கஸ்டமர்களை மேக்னெட் மாதிரி ஈர்க்கும் டாடா பன்ச் கார்! குறைந்த விலையில் இதில் ஒரு காரை வாங்குவது பெஸ்ட்!

இன்றைய காலத்தில் கார் ஒன்றை சொந்தமாக வாங்குவது என்பது அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. குடும்பத்திற்கு குறைந்தப்பட்சம் ஒரு கார் ஆவது இருக்க வேண்டும் என்கிற தற்போதைய சூழலில், மிடில்-கிளாஸ் மக்களையும் கார் வாங்க வைக்க கார் நிறுவனங்கள் கணக்கச்சிதமான சிறிய அளவுகளில், குறைந்த விலையில் கார்களை வழங்கி வருகின்றன.

அத்தகைய கார் வகைகளுள் முக்கியமானது, 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட எஸ்யூவி கார்கள் ஆகும். இந்த வகை கார்களை சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்கள் என அழைக்கின்றனர். அவ்வாறான சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்களுள் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய கார் மாடல்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

affordable sub-4 metre suv cars

டாடா பன்ச் (Tata Punch): இந்தியாவில் தற்சமயம் அதிக பேர் வாங்கும் கார்களுள் இந்த டாடா கார் மிக பிரபலமானதாக உள்ளது. ஏனெனில், அந்த அளவிற்கு அளவில் சிறியதாக, விலை குறைவானதாக இருப்பது மட்டுமின்றி, பாதுகாப்பிலும் டாடா பன்ச் சிறந்ததாக விளங்குகிறது. இதனாலேயே இந்த காரை மக்கள் பலரும் போட்டிப் போட்டு வாங்கி வருகின்றனர்.

பன்ச் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) தற்சமயம் ரூ.5.62 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. பன்ச் காரின் அதிகப்படியான விற்பனைக்கு மற்றொரு காரணம், டாடாவின் இந்த மைக்ரோ-எஸ்யூவி கார் டீசல் என்ஜின் ஆப்ஷனை தவிர்த்து பெட்ரோல், சிஎன்ஜி (CNG) மற்றும் எலெக்ட்ரிக் (Electric) என பல்வேறு விதமான பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைப்பதாகும்.

affordable sub-4 metre suv cars

நிசான் மேக்னைட் (Nissan Magnite): ஜப்பானிய கார் நிறுவனமான நிசானில் இருந்து தற்சமயம் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மூன்றே மூன்று கார் மாடல்களுள் மேக்னைட் ஒன்றாகும். இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் தற்போதைக்கு ஓரளவிற்கு சிறப்பாக விற்பனையாகும் ஒரே நிசான் காரும் இதுவே ஆகும்.

இந்தியாவில் சிவிடி (CVT) ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் உடன் குறைந்த விலையில் கிடைக்கும் கார், நிசான் மேக்னைட் ஆகும். சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன் உடன் இந்த காரின் விலை சற்று அதிகமாக இருப்பினும், மேக்னைட்டின் ஆரம்ப விலை வெறும் ரூ.5.62 லட்சத்தில் இருந்து துவங்குகிறது.

ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter): ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் அளவில் சிறியதான கார், எக்ஸ்டர் ஆகும். அதற்கேற்ப இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகளும் குறைவாக ரூ.5.74 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. 6 ஏர்பேக்குகளை ஸ்டாண்டர்ட் அம்சமாக வழங்கும் எக்ஸ்டர் காரில் கூடுதல் ஆப்ஷனாக சன்ரூஃப் மற்றும் டாஷ்போர்டு கேமராவை பெறலாம்.

ரெனால்ட் கைகர் (Renault Kiger): ரெனால்ட் நிறுவனத்தின் பிரெஞ்சு ஸ்டைல் எஸ்யூவி கார் கைகர் ஆகும். ரூ.5.76 லட்சத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் இந்த காரில் பெரிய அளவிலான பூட் ஸ்பேஸ் (405 லிட்டர்கள்) வழங்கப்படுகிறது. இந்தியாவில் வேறேந்த சப்-4 மீட்டர் எஸ்யூவி காரிலும் இவ்வளவு பெரிய பூட் ஸ்பேஸ் பகுதி வழங்கப்படுவது இல்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 5 பேர் பயணிப்பதற்கு 4 மீட்டர்களுக்கும் குறைவான நீளம் கொண்ட இந்த எஸ்யூவி கார்களே போதுமானது என்பதுதான் எங்களது பரிந்துரை ஆகும். அளவில் சிறியதாக கார் இருந்தால் அதற்கேற்ப அதன் மைலேஜ் (Mileage)-உம் அதிகமாக கிடைக்கும். இந்த தொகுப்பில் நாம் பார்த்துள்ள கார்களில் எங்களது சாய்ஸ் எதுவென்றால், டாடா பன்ச் ஆகும். ஏனெனில் அதன் விலை குறைவாக இருப்பது மட்டுமின்றி, 5-ஸ்டார் ரேட்டிங் கொண்ட பாதுகாப்பான காராக பல்வேறு விதமான பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

More from DriveSpark

Article Published On: Monday, March 16, 2026, 19:43 [IST]
English summary
Affordable sub 4 metre suv cars in india tata punch nissan magnite hyundai exter
மேலும்... #cheap cars #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+