வெறும் ஒரு யூரோக்கு தன் நிறுவனத்தையே விற்பனை செய்துவிட்டு வெளியேறிய நிஸான்! எவ்வளவு நஷ்டம்னு தெரியுமா?

ரஷ்ய நிறுவனம் தனது ரஷ்யாவில் உள்ள தனது தொழிலை அந்நாட்டு அரசுக்கு வெறும் ஒரு யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ79க்கு விற்பனை செய்துவிட்டு அந்நாட்டிலிருந்து வெளியேறியுள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

வெறும் ரூ79க்கு தன் நிறுவனத்தை விற்பனை செய்துவிட்டு வெளியேறிய நிஸான் . . . எவ்வளவு நஷ்டம்ன்னு கேட்டா தலையே சுத்திரும் . . .

ஜப்பானைச் சேர்ந்த நிறுவனம் நிஸான். இந்நிறுவனம் சர்வதேச அளவில் ரெனால்ட் மற்றும் மிட்சுபிஸி ஆகிய நிறுவனங்களுடன் இணைத்து உலகம் முழுவதும் கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் பல நாடுகளில் லாபகரமாகத் தனது தொழிலை நடத்தி வருகின்றனர். இந்நிறுவனம் தயாரிக்கும் பல கார்கள் சர்வதேச அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் கார்களுக்கு பல ரசிகர்களும் இருக்கின்றனர்.

வெறும் ரூ79க்கு தன் நிறுவனத்தை விற்பனை செய்துவிட்டு வெளியேறிய நிஸான் . . . எவ்வளவு நஷ்டம்ன்னு கேட்டா தலையே சுத்திரும் . . .

இதில் குறிப்பாக நிஸான் நிறுவனம் ரஷ்யாவில் மிகப்பெரிய அளவில் கார்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்தது. இந்நிலையில் ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது போர் தொடுத்தது. இந்த விவகாரம் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்திற்குப் பின்பு ரஷ்யாவில் நிலைமை மிகவும் மோசமாகியது. பல நிறுவனங்கள் ரஷ்யாவில் உள்ள தங்களது தொழிலை மூடிவிட்டு அந்நாட்டிலிருந்து வெளியேறும் முடிவில் முடிவில் இறங்கினர்.

வெறும் ரூ79க்கு தன் நிறுவனத்தை விற்பனை செய்துவிட்டு வெளியேறிய நிஸான் . . . எவ்வளவு நஷ்டம்ன்னு கேட்டா தலையே சுத்திரும் . . .

பல பெரிய நிறுவனங்கள் எல்லாம் ரஷ்யா நாட்டை விட்டு வெளியேறியது. இந்நிலையில் நிஸான் நிறுவனமும் ரஷ்யாவில் உள்ள நிலைமையைக் கண்காணிக்க சில மாதங்கள் எடுத்துக்கொண்டது. சில மாதங்களில் ரஷ்யாவில் நிலைமை சரியானால் தொடர்ந்து தொழிலைச் செய்யலாம் என நினைத்தது. ஆனால் ரஷ்யாவில் இன்னும் நிலைமை சரியாகவில்லை. அந்நாட்டில் நிஸான் நிறுவனத்தால் தொடர்ந்து தொழிலைச் சரி வரச் செய்ய முடியவில்லை.

வெறும் ரூ79க்கு தன் நிறுவனத்தை விற்பனை செய்துவிட்டு வெளியேறிய நிஸான் . . . எவ்வளவு நஷ்டம்ன்னு கேட்டா தலையே சுத்திரும் . . .

இந்நிலையில் நிஸான் நிறுவனம் ரஷ்யாவை விட்டு வெளியேற முடிவு செய்தது. அதன்படி நிஸான் நிறுவனம் ரஷ்யாவில் உள்ள தனது தொழில் முழுவதையும் அந்நாட்டின் அரசின் நிறுவனமான நாமிக்கு விற்பனை செய்துவிட்டு அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் நிஸான் நிறுவனம் ரஷ்யாவில் உள்ள தனது தொழிலை ரஷ்ய அரசுக்கு வெறும் 1 யூரோவிற்கு விற்பனை செய்துள்ளது.

வெறும் ரூ79க்கு தன் நிறுவனத்தை விற்பனை செய்துவிட்டு வெளியேறிய நிஸான் . . . எவ்வளவு நஷ்டம்ன்னு கேட்டா தலையே சுத்திரும் . . .

1 யூரோ என்றால் இந்திய மதிப்பில் ரூ79 தான். இலவசமாகக் கொடுக்கக் கூடாது என்பதற்காக வெறும் 79 ரூபாய்க்குத் தனது நிறுவனத்தை ரஷ்ய அரசுக்கு விற்பனை செய்து விட்டுச் சென்றுள்ளது. இதற்கு முக்கியமான காரணம் அவருக்கு ஏற்பட்ட நெருக்கடிதான் எனக் கூறப்படுகிறது. அந்நாட்டில் அந்நிறுவனத்தை அரசைத் தவிர வேறு யாரும் வாங்க முன்வரவில்லை. அதனால் அந்நிறுவனத்திற்கும் அதைத் தவிர வேறு வழியில்லை.

வெறும் ரூ79க்கு தன் நிறுவனத்தை விற்பனை செய்துவிட்டு வெளியேறிய நிஸான் . . . எவ்வளவு நஷ்டம்ன்னு கேட்டா தலையே சுத்திரும் . . .

இந்த விற்பனை என்பது ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்பெர்க்ஸ் பகுதியில் உள்ள அந்நிறுவனத்தின் தயாரிப்பு ஆலை மற்றும் அதன் இயந்திரங்கள் என அனைத்தையும் சேர்த்தான் இந்த விலைக்கு விற்பனை செய்துள்ளது. நிஸான் நிறுவனத்துடன் சர்வதேச அளவில் கூட்டில் உள்ள ரெனால்ட் நிறுவனமும் கடந்த மே மாதம் ரஷ்யாவை விட்டு வெளியேறியது. அந்நிறுவனம் ரஷ்யாவில் அவ்டோவஸ் என்ற பிராண்டில் கார்களை தயாரித்து விந்தது.

வெறும் ரூ79க்கு தன் நிறுவனத்தை விற்பனை செய்துவிட்டு வெளியேறிய நிஸான் . . . எவ்வளவு நஷ்டம்ன்னு கேட்டா தலையே சுத்திரும் . . .

இந்நிறுவனமும் வேறு வழியின்றி அழுத்தம் காரணமாக, இந்நிறுவனத்தை ரஷ்ய முதலீட்டாளர்களிடம் விற்பனை செய்துவிட்டு அந்நாட்டிலிருந்து வெளியேறியது. இதற்கும் ரஷ்யா-உக்ரைன் போர் தான் முக்கியமான காரணம் எனச் சொல்லப்படுகிறது. அதன் பின்பு தற்போது நிஸான் நிறுவனமும் வெளியேறியுள்ளது. நிஸான் நிறுவனம் கடந்த மார்ச் மாதமே ரஷ்யாவின் செயின்ட் பீட்டர் பெர்க்ஸ் பகுதியில் உள்ள தனது ஆலையில் உற்பத்தியை நிறுத்தியது.

வெறும் ரூ79க்கு தன் நிறுவனத்தை விற்பனை செய்துவிட்டு வெளியேறிய நிஸான் . . . எவ்வளவு நஷ்டம்ன்னு கேட்டா தலையே சுத்திரும் . . .

அந்நாட்டில் அப்பொழுது தயாரிக்கப்பட்ட கார்களை சரியாக விற்பனை செய்யும் இடத்திற்குக் கொண்டு செல்ல முடியவில்லை. விற்பனையும் கிட்டத்தட்டப் படுத்தேவிட்டது. யாரும் அந்நாட்டின் போர் சூழ்நிலையில் புதிதாக கார்கள் வாங்கும் நிலையில் இல்லை என்பதால் அந்நாட்டில் உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்தி நிலைமை சரியாகும் வரை காத்திருக்க முடிவு செய்தது.

வெறும் ரூ79க்கு தன் நிறுவனத்தை விற்பனை செய்துவிட்டு வெளியேறிய நிஸான் . . . எவ்வளவு நஷ்டம்ன்னு கேட்டா தலையே சுத்திரும் . . .

ஆனால் பல மாதங்களாக அதே நிலை நீடிப்பதால் தான் இந்த தொழிலை விற்பனை செய்யும் முடிவிற்கு வந்தது. இதன் மூலம் நிஸான் நிறுவனத்திற்கு மிகப்பெரிய அளவில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனால் அந்நிறுவனம் 687 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான பணத்தை இழந்தது. இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ5647 கோடியாகும். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்

Most Read Articles
மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan quite Russia sells the business for one euro to NAMI
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X