ஃபோர்டு மஸ்டாங் கார் வாங்கினார் இசையமைப்பாளர் அனிருத்!

Written By:

தனது துள்ளல் இசையை பட்டித் தொட்டி எங்கும் தெறிக்கவிட்டு வரும் இளம் இசையமைப்பாளர் அனிருத் கார் ஆர்வலர் என்பது தெரிந்த விஷயம்தான். ஓய்வு நேரத்தில் அமெரிக்கா சென்று ஃபெராரி காரை வாடகை எடுத்து ஓட்டும் அளவுக்கு கார்கள் மீது பிரியம் வைத்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபோர்டு மஸ்டாங் ஸ்போர்ட்ஸ் காரை அனிருத் வாங்கி உள்ளார்.

சமீபத்தில்தான் நடிகர் தனுஷ் கறுப்பு நிற ஃபோர்டு மஸ்டாங் காரை வாங்கிய நிலையில், தற்போது அனிருத் நீல நிற ஃபோர்டு மஸ்டாங் காரை வாங்கி பூஜை போட்டுள்ளார். இந்த காரை நடிகர்கள் போட்டி போட்டு வாங்குவதற்கான விஷயங்களையும், காரணங்களையும் தொடர்ந்து காணலாம்.

விசேஷ வகை

விசேஷ வகை

அமெரிக்காவின் கார் தயாரிப்பு பாரம்பரியத்தை பரைசாற்றும் ஸ்போர்ட்ஸ் ரக கார்கள் மஸில் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. உலகின் பிற ஸ்போர்ட்ஸ் கார் மாடல்களிலிருந்து அமெரிக்காவின் மஸில் ரக ஸ்போர்ட்ஸ் கார்களின் வடிவமைப்பே தனித்துவமாக இருக்கின்றன. பல தசாப்தங்களுக்கு மேல் அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கூடியதாக இருந்த கார் இப்போது உலக அளவில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், உலகின் மிக வேகமாக வளரும் மார்க்கெட்டாக கருதப்படும் இந்தியாவிலும் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது.

பாரம்பரியம்

பாரம்பரியம்

இந்த கார் தயாரிப்புக்கு வந்து 50 ஆண்டுகளை கடந்து பொன்விழா கண்டு விட்டது. அதாவது, மிக நீண்ட பாரம்பரியம் கொண்ட கார். கால மாற்றத்துக்கு தக்கவாறு வடிவமைப்பிலும், தொழில்நுட்பத்திலும் அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 6-ம் தலைமுறை கார் மாடலாக இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த காருக்கு உலக அளவில் ரசிகர்கள் உண்டு.

 வலது பக்க ஸ்டீயரிங் வீல்

வலது பக்க ஸ்டீயரிங் வீல்

கிட்டத்தட்ட 50 ஆண்டுகாலமாக இடது பக்க ஸ்டீயரிங் வீல் அமைப்பு கொண்ட மாடலில் அமெரிக்காவில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. சில வெளிநாடுகளுக்கு மட்டும் அனுப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2014ம் ஆண்டு 50வது ஆண்டு நிறைவு பெற்றதற்கான பொன்விழாவை கொண்டாடும் விதத்தில் புதிய தலைமுறை மாடல் வெளியிடப்பட்டது. முதல்முறையாக அப்போது வலது புற ஸ்டீயரிங் வீல் அமைப்புடைய மாடலும் வெளியிடப்பட்டது. இதனால், இந்தியாவை சேர்ந்த ரசிகர்களும், வாடிக்கையாளர்களும் இந்த காரின் சுவையை பருக வாய்ப்பு கிட்டியிருக்கிறது.

பவர்ஃபுல் எஞ்சின்

பவர்ஃபுல் எஞ்சின்

இந்த வடிவத்தில் மிரட்டலாக இருப்பது போன்றே, இதன் எஞ்சினும் மிக சக்திவாய்ந்ததாக இருக்கிறது. வெளிநாடுகளில் மூன்றுவிதமான எஞ்சின் மாடல்களில் கிடைக்கிறது. இந்தியாவில் வந்திருக்கும் மாடலில் 395 பிஎச்பி பவரையும், 542 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 5.0 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. கிட்டத்தட்ட 400 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருப்பதால், ஓட்டும்போது உற்சாகத்தை அள்ளி வழங்கும்.

