சீனாவுடன் போர் என்று வந்தால் இந்தியாவை முன்னின்று காக்கும் டாப் -8 ஆயுதங்கள்!

எவரெஸ்ட் சிகரம் புகைப்படத்தை வெளியிட்டு மீண்டும் எல்லைப் பிரச்னைையை கிளப்பி விட்டுள்ளது சீனா. இதுபோன்று அவ்வப்போது எல்லைப் பிரச்னையை கிளப்பி இரு நாடுகளுக்குமான உறவில் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. ஒருவேளை, சீனாவுடன் போர் என்று வந்தால், அதனை சமாளிக்க இந்தியாவிடம் இருக்கும் முக்கிய 8 ஆயுதங்கள் குறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

சீனாவுடன் போர் என்று வந்தால் இந்தியாவை முன்னின்று காக்கும் டாப் -8 ஆயுதங்கள்!

இதுபோன்ற பதட்டம் ஏற்படும் சூழல்களின்போது, இரு நாட்டு படை பலத்தை ஊடகங்கள் ஒப்பிட்டு எழுதி வருகின்றன. இது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும், ராணுவ பலத்தில் இந்தியாவும் பலமான நாடாகவே உள்ளது.

சீனாவுடன் போர் என்று வந்தால் இந்தியாவை முன்னின்று காக்கும் டாப் -8 ஆயுதங்கள்!

ஆனால், படை பலத்தை விட பிற விஷயங்களும், காரணிகளும் இந்தியாவுக்கு சாதகமான விஷயமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. மேலும், சீனாவை எதிர்ப்பதற்கு இந்தியாவிடம் உள்ள சக்திவாய்ந்த ஆயுதங்கள் குறித்த தகவல்களையும் இந்த செய்தியில் காணலாம்.

சீனாவுடன் போர் என்று வந்தால் இந்தியாவை முன்னின்று காக்கும் டாப் -8 ஆயுதங்கள்!

பூகோள ரீதியாக சீனாவுக்கும், இந்தியாவுக்கான எல்லைப்பகுதி கடினமான நிலப்பரப்புகளையும், இமயமலைப்பகுதியையும் கொண்டுள்ளது. இதனால், இரு நாடுகளுமே தரை வழித்தாக்குதல் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காது. குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே இந்த தரை வழித்தாக்குதல் திட்டம் கைகொடுக்கும்.

சீனாவுடன் போர் என்று வந்தால் இந்தியாவை முன்னின்று காக்கும் டாப் -8 ஆயுதங்கள்!

அதேநேரத்தில், வான் வழித் தாக்குதல், ஏவுகணை தாக்குதல் மற்றும் கடல் வழித்தாக்குதல் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். அவ்வாறான விஷயங்களில் இந்தியாவுக்கு பக்கபலமாக இருக்கப் போகும் 8 முக்கிய ஆயுதங்கள் குறித்த தகவல்களை பார்க்கலாம்.

பிரம்மோஸ் ஏவுகணை

பிரம்மோஸ் ஏவுகணை

உலகின் அதிவேக க்ரூஸ் ரக ஏவுகணை பிரம்மோஸ். ரஷ்யா- இந்தியா கூட்டணியில் உருவாக்கப்பட்ட இந்த ஏவுகணை தற்போது நீர்,நிலம் மற்றும் ஆகாயம் என மூன்று விதமான நிலைகளில் வைத்து ஏவ முடியும். இந்த ஏவுகணையானது மணிக்கு 3,400 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது. இந்த ஏவுகணையில் 440 பவுண்ட் எடையுடைய வெடிபொருளை வைத்து செலுத்த முடியும்.

சீனாவுடன் போர் என்று வந்தால் இந்தியாவை முன்னின்று காக்கும் டாப் -8 ஆயுதங்கள்!

அதிகபட்சமாக 300 கிமீ தூரத்தில் உள்ள இலக்குகள் வரை துல்லியமாக தாக்கும் திறன் வாய்ந்தது. அதாவது, இலக்கிற்கு ஒரு மீட்டரில் வெடிபொருளை வெடிக்கச் செய்யும் துல்லியமான ஏவுகணை. இந்த ஏவுகணையை தடுத்து நிறுத்துவது சீனாவுக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கும். தற்போது பிரம்மோஸ்-2 ஏவுகணையும் தயாராகி வருகிறது. இது ஹைப்பர்சானிக் ரகத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது.

