கர்நாடக தேர்தலுக்காக ஆடிய நாடகம் முடிந்தது...புதிய உச்சத்தை தொட்டது பெட்ரோல், டீசல் விலை...

கர்நாடக தேர்தலை மனதில் வைத்து மாற்றம் செய்யப்படாமல் இருந்து வந்த பெட்ரோல், டீசலின் விலை இன்று அதிரடியாக உயர்த்தப்பட்டது.

By Arun

கர்நாடகா தேர்தலை மனதில் வைத்து மாற்றம் செய்யப்படாமல் இருந்து வந்த பெட்ரோல், டீசலின் விலை இன்று அதிரடியாக உயர்த்தப்பட்டது. விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளதால், மோடி தலைமையிலான மத்திய பாஜ அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியும், கோபமும் அடைந்துள்ளனர். இதுபற்றிய விரிவான செய்தியை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

கர்நாடக தேர்தலுக்காக ஆடிய நாடகம் முடிந்தது...புதிய உச்சத்தை தொட்டது பெட்ரோல், டீசல் விலை...

ஆயில் நிறுவனங்களுக்கு அதிகாரம்

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசுதான் நிர்ணயித்து வந்தது. இதன்பின் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் ஆயில் நிறுவனங்கள் வசம் சென்றது. ஆயில் நிறுவனங்கள் நஷ்டம் அடைந்ததால், இந்த அதிகாரம் கொடுக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

கர்நாடக தேர்தலுக்காக ஆடிய நாடகம் முடிந்தது...புதிய உச்சத்தை தொட்டது பெட்ரோல், டீசல் விலை...

15 நாட்களுக்கு ஒரு முறை

இதன்பின் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து மாதம் 2 முறை, அதாவது 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஆயில் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வந்தன.

கர்நாடக தேர்தலுக்காக ஆடிய நாடகம் முடிந்தது...புதிய உச்சத்தை தொட்டது பெட்ரோல், டீசல் விலை...

தினமும் மாற்றம்

இதன்பின் இந்த முறையிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டது. அதாவது பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயிக்கும் முறை அமல்படுத்தப்பட்டது. பொழுது விடிந்தால், அதாவது காலை 6 மணியளவில் பெட்ரோல், டீசலுக்கு புதிய விலை நிர்ணயம் செய்யப்படும்.

கர்நாடக தேர்தலுக்காக ஆடிய நாடகம் முடிந்தது...புதிய உச்சத்தை தொட்டது பெட்ரோல், டீசல் விலை...

நாடு முழுவதும் அமல்

பெட்ரோல், டீசலுக்கு தினசரி விலை நிர்ணயிக்கும் முறை முதற்கட்டமாக, புதுச்சேரி, சண்டிகர், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர், ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் மற்றும் சண்டிகர் உள்ளிட்ட இடங்களில், கடந்த ஆண்டு மே 1ம் தேதி முதல், பரிசோதனை முயற்சியாக தொடங்கப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு ஜூன் 16ம் தேதி முதல், நாடு முழுவதும் இந்த முறை அமல்படுத்தப்பட்டது.

கர்நாடக தேர்தலுக்காக ஆடிய நாடகம் முடிந்தது...புதிய உச்சத்தை தொட்டது பெட்ரோல், டீசல் விலை...

தந்திரம் புரிந்தது

தினசரி விலை நிர்ணயிக்கும் முறை அமல்படுத்தப்பட்ட பின் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. அதாவது 15 நாட்களுக்கு ஒரு முறை மொத்தமாக உயர்த்தி வந்த நிலை மாறி, ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக விலை உயர்த்தப்பட்டது. இதனால் விலை ஏற்றம் அடைவது அவ்வளவாக வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்டது. எனினும் இதில் உள்ள தந்திரத்தை பின்னாளில் மக்கள் புரிந்து கொண்டார்கள்.

கர்நாடக தேர்தலுக்காக ஆடிய நாடகம் முடிந்தது...புதிய உச்சத்தை தொட்டது பெட்ரோல், டீசல் விலை...

கடும் எதிர்ப்பு

இதன்பின் பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயிக்கும் முறைக்கு எதிராக கடும் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். எதிர்கட்சிகள், பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில், நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்களும் நடத்தப்பட்டன.

