கோவை சாலைகளை கிடுகிடுக்க வைத்த போர்ஷே கார்... ஓட்டியது நரேன் கார்த்திகேயன்... அவ்வளவு வேகமாக எங்கு சென்றார்?

By Staff

இந்தியாவின் முதல் ஃபார்முலா-1 கார் பந்தய வீரர் என்ற பெருமைக்குரிய நரேன் கார்த்திகேயன் தனது சொந்த ஊரான கோவையில் போர்ஷே சூப்பர் காரில் அதி விரைவாக சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் ஏன் அவசரமாக தனது காரில் சென்றார் என்ற விபரங்களையும், வீடியோவையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

கோவையில் போர்ஷே சூப்பர் காரில் பறந்த நரேன் கார்த்திகேயன்... காரணம் இதுதான்!

இந்தியாவின் மிகவும் பிரபலமான கார் பந்தய வீரரான நரேன் கார்த்திகேயன் கோவையை சேர்ந்தவர். கார் பந்தய ஓட்டுதல் அனுபவத்தில் மிகவும் கைதேர்ந்தவராக இருந்து வரும் நரேன் கார்த்திகேயன், சொந்தமாக போர்ஷே 911 ஜிடி3 காரை பயன்படுத்தி வருகிறார்.

கோவையில் போர்ஷே சூப்பர் காரில் பறந்த நரேன் கார்த்திகேயன்... காரணம் இதுதான்!

பந்தய கார்களை ஓட்டும் அவரது கைகளுக்கு இந்த போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார் சிறந்த உணர்வை தருவதே காரணமாக இருக்கலாம். மேலும், தனது விருப்பப்படி அந்த காரில் பல்வேறு மாறுதல்கள் மற்றும் கூடுதல் ஆக்சஸெரீகளையும் பொருத்தி பயன்படுத்தி வருகிறார்.

கோவையில் போர்ஷே சூப்பர் காரில் பறந்த நரேன் கார்த்திகேயன்... காரணம் இதுதான்!

இந்த நிலையில், பிரபல எழுத்தாளரான சேத்தன் பகத் அண்மையில் கோவை வந்துள்ளார். அப்போது நரேன் கார்த்திகேயனை சந்தித்து பேசி இருக்கிறார். இந்த சந்திப்பு முடிந்தவுடன் சேத்தன் பகத்தை தனது போர்ஷே சூப்பர் காரில் நரேன் கார்த்திகேயன் விமான நிலையத்தில் கொண்டு விட்டுள்ளார்.

கோவையில் போர்ஷே சூப்பர் காரில் பறந்த நரேன் கார்த்திகேயன்... காரணம் இதுதான்!

காரில் செல்லும்போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் சேத்தன் பகத் வெளியிட்டுள்ளார். அதில், நரேன் கார்த்திகேயன் போர்ஷே சூப்பர் காரில் விமானம் செல்வதாக அவர் குறிப்பிடுகிறார்.

கோவையில் போர்ஷே சூப்பர் காரில் பறந்த நரேன் கார்த்திகேயன்... காரணம் இதுதான்!

மேலும், சரியான நேரத்தில் விமானத்தை பிடிக்க இந்த கார் சிறந்ததாக இருக்கும் என்றும் அவர் தெரிவிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.

கோவையில் போர்ஷே சூப்பர் காரில் பறந்த நரேன் கார்த்திகேயன்... காரணம் இதுதான்!

மேலும், நரேன் கார்த்திகேயனின் கைகளில் அந்த போர்ஷே கார் கோவை சாலைகளில் உறுமிச் செல்வதையும் கேட்க முடிகிறது. கோவை வந்த சேத்தன் பகத் இந்த விஷயம் குறித்து புலாகாங்கிதத்துடன் தனது வீடியோவில் பதிவு செய்துள்ளார்.

கோவையில் போர்ஷே சூப்பர் காரில் பறந்த நரேன் கார்த்திகேயன்... காரணம் இதுதான்!

நரேன் போர்ஷே கார்

கடந்த 2018ம் ஆண்டு நரேன் கார்த்திகேயன் போர்ஷே 911 ஜிடி3 சூப்பர் காரை வாங்கினார். இந்த கார் ரூ.3 கோடி விலை மதிப்பு கொண்டது. மிகவும் தனித்துவமான அம்சங்கள் கொண்ட இந்த காரை வாங்கி முதல்கட்ட வாடிக்கையாளர்களில் நரேன் கார்த்திகேயனும் ஒருவராக இருந்தார்.

மேலும், இந்த கார் பொது சாலைகளில் பயன்படுத்துவதற்கு தக்க அம்சங்களையும், பந்தய களங்களில் பயன்படுத்துவதற்கான விசேங்களையும் பெற்றிருக்கிறது. இதனால்தான் கார் பந்தய வீரரான நரேன் கார்த்திகேயன் இந்த காரை தேர்வு செய்து வாங்கியுள்ளார்.

கோவையில் போர்ஷே சூப்பர் காரில் பறந்த நரேன் கார்த்திகேயன்... காரணம் இதுதான்!

இந்த செயல்திறன் மிக்க போர்ஷே 911 ஜிடி3 சூப்பர் காரில் 6 சிலிண்டர்கள் கொண்ட 4.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 493 பிஎச்பி பவரையும், 540 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. மணிக்கு 320 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.

கோவையில் போர்ஷே சூப்பர் காரில் பறந்த நரேன் கார்த்திகேயன்... காரணம் இதுதான்!

சேத்தன் பகத் வீடியோவில் இந்த கார் 300 கிமீ வேகம் செல்லும் என்பதையும் நரேன் கார்த்திகேயன் குறிப்பிடுகிறார். இந்த காரின் சைலென்சர் சப்தமும் அலாதியானது. இந்த வீடியோவில் அதன் ரீங்காரத்தை கேட்கும் வாய்ப்பும் உள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Narain Karthikeyan drove his Porsche 911 GT3 in his style to drop Chetan Bhagat off at the Covai airport.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X