Just In
- 2 hrs ago
ஸ்கோடா ஆக்டேவியாவில் புதிய ஸ்போர்ட்லைன் வேரியண்ட்!! புதுமையான தோற்றத்தில் கொண்டுவரப்பட்டது...
- 9 hrs ago
மொத்தமாக மின்சார வாகனங்களின் பக்கம் சாயும் சீனர்கள்!! இவி விற்பனை ஒரேடியாக 279% அதிகரிப்பு!
- 11 hrs ago
சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவரும் பஜாஜ்!! விலை உயரவுள்ளதா?
- 14 hrs ago
டோல்கேட் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க தனியாக சாலை அமைத்த மக்கள்!
Don't Miss!
- News
கொரோனா தடுப்பூசி திருவிழா.. முதல் நாளில் 27 லட்சம் பேருக்கு தடுப்பூசி.. மத்திய அரசு தகவல்!
- Sports
எவ்வளவு திமிர்.. அவரை ஓரம்கட்டிட்டு இப்ப போய் புலம்பினா எப்படி? வார்னரை வறுத்தெடுக்கும் பேன்ஸ்!
- Finance
தொலைந்து போன ஏடிஎம்மினை எப்படி பிளாக் செய்வது.. கனரா வங்கியில் மிக எளிது..!
- Movies
'மாநாடு' சிம்பு, வெங்கட் பிரபுவுக்கு பெரிய மைக் கல்லா இருக்கும்...சொல்றது இவர் தான்
- Lifestyle
தமிழ் புத்தாண்டைப் பற்றிய வியப்பூட்டும் தகவல்கள்!
- Education
ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சன்னி லியோன் கணவர் கார் நம்பரை தனது காரில் பயன்படுத்தி இளைஞர் செய்த காரியம்... நடந்ததை கேட்டு ஆடிப்போன போலீஸ்
பிரபல நடிகை சன்னி லியோனின் கணவருக்கு சொந்தமான காரின் பதிவு எண்ணை இளைஞர் ஒருவர் தனது காரில் பயன்படுத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் மிக முக்கியமான தொழில் அதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடாவிற்கு சொந்தமான காரின் பதிவு எண்ணை பெண் ஒருவர் தனது வாகனத்தில் மோசடியாக பயன்படுத்தி வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன் அவர் காவல் துறையினரிடம் சிக்கினார். அதற்குள்ளாக அதே போன்றதொரு பரபரப்பான சம்பவம் தற்போது மீண்டும் ஒரு முறை நடைபெற்றுள்ளது.

இம்முறை சிக்கிய நபர், பிரபல நடிகையான சன்னி லியோனின் கணவருடைய காரின் பதிவு எண்ணை மோசடியாக தனது காரில் பயன்படுத்தி வந்துள்ளார். இதனை சன்னி லியோனின் கார் ஓட்டுனர் எதேச்சையாக பார்த்துள்ளார். இதன்பின் அவர் அளித்த புகாரின் பேரில், 38 வயதான அந்த நபரை மும்பையில் உள்ள வெர்சோவா காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நபரின் பெயர் பியூஷ் சென் என்பது தெரியவந்துள்ளது. அவர் தனக்கு சொந்தமான மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்யூவி ரக காரில், சன்னி லியோனின் கணவருக்கு சொந்தமான காரின் பதிவு எண்ணை பயன்படுத்தி வந்துள்ளார். ஆனால் பியூஷ் சென்னுக்கு சொந்தமான கார் எது? என்பது சரியாக தெரியவில்லை.

அது மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் எஸ்யூவி ரக கார் என்று மட்டுமே காவல் துறை குறிப்பிட்டுள்ளது. அனேகமாக அது ஜிஎல் 350 காராக இருக்கலாம் என கூறப்படுகிறது. இங்கே ஆச்சரியமளிக்கும் விஷயம் என்னவென்றால், சன்னி லியோனின் கணவர் டேனியல் வெபர் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல் 350 காரைதான் வைத்துள்ளார்.