கர்நாடக தேர்தலுக்காக ஆடிய நாடகம் முடிந்தது...புதிய உச்சத்தை தொட்டது பெட்ரோல், டீசல் விலை...

கண்டுகொள்ளாத மத்திய அரசு

ஆனால் மத்திய அரசோ, அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. தங்கள் முடிவில் உறுதியாக இருந்தது. இதனிடையே கடந்த ஏப்ரல் 24ம் தேதி பெட்ரோல், டீசல் விலை தலா 13 பைசா உயர்த்தப்பட்டது. அதன்பின் திடீரென பெட்ரோல், டீசல் விலையில் தினசரி எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் இருந்து வந்தது.

கர்நாடக தேர்தலுக்காக ஆடிய நாடகம் முடிந்தது...புதிய உச்சத்தை தொட்டது பெட்ரோல், டீசல் விலை...

கர்நாடக தேர்தல்

இதற்கு கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலே காரணமாக கூறப்பட்டது. கர்நாடக சட்டமன்றத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்ததால், பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த உடன் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

கர்நாடக தேர்தலுக்காக ஆடிய நாடகம் முடிந்தது...புதிய உச்சத்தை தொட்டது பெட்ரோல், டீசல் விலை...

நாடகம் முடிந்தது

இதனிடையே கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 12ம் தேதி நடைபெற்று முடிந்தது. எதிர்பார்க்கப்பட்டது போலவே, வாக்குப்பதிவு முடிந்த 2 நாட்களுக்கு பிறகு, அதாவது இன்று (திங்கள்-14ம் தேதி) பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

கர்நாடக தேர்தலுக்காக ஆடிய நாடகம் முடிந்தது...புதிய உச்சத்தை தொட்டது பெட்ரோல், டீசல் விலை...

பெட்ரோல் விலை 18 பைசா உயர்வு

இதன்படி சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 18 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 17 பைசா உயர்ந்துள்ளது.

கர்நாடக தேர்தலுக்காக ஆடிய நாடகம் முடிந்தது...புதிய உச்சத்தை தொட்டது பெட்ரோல், டீசல் விலை...

டீசல் விலை 23 பைசா உயர்வு

அதே நேரத்தில் டீசலின் விலை சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் லிட்டருக்கு 23 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் டீசலின் விலை லிட்டருக்கு 21 பைசாவும், கொல்கத்தாவில் டீசலின் விலை லிட்டருக்கு 5 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளன.

கர்நாடக தேர்தலுக்காக ஆடிய நாடகம் முடிந்தது...புதிய உச்சத்தை தொட்டது பெட்ரோல், டீசல் விலை...

இன்றைய விலை நிலவரம்

டெல்லியில் இன்று பெட்ரோலின் விலை ஒரு லிட்டர் 74.8 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 77.5 ரூபாயாகவும், மும்பையில் 82.65 ரூபாயாகவும், சென்னையில் 77.61 ரூபாயாவும் இருந்தது. அதே நேரத்தில் டெல்லியில் இன்று டீசலின் விலை 66.14 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 68.68 ரூபாயாகவும், மும்பையில் 70.43 ரூபாயாகவும், சென்னையில் 69.79 ரூபாயாகவும் இருந்தது.

கர்நாடக தேர்தலுக்காக ஆடிய நாடகம் முடிந்தது...புதிய உச்சத்தை தொட்டது பெட்ரோல், டீசல் விலை...

புதிய உச்சம்

யூனியன் பிரதேசமும், நாட்டின் தலைநகரமுமான டெல்லியில் டீசலின் விலை 66 ரூபாயை கடப்பது வரலாற்றில் தற்போதுதான் முதல் முறையாக அரங்கேறியுள்ளது. அதே நேரத்தில் பெட்ரோலின் விலை 56 மாதங்களில் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

கர்நாடக தேர்தலுக்காக ஆடிய நாடகம் முடிந்தது...புதிய உச்சத்தை தொட்டது பெட்ரோல், டீசல் விலை...

