மணிக்கு 130 கிமீ வேகத்தில் பறந்து புதிய சாதனையை பெற்ற டிராக்டர்

Written By:

கார், பைக்குகள் பல நூறு கிமீ வேகத்தில் சென்று சாதனை படைப்பதை பார்த்திருக்கிறோம். இந்தநிலையில், பின்லாந்து நாட்டில், டிராக்டர் ஒன்று மணிக்கு 130 கிமீ வேகத்தில் பறந்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.

பின்லாந்து நாட்டை சேர்ந்த வல்ட்ரா டிராக்டர் தயாரிப்பு நிறுவனமும், நோக்கியான் டயர் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து இந்த புதிய சாதனைக்கா முயற்சியில் வெற்றி கண்டுள்ளன. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த டிராக்டர் சாதனை நிகழ்வு பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

பனிக்கால டயர்

பனிக்கால டயர்

நோக்கியான் நிறுவனத்தின் பனிக்காலத்திற்கு ஏற்ற விசேஷ அம்சங்கள் கொண்ட டயரின் சிறப்பியல்களை எடுத்துக்காட்டும் விதத்தில் இந்த சாதனை முயற்சி திட்டமிடப்பட்டது. இதற்காக, வல்ட்ரா டிராக்டர் நிறுவனத்துடன் இணைந்து இந்த முயற்சியை நோக்கியான் டயர்ஸ் மேற்கொண்டது.

பனிபடர்ந்த சாலை

பனிபடர்ந்த சாலை

பின்லாந்து நாட்டின் லேப்லாண்ட் பகுதியில், பனிபடர்ந்த சாலையில்தான் இந்த டிராக்டர் புயல்வேகத்தில் சென்று சாதனை படைத்திருக்கிறது. மொத்தம் 2,300 மீட்டர் நீளம் கொண்ட இந்த சாலையின் நடுவே 50 மீட்டர் தூரம், சாதனை படைப்பதற்கான இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

டிராக்டர் மற்றும் டயர் மாடல்

டிராக்டர் மற்றும் டயர் மாடல்

இந்த சாதனையின்போது வல்ட்ரா டி234 டிராக்டரில் நோக்கியான் ஹக்கபெலிட்டா டிஆர்ஐ 440/80ஆர்28 151டி மற்றும் 540/80ஆர்38 167டி டயரும் பொருத்தப்பட்டிருந்தது. இந்த டயர் பனிபடர்ந்த சாலைகளில் செல்வதற்காக விசேஷ வடிவமைப்பை கொண்டவை.

சாதனை வேகம்

சாதனை வேகம்

மணிக்கு 130.165 கிமீ வேகத்தை டிராக்டர் தொட்டு புதிய உலக சாதனை படைத்தது. அதிவேகத்தில் டிராக்டரை செலுத்திய ஜுகா கன்குனேன் பற்றியும், அவர் கூறியதையும் அடுத்த ஸ்லைடில் காணலாம்.

வேக கணக்கீடு

வேக கணக்கீடு

சோதனை செய்யப்பட்ட அந்த சாலையின் நிர்ணயிக்கப்பட்ட அந்த 50 மீட்டர் தூரத்தில் இரு திசைகளிலும் டிராக்டர் சென்ற வேகத்தின் சராசரி, அதிகபட்ச வேக அளவாக கணக்கிடப்பட்டது.

டிராக்டர் மாடல்

டிராக்டர் மாடல்

இந்த சாதனைக்கு பயன்படுத்தப்பட்ட வல்ட்ரா டி234 டிராக்டர் 7.7 டன் எடை கொண்டது.

ராலி ரேஸ் டிரைவர்

ராலி ரேஸ் டிரைவர்

ஜுகா கன்குனேன் பின்லாந்து நாட்டின் பிரபல ராலி ரேஸ் டிரைவர். 56 வயதாகும் ஜுகா 1983 முதல் 2002ம் ஆண்டு வரை பல்வேறு ராலி போட்டிகளில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவர். இந்த நிகழ்வு குறித்து அவர் கூறுவதை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

ஜுகாவின் கருத்து

ஜுகாவின் கருத்து

"ஏற்கனவே பல கார்களில் அதிவேக சாதனை முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறேன். ஆனால், டிராக்டரில் இந்த முயற்சியை செய்வது இதுவே முதல்முறை. முதல் முயற்சியிலேயே உலக சாதனை படைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. டிராக்டரும், டயரும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தின," என்று கூறினார்.

 காரில் உலக சாதனை

காரில் உலக சாதனை

கடந்த 2013ம் ஆண்டு இதேபோன்று காரில் தனது பனிக்கால விசேஷ டயர்களை பொருத்தி ஓர் உலக சாதனையை நோக்கியான் டயர்ஸ் நிறுவனம் செய்தது. மணிக்கு 335.713 கிமீ வேகத்தில் பனிபடர்ந்த சாலையில் காரை செலுத்தி அப்போது உலக சாதனைக்கு உதவி புரிந்தார் நோக்கியான் நிறுவனத்தின் ஜானி லெய்டினின் என்பது குறிப்பிடத்தக்கது.

 
English summary
The new world record for fastest tractor was achieved when Nokian Tyres and Valtra combined their northern expertise. The new amazing record was set on a snowy and icy road in Finnish Lapland. Multiple World Rally Champion Juha Kankkunen kept his head cool and drove the machine at a speed of 130.165 km/h (80.88mph).
Story first published: Monday, April 20, 2015, 13:25 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark