4 ஆண்டுகளில் இல்லாத பெட்ரோல் விலையேற்றம் காரணம் என்ன?

கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவு தற்போது பெட்ரோலின் விலை அதிகரிகத்துள்ளது. இதற்கு முக்கிய காரணங்கள் என்ன? எவ்வாறு இது அதிகரிகத்தது, இதற்கு தீர்வு என்ன என்பதை இந்த செய்தியில் காணலாம்.

By Balasubramanian

மத்திய அரசு எண்ணை நிறுவனங்களையே பெட்ரோல் விலையை நாளுக்கு நாள் மாற்றும் நடைமுறையை கடந்தாண்டு ஜூன் மாதம் கொண்டுவந்தது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு பெட்ரோல் விலை மாற்றப்பட்டு வருகிறது.

4 ஆண்டுகளில் இல்லாத பெட்ரோல் விலையேற்றம் காரணம் என்ன?

தற்போது சென்னை விலைப்படி பெட்ரோல் விலை இன்று மட்டும் 11 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ 76.59 காசுகளாக உள்ளது. இது கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத உயர்ந்த பட்ச விலையாகும்.

4 ஆண்டுகளில் இல்லாத பெட்ரோல் விலையேற்றம் காரணம் என்ன?

இது போல் கடந்த அக்., மாதம் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து ரூ 70 ஐ எட்டிய நிலையில் அதை கட்டுப்படுத்த மத்திய எண்னண அமைச்சகம் பெட்ரோலுக்கான கலால் வரியை குறைத்தது.

4 ஆண்டுகளில் இல்லாத பெட்ரோல் விலையேற்றம் காரணம் என்ன?

இதன் மூலம் மத்திய அரசுக்கு கலால் வரியால் கிடைத்து கொண்டிருந்த ரூ 26 ஆயிரம் கோடி ரூ 13 ஆயிரம் கோடியாக குறைந்தது.

4 ஆண்டுகளில் இல்லாத பெட்ரோல் விலையேற்றம் காரணம் என்ன?

இதன் மூலம் பெட்ரோல் விலை சுமார் ரூ 2 வரை குறைந்தது. இந்நிலையில் கடந்த பிப்., மாதம் பட்ஜெட் தாக்கலின் போது ஜெட்லி அந்த அறிவிப்பை வெளியிடவில்லை.

4 ஆண்டுகளில் இல்லாத பெட்ரோல் விலையேற்றம் காரணம் என்ன?

இதன் மூலம் மீண்டும் பெட்ரோலுக்கான கலால் வரி உயர்த்தப்பட்டுஅமலானது. இதன் தாக்கமாக பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது.

4 ஆண்டுகளில் இல்லாத பெட்ரோல் விலையேற்றம் காரணம் என்ன?

இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு பா.ஜ., அரசு பொருப்பேற்றதில் இருந்து கச்சா எண்ணை விலையை நிகர் படுத்த 9 முறை கலால் வரியை உயர்த்தியது.

4 ஆண்டுகளில் இல்லாத பெட்ரோல் விலையேற்றம் காரணம் என்ன?

இதன் மூலம் அரசுக்கு 2014-15ம் நிதியாண்டில் ரூ 99 ஆயிரம் கோடியாக இருந்த வருவாய், 2016 - 17ம் நிதியாண்டில் 2.42 லட்சம் கோடியாக உயர்ந்தது.

4 ஆண்டுகளில் இல்லாத பெட்ரோல் விலையேற்றம் காரணம் என்ன?

இதற்கிடையில் பெட்ரோல் விலையை கட்டுப்படுத்த மாநில அரசுகள் வாட் வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது.

4 ஆண்டுகளில் இல்லாத பெட்ரோல் விலையேற்றம் காரணம் என்ன?

ஆனால் மஹாராஷ்டிரா, குஜராத், ம.பி., ஹிமாச்சல் உள்ளிட்ட சில மாநிலங்களை தவிற மற்ற பா.ஜ., ஆளும் மாநிலங்களில் கூட வாட் வரி குறைக்கப்படவில்லை.

4 ஆண்டுகளில் இல்லாத பெட்ரோல் விலையேற்றம் காரணம் என்ன?

கடந்தாண்டு ஜூன் மாதம் வரை 15 நாளுக்கு ஒரு முறை மாற்றப்பட்டு வந்த பெட்ரோல் விலை தினம் மாறுதலுக்கு உள்ளானது முதல் விலையேற்றம் சற்று அதிக அளவில் காணப்பட்டது.

4 ஆண்டுகளில் இல்லாத பெட்ரோல் விலையேற்றம் காரணம் என்ன?

இதில் நாம் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் தெற்காசியாவிலேயே இந்தியாவில் தான் பெட்ரோலின் விலை அதிகம். பம்பிற்கு வரும் பெட்ரோலின் விலையில் பாதிக்கும் அதிகமாக அதன் வரி இருப்பதால் தான் இந்த விலையேற்றம்.

4 ஆண்டுகளில் இல்லாத பெட்ரோல் விலையேற்றம் காரணம் என்ன?

இந்தியாவில் வாகனங்களில் எண்ணிக்கை அதிகமானதால் பெட்ரோல் பயன்பாடு அதிகமாக தான் உள்ளது. இதை கட்டுப்படுத்த இந்தியவிற்கு எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையை அதிகரிக்க அரசு முன் வர வேண்டும்.

4 ஆண்டுகளில் இல்லாத பெட்ரோல் விலையேற்றம் காரணம் என்ன?

அரசு ஏற்கனவே ஏலெக்ட்ரிக் கார்களுக்கு மானியம் வழங்கினாலும், அதன் விலை மற்ற கார்களை காட்டிலும் கிட்டத்தட்ட நிகரான விலையிலும், ஆனால் அதை விட வசதிகளிலும் மட்டுமே கிடைக்கிறது.

4 ஆண்டுகளில் இல்லாத பெட்ரோல் விலையேற்றம் காரணம் என்ன?

மேலும் இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களக்கான சார்ஜ் செய்யும் மையங்கள் மிகக்குறைவாக உள்ளது. அதையும் போர்க்கால அடிப்படையில் அதிகரிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையில் உள்ளோம்.

4 ஆண்டுகளில் இல்லாத பெட்ரோல் விலையேற்றம் காரணம் என்ன?

குறைந்தபட்சம் டெல்லி, மும்பை, பெங்களூரூ, சென்னை, கோல்கட்டா ஆகிய நகரிலாவது அடுத்தாண்டு பெரிய எண்ணிக்கையிலான எலக்ட்ரிக் கார்களை இயக்க வைக்க இலக்காக கொண்டு அரசு செயல்பட வேண்டும்.

4 ஆண்டுகளில் இல்லாத பெட்ரோல் விலையேற்றம் காரணம் என்ன?

இதன் மூலம் பெட்ரோலின் தேவைகள் குறையத்துவங்கும். அதனால் பெட்ரோல் டீசல் விலையேற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்கள் விடுபடுவர்.

Most Read Articles
மேலும்... #petrol #auto news
English summary
petrol price hits 4 yr high diesel at highest level. Read in Tamil
Story first published: Monday, April 2, 2018, 17:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X