மும்பையில் அதிவிரைவு மேம்பால சாலை திறப்பு: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

மும்பையில் 17 கிமீ நீளம் கொண்ட அதிவிரைவு மேம்பால சாலையை மஹாராஷ்டிர முதல்வர் பிருத்திவிராஜ் சவான் நேற்று திறந்து வைத்தார். இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மேம்பாலமான இது தெற்கு மும்பையையும், கிழக்கு மும்பையையும் இணைக்கிறது.

கட்டி முடிக்கப்பட்டும் மத்திய அமைச்சர்களின் தேதிக்காக மஹாராஷ்டிர அரசு காத்திருந்தது. இதற்கு பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, ஒருவழியாக அம்மாநில முதல்வரே திறந்து வைத்துவிட்டார். இந்த மேம்பாலம் திறக்கப்பட்டிருப்பது வாகன ஓட்டிகளிடமும், பொதுமக்களிடமும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பெரும் திட்டம்

பெரும் திட்டம்

கடந்த 2008ம் ஆண்டு ரூ.1,250 கோடி செலவில் இந்த சாலை அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் துவங்கின. தற்போது ரூ.850 கோடி முதலீட்டில் 14 கிமீ தொலைவு கொண்ட இந்த அதிவிரைவு சாலை முதல் கட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 14 கிமீ நீளமுடைய மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மீதமுள்ள மேம்பாலம் வரும் டிசம்பர் மாதத்தில் பயன்பாட்டுக்காக திறக்கப்படும்.

பயண நேரம்

பயண நேரம்

இந்த மேம்பாலத்தின் மூலம் செம்பூரிலிருந்து, சிஎஸ்டி ரயில் நிலையத்திற்கு ஒரு மணி நேரமாக இருந்த பயண நேரம் தற்போது 20 நிமிடங்களாக குறைந்துள்ளது. போக்குவரத்து நெரிசலுக்கும் தீர்வு கிடைத்துள்ளது.

சிக்னல் ஃப்ரீ

சிக்னல் ஃப்ரீ

16.8 கிமீ நீளம் கொண்ட இந்த மேம்பாலத்தில் சிக்னல்கள் கிடையாது என்பதுடன், சிறப்பு கட்டணங்களுடன் இல்லை என்பது வாகன ஓட்டிகளை மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 சுரங்கப் பாதைகள்

சுரங்கப் பாதைகள்

இந்த அதிவிரைவு சாலையில் அரை கிலோமீட்டர் தூரத்துக்கு விசேஷமான இரட்டை சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

4 நுழைவாயில்கள்

4 நுழைவாயில்கள்

இந்த மேம்பாலத்தில் செல்வதற்காக 4 நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆட்டோவுக்கு அனுமதி இல்லை

ஆட்டோவுக்கு அனுமதி இல்லை

பாதுகாப்பு கருதி இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோரிக்ஷாக்களுக்கு இந்த மேம்பாலத்தில் செல்வதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.

 வேகக்கட்டுப்பாடு

வேகக்கட்டுப்பாடு

இந்த மேம்பாலத்தில் அதிகபட்சமாக 60 கிமீ வரை மட்டுமே செல்ல போலீசார் அனுமதி கொடுத்துள்ளனர்.

Most Read Articles
English summary
Country's second longest Mumbai freeway was inaugurated by Maharashtra Chief Minister Prithviraj Chavan yesterday.The Eastern Freeway, 17 kms long, and signal-free, will drastically reduce travel time between South Mumbai.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X