ஐஎன்எஸ் கோல்கட்டா க்ளாஸ் டெஸ்ட்ராயர் கப்பல்

ஐஎன்எஸ் கோல்கட்டா க்ளாஸ் டெஸ்ட்ராயர் கப்பல்

எதிரிகளின் கண்ணில் எளிதில் சிக்காத வடிவமைப்பையும், மிக விரைவான செயல்திறையும் பெற்ற போர்க்கப்பல் ஐஎன்எஸ் கொல்கத்தா க்ளாஸ் டெஸ்ட்ராயர். இந்த கப்பலில் இருக்கும் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் மூலமாக தரை, வான் மற்றும் கடல் இலக்குகளை துல்லியமாக தாக்க முடியும்.

இந்தியாவின் விமானம் தாங்கி கப்பல்களுக்கு பாதுகாவலானாகவும், தனியாக சென்று எதிரி இலக்குகளை அழிப்பதற்கும் பயன்படுத்த முடியும். எனவே, இது பன்முக பயன்பாட்டு போர்க்கப்பலாகவும் குறிப்பிடப்படுகிறது. இந்த கப்பலில் 64 பாரக்-1 மற்றும் பாரக்-8 ஏவுகணைகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. தவிர, 16 பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணைகளும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

சீனாவுடன் போர் என்று வந்தால் இந்தியாவை முன்னின்று காக்கும் டாப் -8 ஆயுதங்கள்!

இந்த போர்க்கப்பலில் 76 மிமீ பீரங்கியும், நான்கு ஏகே-630 ரக எந்திர துப்பாக்கிகளும், நீர்மூழ்கி கப்பல்களிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகளை வழிமறித்து தாக்கும் ராக்கெட்டுகளும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. ஐஎன்எஸ் கோல்கட்டா க்ளாஸ் டெஸ்ட்ராயர் குடும்பத்தில் ஐஎன்எஸ் கோல்கட்டா, ஐஎன்எஸ் கொச்சி மற்றும் ஐஎன்எஸ் சென்னை ஆகிய மூன்று கப்பல்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

ஐஎன்எஸ் சக்ரா

ஐஎன்எஸ் சக்ரா

விசாகப்பட்டினத்தை மையமாக கொண்டு இயங்கி வரும் இந்த நீர்மூழ்கி கப்பலின் தலையாயப் பணி, இந்திய எல்லைக்குள் நுழையும் எதிரி நாட்டு கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகளை கண்டுபிடித்து தாக்கி அழிப்பதுதான். உலகிலேயே மிகவும் விரைவாக செல்லக்கூடிய நீர்மூழ்கி கப்பல் ஐஎன்எஸ் சக்ரா.

சீனாவுடன் போர் என்று வந்தால் இந்தியாவை முன்னின்று காக்கும் டாப் -8 ஆயுதங்கள்!

இது அதிகபட்சமாக 600 மீட்டர் ஆழம் வரை சென்று பயணிக்கும். எனவே, எதிரிகளால் எளிதாக கண்டறிய முடியாது. இந்த நீர்மூழ்கி கப்பல் மணிக்கு 30 நாட்டிக்கல் மைல் வேகத்தில் கடலுக்கடியில் பயணிக்கும் திறன் பெற்றது.

ஐஎன்எஸ் விக்ரமாதித்யா

ஐஎன்எஸ் விக்ரமாதித்யா

தரை வழி தாக்குதலைவிட கடல் வழியாக இந்தியாவை தாக்குவதற்கே சீனா முக்கியத்துவம் அளிக்கும் என்பது பாதுகாப்பு நிபுணர்களின் கருத்து. அதன்படி, கடல் வழி தாக்குதல்களை சமாளிக்க நம்மிடம் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா விமானம் தாங்கி போர்க்கப்பல் இருக்கிறது.

சீனாவுடன் போர் என்று வந்தால் இந்தியாவை முன்னின்று காக்கும் டாப் -8 ஆயுதங்கள்!

இந்த கப்பலில் மிக்29கே ரக போர் விமானங்களும், மிக் 29 கேயூபி ரகம் உள்பட 36 போர் விமானங்கள் இருக்கின்றன. இதுதவிர, கா-28 மற்றும் கா-31 ரக ஹெலிகாப்டர்களும் இருக்கின்றன. இந்த விமானம் தாங்கி கப்பல் மூலமாக 500 கிமீ தூரத்திற்கு கண்காணிக்கும் வசதிகள் உள்ளன. விமானம் தாங்கி போர்க்கப்பல்களை நீண்ட காலமாக இந்தியா இயக்கி வருவதால், பழுத்த அனுபவமும் கைகொடுக்கும்.

சுகோய் எஸ்யூ- 30 எம்கேஐ

சுகோய் எஸ்யூ- 30 எம்கேஐ

ரஷ்யாவிடமிருந்து உரிமை பெற்று எச்ஏஎல் நிறுவனம் தயாரிக்கும் இந்த போர் விமானம் ஏர் சுப்பீரியாரிட்டி எனப்படும் வகையை சேர்ந்தது. தாக்குதல் நடத்துவது மட்டுமின்றி, எதிரிகளின் வான்பகுதியை கட்டுக்குள் கொண்டு வரும் திறனும் படைத்தது.

சீனாவுடன் போர் என்று வந்தால் இந்தியாவை முன்னின்று காக்கும் டாப் -8 ஆயுதங்கள்!

இந்த விமானத்தில் 30மிமீ விட்டமுடைய துப்பாக்கி, எதிரிகளின் ஏவுகணைகளை வழிமறித்து தாக்கும் ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதவிர, தரை இலக்குகளை குறிவைத்து தாக்குவதற்கான வெடிகுண்டுகளையும் பொருத்த முடியும். இந்திய வான்படையின் தற்போதைய முக்கிய பலமாக விளங்குகிறது.

டி-90 பீஷ்மா பீரங்கி

டி-90 பீஷ்மா பீரங்கி

எல்லைப் பகுதியை கட்டிக்காப்பதில் இந்த பீரங்கிகளின் பங்கு மிக முக்கியமானது. இரவிலும் எதிரிகளின் நகர்வை துல்லியமாக கணித்து தாக்குதல் நடத்த முடியும். இந்த பீரங்கியை மூன்று பேர் கொண்ட வீரர்கள் குழு இயக்குவர்.

சீனாவுடன் போர் என்று வந்தால் இந்தியாவை முன்னின்று காக்கும் டாப் -8 ஆயுதங்கள்!

இந்த பீரங்கியில் 43 ரவுண்டுகள் சுடக்கூடிய 125மிமீ விட்டமுடைய முதன்மை துப்பாக்கி உள்ளது. அடுத்து, 12.7 மிமீ விட்டமுடைய எந்திர துப்பாக்கியும் பொருத்தப்பட்டு இருக்கிறது. சக்திவாய்ந்த எஞ்சின், தீத்தடுப்பு வசதி, எதிரிகளின் கண்களில் எளிதில் புலப்படாத வகையிலான வண்ணப்பூச்சு போன்றவை இதன் முக்கிய சிறப்புகள்.

பிருத்வி ஏவுகணை

பிருத்வி ஏவுகணை

இது நடுத்தர தூர வகை ஏவுகணை. பாகிஸ்தான் அச்சுறுத்தலை சமாளிப்பதற்காகவே இந்தியா உருவாக்கியதாக பேச்சு உலவுகிறது. எதிரி நாடுகளின் ஏவுகணைகளை வழி மறித்து தாக்கி அழிக்கும் பணியை செவ்வனே செய்யும்.

சீனாவுடன் போர் என்று வந்தால் இந்தியாவை முன்னின்று காக்கும் டாப் -8 ஆயுதங்கள்!

