ரூ.13 கோடிக்கு ஏலம் போன துருப்பிடித்த கிடந்த அரிய ஃபெராரி கார்!

துருப்பிடித்து கிடந்த அரிய வகை ஃபெராரி கார் ரூ.13 கோடிக்கும் மேல் ஏலம் போய் வியக்க வைத்துள்ளது.

இத்தாலியை சேர்ந்த ஃபெராரி நிறுவனத்தின் முத்தாய்ப்பான தயாரிப்புகளில் ஒன்று டேடோனா. 1968ம் ஆண்டு முதல் 1973 வரை உற்பத்தியில் இருந்த இந்த கார் அந்த காலத்தின் அழகான கார்களில் ஒன்றாக வர்ணிக்கப்பட்டது. மொத்தமாக 1,284 ஃபெராரி டேடோனா கூபே ரக கார்களும், 122 கார்கள் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டதாகவும் உற்பத்தி செய்யப்பட்டன.

ரூ.13 கோடிக்கு ஏலம் போன துருப்பிடித்த கிடந்த அரிய ஃபெராரி கார்!

மேலும், அமெரிக்காவின் புளோரிடாவில் நடக்கும் 24 ஹவர்ஸ் டேடோனா என்டியூரன்ஸ் வகை கார் பந்தயத்திற்காக அலுமினியம் அலாய் பாடி கொண்ட 5 ரேஸ் கார்களும், அதே அலாய் பாடியுடன் சாதாரண சாலையில் செல்லத்தக்க ஒரு காரும் தயாரிக்கப்பட்டன. ஃபெராரி பிரியர்களின் பொக்கிஷங்களில் ஒன்றாக கருதப்பட்ட இந்த கார் கால ஓட்டத்தில் கார் ஆர்வலர்களின் மனதில் இருந்து மறைந்து போயின.

ரூ.13 கோடிக்கு ஏலம் போன துருப்பிடித்த கிடந்த அரிய ஃபெராரி கார்!

இந்தநிலையில், அலாய் பாடியுடன் சாலையில் செல்லும் சிறப்பம்சம் கொண்ட ஒரே டேடோனா கார் தற்போது மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போய் வியக்க வைத்துள்ளது. ஃபெராரி 365 ஜிடிபி/ 4 என்ற அந்த கார்தான் இப்போது மீடியாவையும், ஆட்டோமொபைல் துறையினரின் ஈர்த்துள்ளது.

ரூ.13 கோடிக்கு ஏலம் போன துருப்பிடித்த கிடந்த அரிய ஃபெராரி கார்!

நீண்ட காலமாக பராமரிப்பு அற்ற நிலையில், புதுப்பிக்கப்படாத நிலையில், இந்த கார் ரூ.13.90 கோடி விலையில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. கிட்டதட்ட 50 ஆண்டுகள் பழமையான இந்த கார் இந்த விலைக்கு விற்பனையாகி இருப்பது கார் ஆர்வலர்களின் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது.

ரூ.13 கோடிக்கு ஏலம் போன துருப்பிடித்த கிடந்த அரிய ஃபெராரி கார்!

காரின் ஆவணங்கள் சரியாக இருப்பதுடன், ஆவணத்தில் இருப்பது போன்ற இந்த காரின் முக்கிய உதிரிபாகங்கள் எந்த மாறுதல்களும் செய்யாமல் இருப்பதே இந்த விலைக்கு போனதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதனை ஃபெராரி வரலாற்று நிபுணர் மார்செல் மசினியும் ஆய்வு செய்து உறுதி செய்துள்ளார்.

ரூ.13 கோடிக்கு ஏலம் போன துருப்பிடித்த கிடந்த அரிய ஃபெராரி கார்!

ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட ஃபெராரி டேடோனா கார் 30 காராக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அலாய் பாடியுடன் தயாரிக்கப்பட்ட ஒரே டேடோனா கார் என்பதும் இதற்கான மதிப்பை இந்தளவு உயர்த்தி இருக்கிறது.

ரூ.13 கோடிக்கு ஏலம் போன துருப்பிடித்த கிடந்த அரிய ஃபெராரி கார்!

இந்த காரின் டோர் பேனல்கள், சன் வைசர்கள், ரியர் வியூ மிரர், இருக்கைகள், கியர் லிவர், ஹெட்லைனர் உள்ளிட்ட அனைத்தும் சிறந்த கண்டிஷனில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ரூ.13 கோடிக்கு ஏலம் போன துருப்பிடித்த கிடந்த அரிய ஃபெராரி கார்!

1971ம் ஆண்டு இந்த கார் ஜப்பானை சேர்ந்த ஒருவர் வாங்கி வெளிப்புறத்தில் சில சிறிய புதுப்பிப்பு பணிகளை மட்டுமே செய்துள்ளார். மற்றபடி, பழைய நிலையிலேயே 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. இந்த காரின் ஸ்பேர் டயர் கூட மாற்றப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.13 கோடிக்கு ஏலம் போன துருப்பிடித்த கிடந்த அரிய ஃபெராரி கார்!

இந்த காரில் 4.4 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டு இருந்தது. இந்த கார் அதிகபட்சமாக 347 பிஎச்பி பவரையும், 431 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருந்தது. இந்த கார் 35,400 கிமீ தூரம் ஓடியிருக்கிறது.

ரூ.13 கோடிக்கு ஏலம் போன துருப்பிடித்த கிடந்த அரிய ஃபெராரி கார்!

1968ம் ஆண்டு ஃபெராரி 365 ஜிடிபி4 கார் மாடல் பாரிஸ் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு முன்னர் 1967ம் ஆண்டு நடந்த டேடோனா 24 ஹவர் பந்தயத்தில் ஃபெராரி நிறுவனம் முதல் மூன்று இடங்களை பிடித்து அசத்தியது. இதனால், இந்த கார் மாடலை பத்திரிக்கையாளர்கள் டேடோனா என்று குறிப்பிட்டனர். அதுவே பின்னர் இந்த காருக்கான அடையாள பெயராக மாறியது.

Most Read Articles
மேலும்... #ஃபெராரி #ferrari
English summary
One-Off 'Barn Find' Ferrari Daytona With Alloy Body Sells For $2.17 Million At Auction.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X