சன்னி லியோன்-டேனியல் வெபர் தம்பதியினர் குடும்பத்துடன் வெளியில் செல்வதற்கு அடிக்கடி அந்த காரை பயன்படுத்தி வருகின்றனர். அதன் பதிவு எண்ணைதான் பியூஷ் சென் தனது காரில் மோசடியாக பயன்படுத்தியுள்ளார். ஆனால் பியூஷ் சென் எவ்வளவு காலமாக இப்படி மோசடியாக பதிவு எண்ணை பயன்படுத்தி வருகிறார்? என்பதை காவல் துறையினர் இன்னும் உறுதி செய்யவில்லை.

உங்கள் காருக்கு ஒதுக்கப்பட்ட பதிவு எண்ணுக்கு பதிலாக ஏன் சன்னி லியோனின் கணவருக்கு சொந்தமான காரின் பதிவு எண்ணை பயன்படுத்தி வந்தீர்கள்? என பியூஷ் சென்னிடம் காவல் துறையினர் கேள்வி எழுப்பினர். இதற்கு பியூஷ் சென், இந்த பதிவு எண் அதிர்ஷ்டமானதாக இருக்கும் எனக்கருதியதால், இவ்வாறு செய்து விட்டேன் என கூறியுள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் போக்குவரத்து விதிமுறைகளில் ஈடுபட்டதாக சன்னி லியோனின் கணவர் டேனியல் வெபருக்கு சில இ-சலான்கள் வந்துள்ளன. ஆனால் இந்த விதிமுறை மீறல்களை உண்மையில் செய்தது பியூஷ் சென்தான். டேனியல் வெபருக்கு சொந்தமான காரின் பதிவு எண்ணை அவர் மோசடியாக பயன்படுத்தியதால், டேனியல் வெபருக்கு இ-சலான்கள் சென்றுள்ளன.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள பியூஷ் சென், மும்பையில் உள்ள கல்யாண் பகுதியை சேர்ந்தவர். பியூஷ் சென் மோசடியாக பதிவு எண்ணை பயன்படுத்தி வந்த நிலையில், அவரது அதிர்ஷ்டம் சமீபத்தில் முடிவுக்கு வந்தது. ஏனெனில் அந்தேரி பகுதியில் பியூஷ் சென்னின் காரை, சன்னி லியோனின் கார் ஓட்டுனர் அக்பர் கான் பார்த்துள்ளார்.

உடனடியாக அங்கிருந்த காவல் துறையினரிடம் அக்பர் கான் இதுகுறித்து புகார் அளித்தார். இதன் பேரில் காரின் ஆவணங்களை காட்டுமாறு பியூஷ் சென்னிடம் காவல் துறையினர் கேட்டனர். பியூஷ் சென் தனது காரின் உண்மையான ஆவணங்களை காரிலேயே வைத்திருந்தார். இதை பார்த்ததும் காவல் துறையினர் அதிர்ச்சியடைந்து விட்டனர்.

ஏனெனில் ஆவணங்களில் இருந்த பதிவு எண்ணும், பியூஷ் சென் தனது காரில் பயன்படுத்தி வந்த பதிவு எண்ணும் வெவ்வேறாக இருந்தது. இதன்பின் காவல் துறையில் அளித்த புகார் குறித்து டேனியல் வெபருக்கு, அக்பர் கான் தகவல் அளித்துள்ளார். இதன் பேரில் டேனியல் வெபர் தனது காரின் ஆவணங்களுடன் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்.

தற்போது பியூஷ் சென் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். ஆனால் இந்தியாவில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறுவது இது முதல் முறை கிடையாது. நாங்கள் ஏற்கனவே கூறியபடி, ரத்தன் டாடாவிற்கு சொந்தமான காரின் பதிவு எண்ணை பெண் ஒருவர் பயன்படுத்தி வந்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அவர் சிக்கினார். பியூஷ் சென் கூறிய அதே காரணத்தைதான் அந்த பெண்ணும் காவல் துறையினரிடம் தெரிவித்தார். ரத்தன் டாடாவின் காரின் பதிவு எண் தனக்கு ராசியானது என்பதால், தனது காருக்கு ஒதுக்கப்பட்ட பதிவு எண்ணுக்கு பதிலாக, அவருடைய காரின் பதிவு எண்ணை பயன்படுத்தியதாக அந்த பெண் கூறினார். இந்த சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.