ரூ.51 கோடி மதிப்பிலான சூப்பர் கார், பைக் புல்டோசர் ஏற்றி அழிப்பு.. வருமானம் பார்க்க விரும்பாத அதிபர்

ரூ.51 கோடி மதிப்பிலான சூப்பர் கார், பைக் ஆகியவை புல்டோசர் ஏற்றி அழிக்கப்பட்டது. இந்த வீடியோ காட்சி, சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

By Arun

51 கோடி ரூபாய் மதிப்பிலான சூப்பர் கார், பைக் ஆகியவை புல்டோசர் ஏற்றி அழிக்கப்பட்டது. இந்த வீடியோ காட்சி, சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரூ.47 கோடி மதிப்பிலான சூப்பர் கார், பைக் புல்டோசர் ஏற்றி அழிப்பு.. துடிதுடித்து போன அதிபர் உருக்கம்..

பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட், அடிக்கடி ஏதேனும் சர்ச்சைகளில் சிக்கி கொள்பவர். இவரது பேச்சுக்கள் எல்லாம் பரபரப்பை கிளப்புவதாகவே இருக்கும். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, ஐநா சபை தலைவர் ஆகியோரை மிக கடுமையான வார்த்தைகளால், ரோட்ரிகோ டியுடெர்ட் விமர்சித்துள்ளார்.

ரூ.47 கோடி மதிப்பிலான சூப்பர் கார், பைக் புல்டோசர் ஏற்றி அழிப்பு.. துடிதுடித்து போன அதிபர் உருக்கம்..

இந்த சூழலில், இந்திய மதிப்பில் சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பிலான 68 வாகனங்களை, பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் சமீபத்தில் அழித்துள்ளார். இதில், லம்போர்கினி, மஸ்டங், போர்ஸே உள்ளிட்ட சூப்பர் கார்களும், விலை உயர்ந்த பைக்குகளும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.47 கோடி மதிப்பிலான சூப்பர் கார், பைக் புல்டோசர் ஏற்றி அழிப்பு.. துடிதுடித்து போன அதிபர் உருக்கம்..

விலை உயர்ந்த வாகனங்கள் எல்லாம், புல்டோசர் ஏற்றி நசுக்கி அழிக்கப்பட்டன. அதனை பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் மற்றும் அந்நாட்டின் உயரதிகாரிகளும் அமர்ந்து பார்த்து கொண்டிருந்தனர். அந்த வீடியோ காட்சி, தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ரூ.47 கோடி மதிப்பிலான சூப்பர் கார், பைக் புல்டோசர் ஏற்றி அழிப்பு.. துடிதுடித்து போன அதிபர் உருக்கம்..

பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் தனது பரபரப்பான பேச்சுக்கள் மூலமாக அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி கொள்பவர் என்றாலும் கூட, போதை பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக மிக மிக கடுமையான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக எடுத்து வருகிறார்.

ரூ.47 கோடி மதிப்பிலான சூப்பர் கார், பைக் புல்டோசர் ஏற்றி அழிப்பு.. துடிதுடித்து போன அதிபர் உருக்கம்..

இதன் ஒரு பகுதியாகதான் தற்போது 68 வாகனங்களை அழித்துள்ளார். இதில், சில வாகனங்கள் போதை பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டவை. சில வாகனங்கள் வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்டவை. விலை உயர்ந்த வாகனங்கள் அழிக்கப்படும் வீடியோவை கீழே காணலாம்.

குற்றச்செயல்களை அரங்கேற்றுவதற்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள், பறிமுதல் செய்யப்பட்டவுடன் பொதுவாக ஏலம்தான் விடப்படும். அதன்மூலம் காவல் துறைக்கு நிதி திரட்டப்படும். ஆனால் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் அவ்வாறு செய்வது இல்லை.

ரூ.47 கோடி மதிப்பிலான சூப்பர் கார், பைக் புல்டோசர் ஏற்றி அழிப்பு.. துடிதுடித்து போன அதிபர் உருக்கம்..

