை சேர்ந்தவர், மும்பையில் தொழில் செய்து வருகிறார். அமித் சிங்கிடம் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 உள்பட ஏகப்பட்ட சொகுசு கார்கள் உள்ளன.

புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்!! வீடியோ...

இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் உள்ள ஸ்டாண்டர்ட் மெர்சிடிஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவி காரின் அடிப்படையில் தான் இந்த மேபக் வெர்சன் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதேநேரம் ஸ்டாண்டர்ட் மாடலில் இருந்து வேறுபடுவதற்காக தோற்றத்திலும், செயல்திறனிலும் மெர்சிடிஸ் நிறுவனம் ஏகப்பட்ட மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.

புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்!! வீடியோ...

4-இருக்கை மற்றும் 5-இருக்கை தேர்வுகளில் விற்பனை செய்யப்படும் மேபக் ஜிஎல்எஸ்650 காரில் மூன்றாவது இருக்கை வழங்கப்படவில்லை. இந்த மேபக் காரில் 4.0 லிட்டர் வி8 என்ஜினை 48 வோல்ட் மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டத்துடன் மெர்சிடிஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.

புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்!! வீடியோ...

அதிகப்பட்சமாக 557 பிஎஸ் மற்றும் 730 என்எம் டார்க் திறன் வரையில் காருக்கு வழங்கக்கூடிய இந்த என்ஜின் அமைப்புடன் 4மேட்டிக் 4-சக்கர-ட்ரைவ் சிஸ்டம் மற்றும் 9-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்!! வீடியோ...

இந்த மெர்சிடிஸ்-பேமக் காரின் உட்புறத்தில் இரட்டை 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் லேட்டஸ்ட் எம்பக்ஸ் சிஸ்டத்துடன் தொடுத்திரை வழங்கப்படுகிறது. இவை மட்டுமின்றி சாகுஃபர் தொகுப்பில் பின் இருக்கைக்கும் தனியாக இன்ஃபோடெயின்மெண்ட் திரைகளை வாடிக்கையாளர் பெறலாம். சோனு சூட் வாங்கி இருந்த காரில் இத்தகைய திரைகளை முன் இருக்கையின் பின்பக்கத்தில் பார்த்திருந்தோம்.

Most Read Articles

English summary
Billionaire Amit Singh spotted in brand-new Mercedes-Maybach GLS650 [Video].
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X