நர்பர்க்ரிங் ரேஸ் டிராக்கின் ஒரு முனையில் நடந்த விபத்துக்களின் தொகுப்பு

By Saravana

உலகின் மிகப் பழமையான ரேஸ் டிராக்குகளில் ஒன்றான நர்பர்க்ரிங் ஓடுதளம் ஜெர்மனியில் அமைந்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இந்த ரேஸ் டிராக் பச்சை நரகம் என்று குறிக்கப்படுகிறது. 28 கிலோமீட்டர் நீளமும், 187 வளைவுகளையும் கொண்ட இந்த ரேஸ் டிராக் உலகிலேயே அதிக உயிர்களை காவு வாங்கிய ரேஸ் டிராக்காக குறிப்பிடப்படுகிறது.

பந்தய வீரர்களுக்கு மிக சவாலான இந்த டிராக்கின் ஒரு முனை மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது. அந்த இடத்தில் நிகழ்ந்த விபத்துக்களை ஒருவர் வீடியோவாக எடுத்து தொகுத்து வெளியிட்டுள்ளார். படத்தில் காணும் விபத்துக்களில் உயிரிழப்புகள் இல்லையெனினும் அதில் சறுக்கிச் செல்லும் கார்கள் மற்றும் பைக்குகள் நம்மையும் சேர்த்து அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

Nurburgring Race Track

9 நிமிடத்தில் டிராக்கில் ஒரு சுற்று வந்துவிட வேண்டும் என்ற நோக்கில் கார், பைக்குகளை ஓட்டுவதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. பொதுமக்களும் ரேஸ் டிராக்கில் ஓட்டி பார்ப்பதற்காக சில தினங்கள் இந்த ரேஸ் டிராக் திறக்கப்படுகிறது. அதுபோன்று, பயிற்சி அதிகம் பெறாதவர்கள் ஓட்டிய நாட்களில் இந்த ரேஸ் டிராக்கின் ஒரு மோசமான வளைவில் எடுக்கப்பட்ட வீடியோ தொகுப்பை கீழே காணலாம்.
<center><iframe width="100%" height="450" src="//www.youtube.com/embed/zIltO3NuGkk?rel=0" frameborder="0" allowfullscreen></iframe></center>

Most Read Articles
English summary
Nurburgring, the infamous racing circuit near Frankfurt Germany, is also referred to by its other name - The Green Hell. It is called so for a very good reason. Nurburgring or The Ring has claimed more lives than any other race track in the world.&#13;
Story first published: Saturday, November 9, 2013, 12:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X