ஏனெனில் விலை உயர்ந்த வாகனங்களை கூட ஒட்டுமொத்தமாக அழிப்பதன் மூலம், போதை பொருள் கடத்தல்காரர்களுக்கும், அவர்களது சட்ட விரோதமான செயல்பாடுகளுக்கும் கடுமையான எச்சரிக்கையை பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் தொடர்ச்சியாக விடுத்து வருகிறார்.

ரூ.47 கோடி மதிப்பிலான சூப்பர் கார், பைக் புல்டோசர் ஏற்றி அழிப்பு.. துடிதுடித்து போன அதிபர் உருக்கம்..

போதை பொருள் கடத்தியதாகவும், வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாகவும் பறிமுதல் செய்யப்பட்ட மிகவும் விலை உயர்ந்த வாகனங்களை எல்லாம், பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் புல்டோசர் ஏற்றி அழிப்பது இது முதல் முறை அல்ல.

ரூ.47 கோடி மதிப்பிலான சூப்பர் கார், பைக் புல்டோசர் ஏற்றி அழிப்பு.. துடிதுடித்து போன அதிபர் உருக்கம்..

இந்திய மதிப்பில் சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பிலான பைக்குகளை கடந்த சில மாதங்களுக்கு முன், பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் அழித்திருந்தார். அதனை தொடர்ந்து சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான சூப்பர் கார்கள், கடந்த பிப்ரவரி மாதம் புல்டோசர் ஏற்றி அழிக்கப்பட்டது.

ரூ.47 கோடி மதிப்பிலான சூப்பர் கார், பைக் புல்டோசர் ஏற்றி அழிப்பு.. துடிதுடித்து போன அதிபர் உருக்கம்..

போதை பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும், சட்ட விரோதமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகவும் எழுந்த புகார் அடிப்படையில் இந்த வாகனங்கள் அழிக்கப்பட்டன. இவ்வாறு தொடர்ச்சியாக விலையுயர்ந்த வாகனங்கள் அழிக்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.47 கோடி மதிப்பிலான சூப்பர் கார், பைக் புல்டோசர் ஏற்றி அழிப்பு.. துடிதுடித்து போன அதிபர் உருக்கம்..

விலை உயர்ந்த வாகனங்களை அழித்து கடுமையான நடவடிக்கை எடுத்தாலும், ரோட்ரிகோ டியுடெர்ட் மோட்டார் சைக்கிள் ஆர்வலர் என்பது குறிப்பிடத்தக்கது. மோட்டார் சைக்கிள்கள் என்றால் அவருக்கு கொள்ளை பிரியம். ஒரு முறை ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் புல்டோசர் ஏற்றி அழிக்கப்பட்டது.

ரூ.47 கோடி மதிப்பிலான சூப்பர் கார், பைக் புல்டோசர் ஏற்றி அழிப்பு.. துடிதுடித்து போன அதிபர் உருக்கம்..

அப்போது தன் மனம் துடிதுடித்ததாக ரோட்ரிகோ டியுடெர்ட் குறிப்பிட்டுள்ளார். ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் மீது புல்டோசர் ஏறியபோது, எனது கழுத்து நசுங்குவதை போன்ற உணர்வு ஏற்பட்டது என ரோட்ரிகோ டியுடெர்ட் மனம் வருந்தி தெரிவித்தார்.

ரூ.47 கோடி மதிப்பிலான சூப்பர் கார், பைக் புல்டோசர் ஏற்றி அழிப்பு.. துடிதுடித்து போன அதிபர் உருக்கம்..

எனினும் வாகனங்களை அழிப்பது ஏன் என்ற கேள்வியை ரோட்ரிகோ டியுடெர்ட்டிடம் கேட்டபோது ''முதலீடு செய்வதற்கும், தொழில் செய்வதற்கும் ஏற்ற இடம் பிலிப்பைன்ஸ் என்பதை உலகிற்கு காட்ட வேண்டியுள்ளது. அதனால்தான் நான் இதை செய்து வருகிறேன்'' என தெரிவித்தார்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Philippines President Destroys Supercar and Bikes. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X