வேகம்

வேகம்

ஃபோர்டு மஸ்டாங் கார் அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. 0-100 கிமீ வேகத்தை வெறும் 4.8 வினாடிகளில் எட்டிவிடும். 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலமாக எஞ்சின் சக்தி சக்கரங்களுக்கு கடத்தப்படுகிறது. இந்த காரில் பேடில் ஷிஃப்ட் மூலமாக கியர் மாற்றும் வசதி உள்ளது.

மைலேஜ்

மைலேஜ்

இந்த காரின் மைலேஜ் பற்றி பேதுவது முறையாக இருக்காது. இருப்பினும், எமது வாசகர்களுடன் இந்த காரின் மைலேஜ் விபரத்தை பகிர்ந்து கொள்கிறோம். சக்திவாய்ந்த எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த கார் லிட்டருக்கு 7.4 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. அப்படியானால், நடைமுறையில் லிட்டருக்கு 5 கிமீ மைலேஜ் தரும் என்று நம்பலாம். இது தனுஷ் மற்றும் அனிருத்துக்கு பிரச்னையாக இருக்காது.

விசேஷ நுட்பம்

விசேஷ நுட்பம்

இந்த காரில் லைன் லாக் என்ற தொழில்நுட்ப வசதி உள்ளது. டிரிஃப்ட் செய்யும்போது இதன் முன்சக்கரங்களை பிரேக் மூலமாக சுழல விடாமல் தடுத்து, பின்சக்கரங்களை மட்டும் சுழல விடும் வசதி இது. இந்த வசதியை தனுஷ் மற்றும் அனிருத் பயன்படுத்துவார்களா என்பது தெரியவில்லை. ஆனால், டிரிஃப்ட் வித்தை தெரிந்தவர்களை வைத்து சுழல விட்டு, அனுபவிக்கும் வாய்ப்புள்ளது.

வசதிகள்

வசதிகள்

இந்த காரில் பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் நிரம்ப உள்ளன. இருள் வேளைகளில் தானாக ஒளிரக்கூடிய ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் வசதி, அருகில் வாகனங்களை உணர்ந்து கொண்டு வேகத்தை கூட்டி குறைத்து செல்லும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி, பாக்கெட்டில் சாவியை வைத்துக் கொண்டு கார் எஞ்சினை ஸ்டார்ட் செய்வதற்கான புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி, மழை நேரத்தில் தானாக இயங்கும் ஆட்டோமேட்டிக் வைப்பர் என இந்த பட்டியல் நீள்கிறது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

பாதுகாப்பு வசதிகளுக்கும் குறைவில்லை. இந்த காரில் விபத்தின்போது பயணிகளை காப்பாற்றும் ஏர்பேக்குகள், நவீன பிரேக்கிங் சிஸ்டம், டயரில் காற்றழுத்தம் குறித்து எச்சரிக்கும் வசதிகள் உள்ளன.

விலை விபரம்

விலை விபரம்

ரூ.65 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை கொண்டதாக இந்தியா வந்தது. ஆனால், வரிகள் உட்பட இந்த காரின் விலை ரூ.70 லட்சத்தை தாண்டும் வாய்ப்புள்ளது. அதேநேரம், அமெரிக்காவில் இந்த கார் ரூ.25 லட்சம் என்ற இந்திய மதிப்பில்தான் விற்பனையாகிறது. ஆனால், இந்த கார் இறக்குமதி மாடலாக இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளதும், ரூபாய் மதிப்பும் சேர்ந்து அதிக விலை கொண்ட மாடலாக இதனை மாற்றியிருக்கிறது.

புதிய டாடா டிகோர் காரின் படங்கள்!

அடுத்த மாதம் விற்பனைக்கு வரும் புதிய டாடா டிகோர் காம்பேக்ட் செடான் காரின் கான்செப்ட் மாடலின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat #ford
English summary
Music Director Anirudh Gets New Ford Mustang Car.
Story first published: Thursday, February 9, 2017, 14:18 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark