இன்று லட்சக்கணக்கில் இருக்கலாம்... 1986இல் புல்லட் பைக்கின் விலை இவ்வளவுதான்!! இணையத்தில் வெளியான பழைய பில்

இங்கிலாந்தில் தோன்றி தற்சமயம் இந்தியாவின் அடையாளங்களுள் ஒன்றாக விளங்கும் ராயல் என்பீல்டின் பைக்குகளுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளதை மறுப்பதற்கு இல்லை. எப்படியாவது ஒரு ராயல் என்பீல்டு பைக்கை வாங்கிவிட வேண்டும் என்பதையே தனது வாழ்க்கை கனவாக கொண்டுள்ளவர்களும் இருக்க தான் செய்கின்றனர்.

இப்போது மட்டுமில்லை, அத்தகைய ரசிகர்கள் கடந்த பல வருடங்களுக்கு முன்பே இருந்துள்ளனர். அதாவது அப்போதே ராயல் என்பீல்டு பைக்குகளை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்துள்ளது. அவ்வாறு 1986ஆம் ஆண்டில் ராயல் என்பீல்டு பைக்கை வாங்கிய ஒருவர், அந்த பைக்கை எந்த அளவிலான தொகையில் வாங்கினார், பைக்கை ஆர்டிஓ-வில் பதிவு செய்ய எவ்வளவு கட்டணமாக கட்டினார் என்பது குறித்த விபரங்கள் அடங்கிய பழைய பில்லின் படம் ஒன்று இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது.

இணையத்தில் வைரலாகி வரும் இந்த படத்தின்படி பார்த்தோமேயானால், 1986இல் அந்த ராயல் என்பீல்டு பைக் வெறும் ரூ.18,700க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ராயல் என்பீல்டு_4567கே என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த பழமையான பில் ஆனது 1986ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி ஆர் எஸ் என்ஜீனியரிங் இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தால் வாங்கப்பட்ட ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக் ஒன்றிற்கான பில் ஆகும்.

அப்படியென்றால், இந்த புல்லட் 350 பைக்கை தனிநபர் ஒருவர் வாங்கவில்லை. ஓர் தனியார் நிறுவனம் தனது சொந்த பயன்பாட்டிற்காக கிட்டத்தட்ட 37 வருடங்களுக்கு முன்பு வாங்கியுள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனம் நீண்ட காலமாக உற்பத்தி செய்து, விற்பனை செய்த மோட்டார்சைக்கிள் புல்லட் ஆகும். இன்னும் சொல்லப்போனால், முந்தைய காலங்களில் ராயல் என்பீல்டு பிராண்டின் பெயர் தெரியாதவர்கள் கூட இருப்பர். ஆனால் புல்லட் பைக்கை பற்றி அறியாதவர்களே இருக்க மாட்டார்கள்.

500சிசி, 350சிசி என இரு விதமான சிசி-களில் புல்லட் பைக்குகள் கடந்த காலங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் புல்லட் 350 பைக்கில் ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டை 1986இல் ஆர் எஸ் என்ஜீனியரிங் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த நிறுவனத்திற்கு ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கை விற்பனை செய்தது சந்தீப் ஆட்டோ கம்பெனி என்ற டீலர்ஷிப் மையம் ஆகும். இந்த மையம் 1986இல் ஜார்காண்ட் மாநிலத்தின் பொகரோ இரும்பு நகரத்தில் உள்ள கோத்தாரி சந்தையில் செயல்பட்டு வந்துள்ளது.

1986இல் புல்லட் 350 பைக்கை இந்த விலையில் வாங்க முடிந்ததா!!

சந்தீப் ஆட்டோ கம்பெனியால் வழங்கப்பட்டுள்ள இந்த பில்லில் பைக்கின் ஆன்-ரோடு விலையாக ரூ.18,800 குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் அந்த விலையில் இருந்து சலுகையாக ரூ.250 குறைக்கப்பட்டு, பின்னர் உரிமையாளர் பதிவிற்காக ரூ.150 சேர்க்கப்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில் ரூ.18,700 என்ற விலையில் அந்த சமயத்தில் புல்லட் 350 பைக்கை ஆர் எஸ் என்ஜீனியரிங் இண்டஸ்ட்ரீஸ் வாங்கியுள்ளது. ஆனால் இன்று வாங்க போனால், ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கின் விலை அதனை காட்டிலும் கிட்டத்தட்ட 8 மடங்கு அதிகமாக ரூ.1.50 லட்சமாகும்.

ரூ.1.50 லட்சம் என்பது எக்ஸ்-ஷோரூம் விலையே. ஆர்டிஓ பதிவு, இன்ஸ்சூரன்ஸ் எல்லாம் சேர்த்தால் ஆன்-ரோடு விலை தாராளமாக ரூ.1.70 லட்சத்தை தாண்டிவிடும். தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள இந்த பழைய பில்லில் நம்மால் பலரையும் கவர்ந்த ராயல் என்பீல்டின் பழமையான லோகோவையும் காண முடிகிறது. ஏற்கனவே கூறியதுபோல், இங்கிலாந்தை சேர்ந்த பிரிட்டிஷ் மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமாக அறிமுகமாகினாலும் ராயல் என்பீல்டு தற்சமயம் உலகம் முழுவதும் அறியப்பட்ட இந்திய பைக் தயாரிப்பு நிறுவனமாகும்.

இதில் மற்றொரு ஹைலைட் என்னவென்றால், ராயல் என்பீல்டின் பிரதானமான தொழிற்சாலை ஆனது நமது சென்னையில் திருவொற்றியூர் பகுதியில் தான் உள்ளது. ஆனால் இப்போது தாய்லாந்து என வேறு சில நாடுகளிலும் ராயல் என்பீல்டு நிறுவனம் தொழிற்சாலையை நிறுவியுள்ளது என்றாலும், 1986இல் விற்பனை செய்யப்பட்டுள்ள அந்த புல்லட் 350 பைக்கானது சென்னையில் உருவாக்கப்பட்டதாகவே இருக்கும். இது 1986இல் விற்பனை செய்யப்பட்ட ராயல் என்பீல்டு பைக்கின் பில், இன்னும் 1940, 50களில் விற்கப்பட்ட பைக்கின் பில்கள் நம்மை இன்னும் ஆச்சிரியத்திற்கு உள்ளாக்கும்.

Most Read Articles
English summary
Picture of bill of sale of 1986 royal enfield bullet 350 viral
Story first published: Monday, January 2, 2023, 15:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X