அட இது இவ்ளோ நாள் தெரியாம போச்சே! வழக்கமான காற்றை காட்டிலும் நைட்ரஜன் காற்றில் இவ்ளோ நன்மைகளா! பயனுள்ள தகவல்..

நைட்ரஜன் காற்று, வழக்கமான காற்று இதில் எது பெஸ்ட் என்பது பற்றிய தகவலை இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். இதுகுறித்த சுவாரஷ்ய தகவலை இப்பதிவில் காணலாம் வாங்க.

அட இவ்ளோ நாள் தெரியாமா போச்சே... வழக்கமான காற்றை காட்டிலும் நைட்ரஜன் காற்றில் இவ்ளோ நன்மைகளா!!

வாகனங்களை தங்கள் வீட்டில் ஒருவர்போல் பராமரிப்பவர் பலர் நம் நாட்டில் இருக்கின்றனர். இந்த பெட்ரோல் பங்கில்தான் எரிபொருள் நிரப்புவேன், குறிப்பிட்ட ஒரு மெக்கானிக்கிடம் மட்டுமே சர்வீஸுக்கு வாகனத்தை விடுவேன், வேறு எந்தவொரு நபரிடத்திலும் வாகனத்தைக் கொடுக்க மாட்டேன், மேலும், இத்தனை நாளுக்கு ஒரு முறை கட்டாயம் டயர்களுக்கான காற்றை நிரப்பி விடுவேன், இவ்வாறு வாகனங்களைப் பார்த்து பார்த்து பராமரிப்போர் பலர் இருக்கின்றனர்.

அட இவ்ளோ நாள் தெரியாமா போச்சே... வழக்கமான காற்றை காட்டிலும் நைட்ரஜன் காற்றில் இவ்ளோ நன்மைகளா!!

இத்தகையோருக்கு பயனளிக்கும் விதமாக வழக்கமான கம்ப்ரஸ்ட் காற்று மற்றும் நைட்ரஜன் காற்றுக்கு இடையேயான வித்தியாசத்தை விளக்கும் வகையில் இப்பதிவை வெளியிட்டுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

அட இவ்ளோ நாள் தெரியாமா போச்சே... வழக்கமான காற்றை காட்டிலும் நைட்ரஜன் காற்றில் இவ்ளோ நன்மைகளா!!

தற்போது பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை இமாலய அளவில் உயர்ந்திருக்கின்றது. இம்மாதிரியான சூழ்நிலையில் வாகனங்களின் டயர்களில் காற்றை தேவையான அளவில் பராமரிப்பது மிக சிறந்தது. இதன்மூலம், அதிக எரிபொருள் செலவைக் கட்டுப்படுத்த முடியும். அதேசமயம், தேவையற்ற பஞ்சர் மற்றும் திறன் குறைவு போன்ற பிரச்னைகளையும் தவிர்க்க முடியும்.

அட இவ்ளோ நாள் தெரியாமா போச்சே... வழக்கமான காற்றை காட்டிலும் நைட்ரஜன் காற்றில் இவ்ளோ நன்மைகளா!!

குறிப்பாக, ரெகுலராக காற்றை பராமரிப்பதன் மூலம் வாகனங்களின் திறன் வெளிப்பாட்டில் எந்தவொரு பிரச்னையும் இருக்காது. ஆனால், இதில்தான் சிக்கல். காற்றை ரெகுலராக நிரப்பி பராமரிக்க முடியாது என வருந்துவோர்களுக்கு, நிச்சயம் நைட்ரஜன் காற்று மிக உதவியாக இருக்கும் என வாகன வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அட இவ்ளோ நாள் தெரியாமா போச்சே... வழக்கமான காற்றை காட்டிலும் நைட்ரஜன் காற்றில் இவ்ளோ நன்மைகளா!!

அதாவது, ஒரு முறை உங்கள் வாகனத்தில் நைட்ரஜன் காற்றை நிரப்பிவிட்டால் 30 நாட்கள் வரை எந்தவொரு கவலையுமின்றி பயணிக்கலாம். அதுவே வழக்கமான கம்ப்ரஸ்ட் காற்றை நிரப்பினால் குறைந்தது 8 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை கட்டாயம் காற்றை பரிசோதித்தே ஆக வேண்டும். இதை வைத்து பார்க்கையில் நைட்ரஜன் காற்றே மிக சிறந்தது என்பதை உணர முடிகின்றது.

அட இவ்ளோ நாள் தெரியாமா போச்சே... வழக்கமான காற்றை காட்டிலும் நைட்ரஜன் காற்றில் இவ்ளோ நன்மைகளா!!

வழக்கமான காற்று மிக விரைவில் வெளியேறும் தன்மைக் கொண்டது. எனவேதான் வெகு விரைவில் அது வாகனத்தில் இருந்து வெளியேறிவிடுகின்றது. அதிலும், தினசரி பயன்பாட்டு வாகனங்களில் இது மிக குறுகிய நாட்களிலேயே வெளியேறிவிடுகின்றது. ஆனால், நைட்ரஜன் காற்று அப்படி இல்லாமல் நீடித்து உழைக்கும் தன்மையைக் கொண்டிருக்கின்றது.

அட இவ்ளோ நாள் தெரியாமா போச்சே... வழக்கமான காற்றை காட்டிலும் நைட்ரஜன் காற்றில் இவ்ளோ நன்மைகளா!!

கம்ப்ரஸ்ட் காற்றில் ஆக்ஸிஜன் மற்றும் தண்ணீர் தன்மை அதிகம் என்பதால் வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் உலோக பொருள் மற்றும் டயர்களை அது எளிதில் பதம் பார்த்துவிடுகின்றது. ஆனால், நைட்ரஜன் காற்றில் இந்த பிரச்னை இல்லை. மேலும், அதிக வெயிலை வெளிப்படுத்தும் கோடைக் காலங்களில் டயர் வெடிப்பு போன்ற சிக்கலையும் கம்ப்ரஸ்ட் காற்று ஏற்படுத்த அதிக வாய்ப்பு உண்டு. ஆனால் இந்த சிக்கல் நைட்ரஜன் காற்றில் இல்லை.

அட இவ்ளோ நாள் தெரியாமா போச்சே... வழக்கமான காற்றை காட்டிலும் நைட்ரஜன் காற்றில் இவ்ளோ நன்மைகளா!!

வழக்கமான காற்றை போல் நைட்ரஜன் காற்றை இலவசமாக பெற முடியாது என்பது மட்டுமே இதில் இருக்கும் மிகப் பெரிய பிரச்னை. இதனை நிரப்ப ஒரு வீலுக்கு ரூ. 5 முதல் 10 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. தோரயமாக, ஓர் காரின் அனைத்து வீல்களிலும் நைட்ரஜன் காற்றை நிரப்ப வேண்டுமானால் ரூ. 40 முதல் ரூ. 45 வரை வசூலிக்கப்படுகின்றது.

அட இவ்ளோ நாள் தெரியாமா போச்சே... வழக்கமான காற்றை காட்டிலும் நைட்ரஜன் காற்றில் இவ்ளோ நன்மைகளா!!

அதுவே, இருசக்கர வாகனத்திற்கு ரூ. 10 வரை வசூலிக்கப்படுகின்றது. முதல் முறையாக டயர்களில் நைட்ரஜன் காற்று நிரப்பப்படுகின்றது என்றால் இதைவிட சற்று கூடுதலாக கட்டணம் வழங்க இருக்கும். ஆனால், இந்த தொள்ளை வழக்கமான காற்றை நிரப்பும்போது இருக்காது. கட்டணமின்றி இலவசமாகவே காற்றை நிரப்பிக் கொள்ளலாம்.

அட இவ்ளோ நாள் தெரியாமா போச்சே... வழக்கமான காற்றை காட்டிலும் நைட்ரஜன் காற்றில் இவ்ளோ நன்மைகளா!!

இதன்காரணமாகவே பெரும்பாலானோர் வழக்கமான காற்றை நிரப்பி வருகின்றனர். ஆனால், இந்த காற்றைக் காட்டிலும் நைட்ரஜன் காற்றிலேயே மிக அதிக பயன்பாட்டை நம்மால் பெற முடியும். நீடித்து உழைக்கும், அடிக்கடி பராமரித்தல் தொல்லை இல்லை. எனவேதான் வாகன ஆர்வலர்கள் பலர் நைட்ரஜன் காற்றையே தங்களின் வாகனங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.

அட இவ்ளோ நாள் தெரியாமா போச்சே... வழக்கமான காற்றை காட்டிலும் நைட்ரஜன் காற்றில் இவ்ளோ நன்மைகளா!!

நைட்ரஜன்-வழக்கமான காற்று இரண்டையும் கலந்து பயன்படுத்தலாமா?

நைட்ரஜன் காற்று அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் கிடைப்பதில்லை. நகரம் மற்றும் மிக முக்கியமான பெட்ரோல் பங்குகளில் மட்டுமே இந்த காற்று வசதி கிடைக்கின்றது. இம்மாதிரியான சூழ்நிலையில், ஏற்கனவே நைட்ரஜன் நிரப்பப்பட்ட டயர்களில் வழக்கமான காற்றை நிரப்பலாமா? என்ற கேள்வி உங்களுக்கு எழும்பலாம். தாராளமாக நிரப்பிக் கொள்ளலாம். நைட்ரஜன் காற்று வசதி இல்லாத போது டயர் மற்றும் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றிக் கொள்ள இந்த காற்றை தாராளமாக நிரப்பிக் கொள்ளலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Most Read Articles

English summary
Nitrogen Air - Compressed Air Comparison: Which Is Better For Our Vehicle Tyres?.. Read In Tamil.
Story first published: Sunday, February 21, 2021, 9:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X