கப்பல்களுக்கான உலகின் முதல் சுரங்க வழிப்பாதை... நார்வேயில் அமைகிறது!

Written By:

பல நூறு கிலோமீட்டர் தூரம் சுற்றிக் கொண்டு வருவதை தவிர்க்க, வாகனங்களுக்கும், ரயில்களுக்கும் மலையை குடைந்து சுரங்கப்பாதைகள் அமைக்கப்படுகின்றன. இதனால், பயண நேரம் வெகுவாக குறைகிறது.

இந்தநிலையில், கப்பல்களுக்கான உலகின் முதல் சுரங்கப்பாதை நார்வேயில் அமைக்கப்பட உள்ளது. மிக பிரம்மாண்டமாக அமைய இருக்கும் இந்த புதிய கப்பல் சுரங்க நீர் வழித்தடம் குறித்து தகவல்களை தொடர்ந்து காணலாம்.

கப்பல்களுக்கான உலகின் முதல் சுரங்க வழிப்பாதை... நார்வேயில் அமைகிறது!

கடலோர பள்ளத்தாக்குகள் அதிகம் பெற்ற நார்வே நாட்டின் ஸ்டாட்ஹவத் கடற்கரையில் இந்த பிரம்மாண்ட சுரங்க நீர்வழித்தடம் உருவாக்கப்பட உள்ளது. இந்த சுரங்கப்பாதையானது 1.7 கிமீ நீளத்துக்கு மலையை குடைந்து இந்த சுரங்க நீர்வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.

கப்பல்களுக்கான உலகின் முதல் சுரங்க வழிப்பாதை... நார்வேயில் அமைகிறது!

பிரம்மாண்ட கப்பல்களை கையாளும் விதத்தில் 37 மீட்டர் உயரமும், 26.5 மீட்டர் அகலமும் கொண்டதாக இந்த சுரங்கப்பாதை கட்டமைக்கப்பட உள்ளது. இந்த நீர்வழித்தடம் மூலமாக பல நூறு கிலோமீட்டர் துரத்திற்கு கப்பல்கள் சுற்றிக் கொண்டு செல்வது தவிர்க்கப்படும்.

கப்பல்களுக்கான உலகின் முதல் சுரங்க வழிப்பாதை... நார்வேயில் அமைகிறது!

நார்வே நாட்டின் ஸ்டார்ஹவத் கடல் பகுதியில் ஆண்டுக்கு 100க்கும் மேற்பட்ட சூறாவளி மற்றும் மோசமான இயற்கை சீற்றங்களால் பாதிக்ககப்படும் அபாயகரமான பகுதியாக இருக்கிறது. எனவே, இந்த சுரங்கப்பாதை வழியாக செல்லும் கப்பல்கள் மிக பாதுகாப்பாக கடப்பதற்கும் வழி ஏற்படும்.

கப்பல்களுக்கான உலகின் முதல் சுரங்க வழிப்பாதை... நார்வேயில் அமைகிறது!

இந்த சுரங்கப்பாதையை அமைப்பதற்கு அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுவிட்டது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் துவங்க இருக்கின்றன. இந்த சுரங்கப்பாதைக்காக 7.5 மில்லியன் டன் பாறைகள் குடைந்து எடுக்கப்பட உள்ளன.

கப்பல்களுக்கான உலகின் முதல் சுரங்க வழிப்பாதை... நார்வேயில் அமைகிறது!

நார்வே நாட்டின் தெய்ஜென் மற்றும் பெர்ஸ்டாட் நகரங்களுக்கு அருகில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. 4 ஆண்டுகளில் இந்த சுரங்கப்பாதையை அமைக்க நார்வே நாட்டு அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கின்றனர்.

கப்பல்களுக்கான உலகின் முதல் சுரங்க வழிப்பாதை... நார்வேயில் அமைகிறது!

அதேநேரத்தில், முழுமையாக கட்டி முடிப்பதற்கு 14 ஆண்டுகள் பிடிக்குமாம். வரும் 2029ம் ஆண்டு முதல் இந்த சுரங்கப்பாதையில் கப்பல் போக்குவரத்தை அனுமதிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டு இருக்கிறது.

கப்பல்களுக்கான உலகின் முதல் சுரங்க வழிப்பாதை... நார்வேயில் அமைகிறது!

இந்த சுரங்கப்பாதையை சரக்கு கப்பல்கள் மட்டுமின்றி, சுற்றுலா கப்பல்களும் செல்ல அனுமதிக்கப்பட உள்ளது. மேலும், சுற்றுலாப் பயணிகளை கவரும் அம்சங்களுடன் இந்த சுரங்கப்பாதையை கட்ட முடிவு செய்துள்ளனர்.

கப்பல்களுக்கான உலகின் முதல் சுரங்க வழிப்பாதை... நார்வேயில் அமைகிறது!

சுரங்கப்பாதை திட்டங்களில் முன்னோடியாக திகழ்கிறது நார்வே. ஏற்கனவே அங்கு வாகனங்களுக்கான மிதக்கும் சுரங்கப்பாதையை கடலில் அமைப்பதற்கான திட்டத்தை அந்நாட்டு அரசு கையில் எடுத்துள்ளது. அதன் விபரங்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று படிக்கலாம்.

உலகின் முதல் மிதக்கும் சுரங்கப்பாதை: நார்வேயில் அமைகிறது!

கப்பல்களுக்கான உலகின் முதல் சுரங்க வழிப்பாதை... நார்வேயில் அமைகிறது!
கப்பல்களுக்கான உலகின் முதல் சுரங்க வழிப்பாதை... நார்வேயில் அமைகிறது!
கப்பல்களுக்கான உலகின் முதல் சுரங்க வழிப்பாதை... நார்வேயில் அமைகிறது!
கப்பல்களுக்கான உலகின் முதல் சுரங்க வழிப்பாதை... நார்வேயில் அமைகிறது!

'ஜெயிக்கிற குதிரை'... புதிய டாடா டீகோர் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

கப்பல்களுக்கான உலகின் முதல் சுரங்க வழிப்பாதை... நார்வேயில் அமைகிறது!

உலக கவனம் பெறும் சீனாவின் லிஸிபா மோனோ இரயில் நிலையம்

புதிய ஆடி ஏ3 சொகுசு காரின் படங்கள்!

புதிய ஆடி ஏ3 சொகுசு காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

English summary
Read in Tamil: Norway's construction of the world’s first ship tunnel could begin in 2018.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark