ஈரான் பெட்ரோல் விவகாரம்; அமெரிக்காவுக்கு எதிராக 56 இன்ச் மார்பை நிமிர்த்துகிறார் ஏழைத்தாயின் மகன்?

அமெரிக்காவின் பகிரங்க மிரட்டலுக்கு மத்தியில், இந்தியாவிற்கு அதிக அளவில் கச்சா எண்ணெய் வினியோகம் செய்யும் 2வது மிகப்பெரிய நாடு என்ற அந்தஸ்தை எட்டியிருக்கிறது ஈரான்.

By Arun

அமெரிக்காவின் பகிரங்க மிரட்டலுக்கு மத்தியில், இந்தியாவிற்கு அதிக அளவில் கச்சா எண்ணெய் வினியோகம் செய்யும் 2வது மிகப்பெரிய நாடு என்ற அந்தஸ்தை எட்டியிருக்கிறது ஈரான். எனவே அமெரிக்காவுக்கு எதிராக இந்திய பிரதமர் மோடி, தனது 56 இன்ச் மார்பை நிமிர்த்துகிறாரா? என்பது குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஈரான் பெட்ரோல் விவகாரம்; அமெரிக்காவுக்கு எதிராக 56 இன்ச் மார்பை நிமிர்த்துகிறார் ஏழைத்தாயின் மகன்?

பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யை, இந்தியாவிற்கு அதிக அளவில் சப்ளை செய்யும் நாடு ஈராக். இதற்கு அடுத்தபடியாக சவுதி அரேபியாவிடம் இருந்துதான் அதிக அளவிலான கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கி கொண்டிருந்தது.

ஈரான் பெட்ரோல் விவகாரம்; அமெரிக்காவுக்கு எதிராக 56 இன்ச் மார்பை நிமிர்த்துகிறார் ஏழைத்தாயின் மகன்?

இந்த பட்டியலில் மூன்றாவதாக இருந்த நாடு ஈரான். ஆனால் தற்போது சவுதி அரேபியாவை பின்னுக்கு தள்ளி, ஈரான் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதாவது இந்தியாவிற்கு மிக அதிக அளவில், கச்சா எண்ணெய்யை சப்ளை செய்யும் 2வது மிகப்பெரிய நாடு என்ற அந்தஸ்தை ஈரான் பெற்றுள்ளது.

ஈரான் பெட்ரோல் விவகாரம்; அமெரிக்காவுக்கு எதிராக 56 இன்ச் மார்பை நிமிர்த்துகிறார் ஏழைத்தாயின் மகன்?

நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் (ஏப்ரல், மே, ஜூன்), ஈரான் நாட்டில் இருந்து, 5.67 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கியுள்ளது. அதாவது ஒரு நாளைக்கு 4,57,000 பேரல் கச்சா எண்ணெய்யை (Barrels Per Day) ஈரானிடம் இருந்து இந்தியா கொள்முதல் செய்துள்ளது.

ஈரான் பெட்ரோல் விவகாரம்; அமெரிக்காவுக்கு எதிராக 56 இன்ச் மார்பை நிமிர்த்துகிறார் ஏழைத்தாயின் மகன்?

மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளார். ஆனால் கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் ஈரானிடம் இருந்து இந்தியா, எவ்வளவு கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்தது? என்ற புள்ளி விபரங்களை அவர் வழங்கவில்லை.

ஈரான் பெட்ரோல் விவகாரம்; அமெரிக்காவுக்கு எதிராக 56 இன்ச் மார்பை நிமிர்த்துகிறார் ஏழைத்தாயின் மகன்?

எனினும் பல்வேறு இடங்களில் இருந்து தொகுக்கப்பட்ட புள்ளி விபரங்களின் படி கணக்கிட்டால், கடந்த ஆண்டு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களில், ஈரான் நாட்டில் இருந்து 3.46 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை மட்டுமே இந்தியா இறக்குமதி செய்துள்ளது. அதாவது ஒரு நாளைக்கு 2,79,000 பேரல்கள் (Barrels Per Day).

ஈரான் பெட்ரோல் விவகாரம்; அமெரிக்காவுக்கு எதிராக 56 இன்ச் மார்பை நிமிர்த்துகிறார் ஏழைத்தாயின் மகன்?

இதன்படி பார்த்தால், கடந்த ஆண்டு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களுடன் ஒப்பிடுகையில், தற்போதைய ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களில், ஈரான் நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா அதிகரித்துள்ளது தெரியவருகிறது.

ஈரான் பெட்ரோல் விவகாரம்; அமெரிக்காவுக்கு எதிராக 56 இன்ச் மார்பை நிமிர்த்துகிறார் ஏழைத்தாயின் மகன்?

இதனிடையே இந்தியாவுக்கு அதிக அளவிலான கச்சா எண்ணெய்யை வினியோகம் செய்யும் நாடு என்ற அந்தஸ்தை ஈராக் தக்க வைத்து கொண்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் (ஏப்ரல், மே, ஜூன்) ஈராக் நாட்டிடம் இருந்து 7.27 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கியுள்ளது.

ஈரான் பெட்ரோல் விவகாரம்; அமெரிக்காவுக்கு எதிராக 56 இன்ச் மார்பை நிமிர்த்துகிறார் ஏழைத்தாயின் மகன்?

இதே கால கட்டத்தில், சவுதி அரேபியாவிடம் இருந்து 5.22 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை மட்டுமே இந்தியா கொள்முதல் செய்துள்ளது. ஆனால் ஈரானிடம் இருந்து இந்தியா 5.67 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை வாங்கியிருப்பதால், சவுதி அரேபியா மூன்றாவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது.

ஈரான் பெட்ரோல் விவகாரம்; அமெரிக்காவுக்கு எதிராக 56 இன்ச் மார்பை நிமிர்த்துகிறார் ஏழைத்தாயின் மகன்?

அதற்கு பதிலாக ஈரான் 2வது இடத்திற்கு முன்னேறி விட்டது. கிட்டத்தட்ட இலவச ஷிப்பிங், பணத்தை திருப்பி செலுத்துவதற்கான க்ரெடிட் பிரீயட் நீட்டிப்பு என ஈரான் வழங்கிய அதிரடியான சலுகைகளே இதற்கு காரணங்களாக கருதப்படுகின்றன.

ஈரான் பெட்ரோல் விவகாரம்; அமெரிக்காவுக்கு எதிராக 56 இன்ச் மார்பை நிமிர்த்துகிறார் ஏழைத்தாயின் மகன்?

முன்னதாக ஈரான் நாட்டு அரசுடன் செய்து கொண்டிருந்த அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து கடந்த மே மாதம் அமெரிக்கா விலகியது. இதனால் ஈரான் அரசுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பல்வேறு வழிகளில் தொடர்ச்சியாக நெருக்கடி கொடுத்து கொண்டுள்ளார்.

ஈரான் பெட்ரோல் விவகாரம்; அமெரிக்காவுக்கு எதிராக 56 இன்ச் மார்பை நிமிர்த்துகிறார் ஏழைத்தாயின் மகன்?

ஈரான் நாட்டின் மிகப்பெரிய பலமே கச்சா எண்ணெய்தான். ஆனால் கச்சா எண்ணெய் சந்தையில் இருந்து ஈரானை வெளியேற்றி தனிமைப்படுத்த வேண்டும் என கங்கணம் கட்டி கொண்டதை போல், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செயல்பட்டு வருகிறார்.

ஈரான் பெட்ரோல் விவகாரம்; அமெரிக்காவுக்கு எதிராக 56 இன்ச் மார்பை நிமிர்த்துகிறார் ஏழைத்தாயின் மகன்?

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை வரும் நவம்பர் 4ம் தேதியுடன் நிறுத்தி கொள்ள வேண்டும் என இந்தியா, சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை மீறி செயல்படும் நாடுகளின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் எனவும் அமெரிக்கா கூறியுள்ளது.

