நிரப்ப முடியாத வெற்றிடத்தை உருவாக்க போகும் டொயோட்டா கார்! இத்தனை கார்கள் கிடைத்தாலும் அதுபோல வருமா?
டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா (Toyota Innova Crysta) காரின் விற்பனை 2027ஆம் ஆண்டில் நிறுத்தப்பட உள்ளதாக ஒரு பேச்சு கடந்த சில மாதங்களாகவே சுற்றிக் கொண்டிருக்கிறது. இது எந்த அளவிற்கு உண்மை எனபது தெரியவில்லை. ஏனெனில், இதுகுறித்து டொயோட்டா நிறுவனமோ அல்லது டொயோட்டா டீலர்ஷிப் ஷோரூம்கள் தரப்பில் இருந்தோ இதுவரையில் எந்தவொரு அறிவிப்பும் வெளிவரவில்லை.
இந்திய கார்கள் சந்தையில் இன்னோவா க்ரிஸ்டா மிக பிரபலமான கார் ஆகும். இன்னோவா கார்களுக்கு என்றே ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இந்தியாவில் உள்ளது. ஆதலால், இந்த காரின் விற்பனை நிறுத்தப்படுமேயானால் அது இந்தியாவில் டொயோட்டாவின் மிக பெரிய முடிவாக இருக்கும். இருப்பினும், கவலை வேண்டாம்... இன்னோவா க்ரிஸ்டாவுக்கு மாற்றாக பல கார் மாடல்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் (Innova Hycross): இன்னோவா க்ரிஸ்டாவின் விற்பனையை டொயோட்டா நிறுத்தினாலும், லேட்டஸ்ட் இன்னோவா காரான இன்னோவா ஹைகிராஸ் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இன்னும் சொல்லப்போனால், இன்னோவா ஹைகிராஸில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காகவே இன்னோவா க்ரிஸ்டாவின் விற்பனை நிறுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இன்னோவா க்ரிஸ்டா போல் இல்லாமல், ஹைகிராஸ் ஆனது ஹைப்ரீட் (Hybrid) கார் ஆகும்.
மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ (Mahindra XUV 7XO): முன்பு விற்பனையில் இருந்த எக்ஸ்யூவி700 காரின் மேம்படுத்தப்பட்ட வெர்சனாக எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. பவர்ஃபுல்லான டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் ஆல்-வீல்-டிரைவ் (AWD) காராகவும் இந்த மஹிந்திரா கார் விற்பனை செய்யப்படுகிறது. ஆதலால், இது இன்னோவா க்ரிஸ்டாவுக்கு சரியான மாற்றாக இருக்கும்.

கியா கேரன்ஸ் (Kia Carens): இன்னோவா க்ரிஸ்டா அளவிற்கு பணத்தை செலவழிக்க இயலாதவர்களுக்கு இது ஏற்றதாக இருக்கும். ஏனெனில், குறைந்த விலையிலான எம்பிவி (MPV) ரக காராக கேரன்ஸ் விற்பனை செய்யப்படுகிறது. குறைந்த விலையிலான காராக இருப்பினும், போதுமான அதிநவீன தொழிற்நுட்ப அம்சங்கள் உடன் 6 ஏர்பேக்குகளை கொண்ட காராக இது விளங்குகிறது. இருப்பினும், இன்னோவா க்ரிஸ்டாவில் உள்ளதை போன்ற பவர்ஃபுல்லான டீசல் என்ஜின் இதில் இல்லை.
மாருதி சுஸுகி இன்விக்டோ (Maruti Suzuki Invicto): டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் ஹைப்ரீட் காரின் ரீபேட்ஜ்டு வெர்சன் தான் இந்த இன்விக்டோ கார் ஆகும். அதாவது, அதில் கிடைக்கும் நிறைய வசதிகள் இதிலிலும் வழங்கப்படுகின்றன. ஆனால், இன்னோவா ஹைகிராஸை காட்டிலும் இது விலை குறைவானது. அத்துடன், மாருதி சுஸுகியின் பரந்த சர்வீஸ் நெட்வொர்க்கையும் பயன்படுத்த முடியும்.
மஹிந்திரா ஸ்கார்பியோ-என் (Mahindra Scorpio-N): இந்தியாவில் இன்னமும் லேடார்-ஃபிரேம் சேசிஸில் உருவாக்கப்படும் மிகவும் சில கார்களுள் ஸ்கார்பியோ-என் ஒன்றாகும். சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக விற்பனையில் இருக்கும் மிகவும் சில கார்களுள் ஸ்கார்பியோ-என் ஒன்றாகும். இன்னோவா க்ரிஸ்டாவுக்கு இணையாக பவர்ஃபுல்லான டீசல் என்ஜினை விரும்புபவர்களுக்கு இந்த காரின் டீசல் என்ஜின் ஏற்றதாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்னோவா ஹைகிராஸ் கார் விற்பனையில் இருந்தாலும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டாவின் விற்பனை நிறுத்தம் இந்திய கார்கள் மார்க்கெட்டிற்கு பெரிய இழப்பு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஏனெனில், இன்னோவா கார்களுக்கே உண்டான பழமையான தோற்றத்தை விரும்புபவர்களின் சாய்ஸாக இன்னோவா க்ரிஸ்டா உள்ளது. இதன் விற்பனை நிறுத்தப்பட்டாலும், மார்க்கெட்டில் கிட்டத்தட்ட அதற்கு இணையான கார்கள் உள்ளன என்பதை இந்த தொகுப்பில் பார்த்தோம்.


Click it and Unblock the Notifications