பிருத்வி ஏவுகணை மேக்-5 என்ற வேகத்தில் பயணிக்கும். எதிரிகளின் ஏவுகணையை விட 5 மடங்கு கூடுதல் வேகத்தில் பயணித்து வழியிலேயே தாக்கி அழித்துவிடும். 300 கிமீ முதல் 2,000 கிமீ தூரம் வரை இலக்குகளை நோக்கி பயணிக்கும். எதிரி ஏவுகணைகளை வானிலேயே தகர்த்து, தரைப்பகுதியில் அல்லது நம் நாட்டு இலக்குகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ளும்.

ஐஎன்எஸ் அரிஹந்த்

ஐஎன்எஸ் அரிஹந்த்

உள்நாட்டில் தயாரான முதல் அணுசக்தி நீர்மூழ்கி போர்க்கப்பல். அணு ஆயுதங்களை நீருக்கடியில் ஏவுவதற்காகவே விசேஷமாக தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி கப்பல் ஐஎன்எஸ் அரிஹந்த். இந்த நீர்மூழ்கி கப்பலில் 12 கே-15 ரக அணு ஆயுத ஏவுகணைகளையும், 4 கே-4 ரக அணு ஆயுத ஏவுகணைகளையும் நீருக்கடியில் இருந்து செலுத்த முடியும்.

சீனாவுடன் போர் என்று வந்தால் இந்தியாவை முன்னின்று காக்கும் டாப் -8 ஆயுதங்கள்!

நிலப்பகுதி, வான் பகுதி மற்றும் கடல் இலக்கு என மூன்று விதமான இலக்குகளையும் குறிவைத்து ஏவுகணைகளை செலுத்தும் திறன் பெற்றது. ஐஎன்எஸ் அரிஹந்த் கப்பல் ரஷ்ய நீர்மூழ்கி கப்பலின் டிசைன் தாத்பரியத்தில் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட அணுசக்தி நீர்மூழ்கி கப்பல். இந்த கப்பலில் 83MW திறன் கொண்ட அணு உலை பொருத்தப்பட்டு இருக்கிறது.

இங்க அடிச்சா அங்க வலிக்கும்...

இங்க அடிச்சா அங்க வலிக்கும்...

இந்த ஆயுதங்களை பயன்படுத்துவதன் மூலமாக இருநாடுகளுக்கும் பெரும் அழிவு ஏற்படும் என்பது நிதர்சனம். ஆனால், அழிவு தரும் ஆயுதங்களை பயன்படுத்துவதை விட வேறொரு வழியில் சீனாவிற்கு நெருக்கடி கொடுக்க முடியும்.

சீன தயாரிப்புகளை இந்திய மக்கள் தவிர்க்க தொடங்கினால், அது நிச்சயம் சீனாவுக்கு பேரிடியாக இருக்கும்.

பொருளாதார ரீதியில் சீனாவுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே கத்தியின்றி, ரத்தமின்றி சீனாவுக்கு பாடம் புகட்டும் வழியாக சொல்ல முடியும்.

போர் என்று வந்தால் இந்தியாவை காக்கும் ஆயுதங்கள்

இந்தியாவில் சுமார் 60 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகத்தை இருமடங்காக உயர்த்த இந்தியா அனுமதிக்கும் நிலை உள்ளது. சீன பொருட்கள் மீதான இறக்குமதிக்கு உடனடியாக தடை செய்ய முடியாது என்று மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது.

உலக வர்த்தக மையத்தின் விதிகளின்படி, சீன பொருட்களை இறக்குமதிக்கு தடை விதிக்க இயலாது என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால், பதட்டமான பகுதியில் தென்கொரியா படைகளை நிலைநிறுத்தியதால், அந்த நாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்ய சீனா அதிரடி தடை விதித்தது.

ஆனால், மத்திய அரசு விதிகளை காரணம் காட்டி, சீன பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இந்த நிலையில், சீன பொருட்களை தவிர்க்க தொடங்கினால் மட்டுமே, அந்நாட்டிற்கு தக்க பாடம் புகட்ட முடியும்.

 
Most Read Articles

English summary
Top 8 Deadly Weapons India Has In Case Of A War Against China.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more