ஈரான் பெட்ரோல் விவகாரம்; அமெரிக்காவுக்கு எதிராக 56 இன்ச் மார்பை நிமிர்த்துகிறார் ஏழைத்தாயின் மகன்?

அமெரிக்காவின் உத்தரவு வெளியான உடனேயே, அது குறித்து விரிவாக விவாதிக்க, இந்தியாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் உடனான ஆலோசனை கூட்டத்தை, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் அவசரம் அவசரமாக நடத்தியது.

ஈரான் பெட்ரோல் விவகாரம்; அமெரிக்காவுக்கு எதிராக 56 இன்ச் மார்பை நிமிர்த்துகிறார் ஏழைத்தாயின் மகன்?

அப்போது ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா படிப்படியாக குறைத்து விடும் அல்லது முழுமையாக நிறுத்தி விடும். எனவே ஈரான் கச்சா எண்ணெய்க்கு உண்டான மாற்று ஏற்பாடுகளை செய்யும்படி எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் கேட்டு கொள்ளப்பட்டன.

ஈரான் பெட்ரோல் விவகாரம்; அமெரிக்காவுக்கு எதிராக 56 இன்ச் மார்பை நிமிர்த்துகிறார் ஏழைத்தாயின் மகன்?

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை படிப்படியாக குறைத்து கொண்டே வந்து, வரும் நவம்பர் 4ம் தேதிக்குள் முழுவதுமாக நிறுத்தி விட வேண்டும் என்பதே அமெரிக்காவின் எச்சரிக்கை. இதை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செவ்வனே செயல்படுத்தி வருகிறது என்பதே உண்மை.

ஈரான் பெட்ரோல் விவகாரம்; அமெரிக்காவுக்கு எதிராக 56 இன்ச் மார்பை நிமிர்த்துகிறார் ஏழைத்தாயின் மகன்?

கடந்த ஆண்டு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில், ஈரான் நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா, 3.46 மில்லியன் டன்னில் இருந்து 5.67 மில்லியன் டன்னாக அதிகரித்திருப்பது உண்மைதான்.

ஈரான் பெட்ரோல் விவகாரம்; அமெரிக்காவுக்கு எதிராக 56 இன்ச் மார்பை நிமிர்த்துகிறார் ஏழைத்தாயின் மகன்?

ஆனால் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை படிப்படியாக நிறுத்தி கொள்ள வேண்டும் என்ற அமெரிக்காவின் மிரட்டல் வெளியான பிறகு, ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை, இந்தியா படிப்படியாக குறைத்து கொண்டு வருகிறது.

ஈரான் பெட்ரோல் விவகாரம்; அமெரிக்காவுக்கு எதிராக 56 இன்ச் மார்பை நிமிர்த்துகிறார் ஏழைத்தாயின் மகன்?

ஈரானிடம் இருந்து இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் இறக்குமதி, கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜூன் மாதத்தில் திடீரென 16 சதவீதம் அளவிற்கு சரிந்து விட்டது. அமெரிக்காவின் உத்தரவிற்கு இந்தியா கட்டுப்படுகிறது என்பதை இந்த புள்ளி விபரங்கள் பறை சாற்றுகின்றன.

ஈரான் பெட்ரோல் விவகாரம்; அமெரிக்காவுக்கு எதிராக 56 இன்ச் மார்பை நிமிர்த்துகிறார் ஏழைத்தாயின் மகன்?

எனவே இந்தியாவின் 2வது மிகப்பெரிய கச்சா எண்ணெய் சப்ளையர் என்ற அந்தஸ்தை ஈரான் எவ்வளவு நாட்களுக்கு தக்க வைத்து கொள்ளும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே. ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை குறைத்து கொண்டே வந்தால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவிற்கு மிக கடுமையாக உயரும் அபாயம் உள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Now Iran is India's Second-Biggest Crude Oil Supplier. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X