நிதானத்தை இழந்து செயற்கை தடாகத்தில் பாய்ந்த போர்ஷே கார்!

Written By:

சீனாவில், போர்ஷே கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து செயற்கை தடாகத்தில் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சீனாவின், குவாங்டாங் மாகாணத்தில் இருக்கும் சாவோசூ நகரில் உள்ள கல்லூரி வளாகத்தின் அருகே அருகே இந்த விபத்து நடந்தது. பார்க்கிங் வளாகத்திலிருந்து அந்த போர்ஷே பனமிரா 4எஸ் காரில், அதன் உரிமையாளர் புறப்பட்டிருக்கிறார். அப்போது கனமழை பெய்து கொண்டிருந்தது.

Porsche Car
  

இதனால், பாதை சரியாக தெரியவில்லை என தெரிகிறது. கிளம்பிய உடன் கட்டுப்பாட்டை இழந்த, அந்த கார் எதிரே இருந்த செயற்கை தடாகத்தில் எதிர்பாராதவிதமாக பாய்ந்தது.

அதிர்ஷ்டவசமாக அந்த காரை ஓட்டிய உரிமையாளர் காயமின்றி தப்பினார். நீரில் பாதியளவு மூழ்கிய அந்த காரை மீட்பதற்கு ஏற்பாடுகளை செய்து வருகிறார். அந்த காரின் பதிவு எண் யு-888. நம்மூரில் 8 ஆம் எண்ணை கண்டு அச்சப்படுவர். ஆனால், சீனர்கள் 8ஆம் எண்ணை ராசியானதாக கருதுகின்றனர்.

Porsche Car 1
 

அதனாலேயே, அந்த காருக்கு 888 என்ற பதிவெண்ணை கேட்டு வாங்கியிருக்கிறார் அதன் உரிமையாளர். ஆனால், அந்த கார் 'தண்ணி' ராசி கொண்டது போலும். அவரது நம்பிக்கை வீண்போகும் வகையில், மிகுந்த செலவை இழுத்துவிட்டுள்ளது இந்த போர்ஷே கார்.

English summary
The Porsche fits the pond perfectly, like it was made for it. License plate reads U·UB888. Eight is a lucky number in China, but not that day. 
Story first published: Tuesday, January 6, 2015, 16:24 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos