Just In
- 1 hr ago
350 சிசி பைக்கில் சம்பவம் செய்த ராயல் என்ஃபீல்டு... போட்டிக்கு யாருமே இல்ல...
- 14 hrs ago
டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு சவால்... இந்தியாவில் பலரும் காத்து கிடந்த கார் அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?
- 15 hrs ago
செம்மையான வேகத்தில் போக விரும்புபவர்களுக்கு ஏற்ற கார்... போர்ஷே 718 கேமேன் ஜிடி4 ஆர்எஸ் அறிமுகம்...
- 15 hrs ago
ஐடில் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் புதுசா கொடுத்திருக்காங்க... புதிய அவதாரத்தில் அறிமுகமானது ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்!
Don't Miss!
- News
என்ன ஆணவம்! ஆண்டாள் கோயில் ஊழியரை எட்டி உதைக்கும் அதிகாரி.. பரபர வீடியோ! பொங்கி எழும் நெட்டிசன்கள்
- Movies
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் ஸ்கிரிப்ட் வேலையை துவங்கிய செல்வராகவன்... அடுத்தப்படம் கார்த்தியுடனா?
- Lifestyle
உங்க காலில் இந்த அறிகுறிகள் இருந்தா...அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கணைய புற்றுநோயோட அறிகுறியாம்!
- Finance
இன்றைய தங்கம் விலை எப்படியிருக்கு.. சென்னையில் என்ன நிலவரம்?
- Sports
மோடி மைதானத்திற்கு கிடைத்தது மோட்சம்.. ஒரு வழியாக ஆசை நிறைவேற போகுது.. பிசிசிஐ தந்த அப்பேட்
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் சாதனம் வாங்க சரியான நேரம்- அமேசானில் வழங்கப்படும் அதிரடி தள்ளுபடி!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நடுவானில் விமானம் பறக்கும்போது யாராலும் மரணிக்கவே முடியாது ஏன் தெரியுமா?
விமானம் நடுவானில் பறக்கும் போது யாராவது உயிரிழந்தால் அவர் விமானம் தரையிறங்கிய பின்பு தான் உயிரிழந்ததாகக் கருதப்படுவார்கள். இது குறித்த முழு விபரங்களைக் கீழே காணுங்கள்

மனிதனிற்குப் பிறப்பு என்று ஒன்றுவந்தால் அவர்களுக்கு இறப்பு என்று ஒரு இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அந்த இறப்பு எப்பொழுது வரும் என்பது தான் யாருக்கும் தெரியாது. ஒரு மனிதன் சிறு வயதிலேயே கூட இறப்பைச் சந்திக்கலாம். வளர்ந்து வயதான பிறகு கூட இறப்பைச் சந்திக்கலாம். ஆனால் நீங்கள் விமானங்களில் நடுவானில் பறக்கும் போது உயிர் பிரிந்தால் மட்டும் சட்ட ரீதியாக இறப்பைச் சந்திக்க முடியாது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதைப் பற்றித் தான் இந்த பகுதியில் காணப்போகிறோம்.

விமானத்தில் பயணம் என்பது ரயில் பஸ் பயணங்களைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டது. விமான பயணம் என்பது சிறிது நேரம் பூமியிலிருந்து சற்று விலகி வானில் சென்று மீண்டும் பூமிக்கே திரும்புவோம். மற்ற வாகனங்களை விட வேகமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இதில் செல்ல முடியும்.

இப்படியாக விமானத்தில் பயணிக்கும் போது ஒருவர் மரணமடைந்துவிட்டால் அவர் மரணமடைந்ததாக அப்பொழுது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. விமானம் எப்பொழுது தரையிறங்குகிறதோ அப்பொழுது தான் அவரை விமான நிலைய டாக்டர்கள் சோதனை செய்து குறிப்பிட்ட நபர் இறந்துவிட்டார் என உறுதிப்படுத்துவார்கள். அவர் எந்த நேரம் எந்த விமான நிலையத்தில் சோதனை செய்யப்பட்டாரோ அந்த இடம் மற்றும் நேரமே அவரது இறப்பு நேரம் மற்றும் இடமாகக் கருதப்படும்.

பொதுவாக விமானங்கள் பறக்கும் போது விமானத்தில் உள்ளவர்களுக்கு ஏதாவது மருத்துவ தேவை ஏற்பட்டால் அவர்களுக்காக விமானத்தில் டாக்டர்கள் எல்லாம் இருக்கமாட்டார்கள். பயணிகளில் யாராவது டாக்டர் இருந்தால் அவர்கள் மூலம் உதவி கிடைக்காமல் அல்லது விமானப்பணிப் பெண்களுக்கு ஆபத்தில் இருக்கும் பயணிகளுக்கு முதலுதவி செய்யும் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கும்.