மக்களின் கோபம்

எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் இருந்து வந்த நிலையில், 19 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசலின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. மக்கள் நலன் கருதிதான் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யாமல் இருந்து வந்ததாக ஆயில் நிறுவனங்களும், மோடி தலைமையிலான மத்திய பாஜ அரசும் தெரிவித்தன. ஆனால் கர்நாடகாவில் வாக்குப்பதிவு முடிந்த உடனேயே விலையை உயர்த்தி இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக தேர்தலுக்காக ஆடிய நாடகம் முடிந்தது...புதிய உச்சத்தை தொட்டது பெட்ரோல், டீசல் விலை...

7.16 ரூபாய் விலை உயர்வு

நடப்பு ஆண்டில் இதுவரை டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 4.83 ரூபாயும், கொல்கத்தாவில் 4.78 ரூபாயும், மும்பையிலும் 4.78 ரூபாயும், சென்னையில் 5.08 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளன. டீசலின் விலை டெல்லியில் 6.5 ரூபாயும், கொல்கத்தாவில் 6.38 ரூபாயும், மும்பையில் 7.16 ரூபாயும், சென்னையில் 6.96 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளன.

கர்நாடக தேர்தலுக்காக ஆடிய நாடகம் முடிந்தது...புதிய உச்சத்தை தொட்டது பெட்ரோல், டீசல் விலை...

ரூபாயின் மதிப்பு பலவீனமும் காரணம்

இந்த காலகட்டத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 சதவீதத்திற்கும் மேலாக பலவீனம் அடைந்து விட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் கச்சா எண்ணெய்யை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நெருக்கடிக்கு நம் நாட்டு ஆயில் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.

கர்நாடக தேர்தலுக்காக ஆடிய நாடகம் முடிந்தது...புதிய உச்சத்தை தொட்டது பெட்ரோல், டீசல் விலை...

80 சதவீதம் இறக்குமதிதான்

இந்தியா தனது ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை இறக்குமதி செய்தே பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அதிக விலை கொடுத்து கச்சா எண்ணெய்யை நம் நாட்டு ஆயில் நிறுவனங்கள் வாங்கி வருகின்றன.

கர்நாடக தேர்தலுக்காக ஆடிய நாடகம் முடிந்தது...புதிய உச்சத்தை தொட்டது பெட்ரோல், டீசல் விலை...

நிதியாண்டு கணக்கீடு

கடந்த ஏப்ரல் 1ம் தேதிதான் நடப்பு நிதியாண்டு தொடங்கியது. அன்று முதல் கணக்கிட்டால், டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் பெட்ரோலின் விலை 1.24-1.32 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மேற்கண்ட நகரங்களில் இந்த கால கட்டத்தில் டீசலின் விலை 1.59-1.86 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

கர்நாடக தேர்தலுக்காக ஆடிய நாடகம் முடிந்தது...புதிய உச்சத்தை தொட்டது பெட்ரோல், டீசல் விலை...

ஜிஎஸ்டி வரம்பிற்குள் வருமா?

ஒரே வரி விதிப்பு முறையான ஜிஎஸ்டி வரம்பிற்குள், பெட்ரோல், டீசலை இன்னும் மத்திய அரசு கொண்டு வரவில்லை. இதனால் இன்னமும் அந்தந்த மாநிலங்களின் வாட் வரி உள்பட ஏராளமான வரிகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதாவது பெட்ரோல், டீசல் விலையில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தை நாம் வரியாக மட்டுமே செலுத்தி கொண்டிருக்கிறோம்.

கர்நாடக தேர்தலுக்காக ஆடிய நாடகம் முடிந்தது...புதிய உச்சத்தை தொட்டது பெட்ரோல், டீசல் விலை...

சந்தேகமே...!

எனவே ஒரே வரி விதிப்பு முறையான ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வந்தால், அதன் விலை குறைய வாய்ப்புள்ளது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அதிகபட்ச வரி வருவதால், மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுப்பது சந்தேகமே. ஆனால் இனியாவது பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பொதுமக்களின் அந்த எண்ணம் ஈடேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #பெட்ரோல் #petrol
English summary
Petrol, diesel prices hiked after 19 days as Karnataka elections get over. read in tamil
Story first published: Monday, May 14, 2018, 14:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X