சாதாரண தேவை என்றால் அடுத்து விமானம் எங்குத் தரையிறங்குகிறதோ அங்கு அவர்களுக்கு உதவி கிடைக்கலாம். அல்லது அவசர தேவை என்றால் விமானம் எங்குப் பறந்து கொண்டிருக்கிறதோ அருகில் உள்ள விமான நிலையத்தில் அவசர தரையிறக்கத்திற்காக அனுமதி கோரப்பட்டு விமானம் தரையிறக்கப்படும். நடுவானில் மருத்துவ உதவி என்பது டாக்டர்கள் மூலம் கிடைப்பது என்பது உத்தரவாதம் இல்லை.

இந்நிலையில் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது ஏதாவது காரணத்தால் ஒருவர் உயிரிழந்துவிட்டால் அவரை நடுவானில் விமானத்தில் இறந்ததாகக் கருத்தில் கொள்ளமாட்டார்கள் மாறாக அந்த விமானம் எங்குத் தரையிறங்குகிறதோ அங்கு தான் அவருக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்து அவரது மரணத்தை உறுதி செய்வார்கள்.

இப்படியாகப் பலர் விமான பயணத்தின் போது உயிரிழந்துள்ளனர். அவர்கள் இறப்பு எல்லாம் விமானம் தரையிறங்கிய விமான நிலையத்தில் தான் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை யாரும் விமான பயணத்தின் போது நடுவானில் இறந்ததாக அதிகாரப்பூர்வ பதிவுகள் செய்யப்படவில்லை.

ஒருவேளை விமான பயணத்தில் ஒருவர் நடு வானில் ஒருவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டால் விமானப்பணிப் பெண்கள் அவருக்கு முதலுதவி செய்ய முயற்சி செய்வார்கள் அது பலனளிக்கவில்லை என்றால் இந்த தகவலை விமானத்தின் கேப்டனிற்கு சொல்வார்கள். விமானத்தின் கேப்டன் இதைக் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிப்பார்கள்.

மேலும் அவருக்கு உதவும் முயற்சியாகப் பயணிகளில் யாரேனும் டாக்டர் இருக்கிறார்களா எனச் சோதனை செய்வார்கள் டாக்டர்கள் இருந்தால் விமானப் பணிப்பெண்கள் அவர்களின் உதவியை நாடுவார்கள். டாக்டர் அவருக்கு உதவி செய்யும் பட்சத்தில் அவரது உயிரைக் காப்பாற்றப் போராட்டம் நடக்கும். இதில் நடுவானில் அவரின் உயிர் பிரிவதற்கும் வாய்ப்பு உள்ளது.

அப்படியாக அவர் இறந்துவிட்டார் என்றால் அவர் உடலைப் போட்டு வைக்க விமானத்தில் தனியாக இடம் கிடையாது. அவர் எங்கு இறந்தாரோ அங்கேயே அவரது உடலை விமானப் பணிப்பெண்கள் ஒரு போர்வையைப் போட்டு மூடி வைப்பார்கள். அவருடன் உடன் வந்த யாராவது ஒருவர் மட்டுமே அந்த உடலின் அருகே இருக்க அனுமதிப்பார்கள்.

விமானம் அடுத்தாக எந்த விமான நிலையத்தில் தரையிறங்குகிறதோ அந்த விமான நிலையத்திற்கு இது குறித்த தகவல் தெரிவிக்கப்படும். அங்கு அதிகாரிகள், டாக்டர்கள் எல்லாம் விமானத்திற்காகக் காத்திருப்பார்கள். விமானம் தரையிறங்கியதும் அவர்கள் நேரடியாக விமானத்திற்குள்ளேயே வந்து இறந்ததாகக் கூறப்படும் மனிதரை பிரிசோதனைச செய்து அவர் இறந்ததற்கான காரணத்தையும் குறிப்பிட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

விமான நிலைய டாக்டர்கள் பரிசோதனை செய்யும் நேரம் மற்றும் இடமே குறிப்பிட்ட நபர் இறந்ததற்கான நேரம் மற்றும் இடமாகக் கருதப்படும். அதனால் தான் இந்த செய்தியில் முதலில் பறக்கும் விமானத்தில் நடுவானில் யாரும் மரணிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளோம். இந்த தகவல் உங்களுக்குப் புதிதாக இருக்கிறதா? இது போன்ற வித்தியாசமான தகவல்கள் உங்களுக்கு ஏதாவது தெரியுமா? கமெண்டில் சொல்லுங்கள்
-
இந்தியாவில் பெட்ரோல் விலை "ரொம்ப சீப்" தான்... மற்ற நாடுகளில் எவ்வளவு விலைன்னு இங்க பாருங்க...
-
இந்தியாவின் அதிகம் ரேஞ்ஜ் தரும் காராக வருகிறது கியா இவி6... எவ்ளோ ரேஞ்ஜ் தரும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
-
தினமும் டூ-வீலரை பயன்படுத்துறவங்களுக்கு ஏத்த பைக்குகளின் லிஸ்ட்!.. எல்லாத்தோட விலையும் ரொம்ப கம்மி!