ஏலத்திற்கு வரும் இளவரசி டயானாவின் 1981 ஃபோர்டு எஸ்கார்ட்!! யாருக்கு அதிர்ஷ்டம் அடிச்சிருக்கோ..!

1980களில் இளவரசி டயானா பயன்படுத்திய 1981 ஃபோர்டு எஸ்கார்ட் கார் இங்கிலாந்தில் ஏலத்திற்கு வரவுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஏலத்திற்கு வரும் இளவரசி டயானாவின் 1981 ஃபோர்டு எஸ்கார்ட்!! யாரும் அதிர்ஷ்டம் அடிச்சிருக்கோ...!

பிரிட்டிஷ் ராயல் குடும்பத்தில் பிறந்த இளவரசி டயானாவை பற்றி தெரியாதவர்களே இருக்க மாட்டீர்கள் என்று தான் நினைக்கிறேன். குறிப்பாக 1970, 80களில் உலகம் முழுவதும் பேசப்படும் நபராக டயானா விளங்கினார்.

ஏலத்திற்கு வரும் இளவரசி டயானாவின் 1981 ஃபோர்டு எஸ்கார்ட்!! யாரும் அதிர்ஷ்டம் அடிச்சிருக்கோ...!

1961ல் பிறந்த இளவரசி டயானாவிற்கும், இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இளைய மகன் சார்லஸிற்கும் 1981ல் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகே இங்கிலாந்தின் நட்சத்திரமாக டயானா உருவெடுத்தார்.

ஏலத்திற்கு வரும் இளவரசி டயானாவின் 1981 ஃபோர்டு எஸ்கார்ட்!! யாரும் அதிர்ஷ்டம் அடிச்சிருக்கோ...!

சரி செய்திக்குள் வருவோம், இளவரசி டயானாவின் 1981 ஃபோர்டு எஸ்கார்ட் கியா சலூன் கார் வருகிற ஜூன் 29ஆம் தேதி எசெக்ஸில் உள்ள ரீமன் டான்சி என்ற பிரபலமான மற்றும் பழமையான ஏலம் நடத்தும் நிறுவனத்தின் மூலம் ஏலம் விடப்பட உள்ளது.

ஏலத்திற்கு வரும் இளவரசி டயானாவின் 1981 ஃபோர்டு எஸ்கார்ட்!! யாரும் அதிர்ஷ்டம் அடிச்சிருக்கோ...!

1981 மே மாதத்தில் திருமண நிச்சயதார்தத்தின் போது இந்த ஃபோர்டு காரை இளவரசிக்கு சார்லஸ் பரிசாக வழங்கப்பட்டது. அதன்பின் இரண்டு மாதங்கள் கழித்து இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்த 5-கதவு ஹேட்ச்பேக் கார் 1982 வரையில் பயன்பாட்டில் இருந்தது.

ஏலத்திற்கு வரும் இளவரசி டயானாவின் 1981 ஃபோர்டு எஸ்கார்ட்!! யாரும் அதிர்ஷ்டம் அடிச்சிருக்கோ...!

அதன்பின் தற்போது வரையில் கிட்டத்தட்ட 20 வருடங்களாக டயானாவின் இந்த கார் பயன்பாட்டில் இல்லை எனவும், இந்த ஃபோர்டு எஸ்கார்ட் கியா சலூன் கார் தற்போதும் அதன் ‘WEV 297W' என்ற ஒரிஜினல் பதிவு எண்ணையே கொண்டுள்ளதாக ரீமன் டான்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏலத்திற்கு வரும் இளவரசி டயானாவின் 1981 ஃபோர்டு எஸ்கார்ட்!! யாரும் அதிர்ஷ்டம் அடிச்சிருக்கோ...!

1,33,575கிமீ தூரத்திற்கு இந்த பழமையான கார் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், இப்போதும் இந்த ஃபோர்டு கார் புத்துணர்ச்சியான தோற்றத்திலேயே காட்சியளிப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பெயிண்ட் மற்றும் உட்புற கேபின் உள்ளமைவுகள் கூட மாற்றப்படவில்லையாம்.

ஏலத்திற்கு வரும் இளவரசி டயானாவின் 1981 ஃபோர்டு எஸ்கார்ட்!! யாரும் அதிர்ஷ்டம் அடிச்சிருக்கோ...!

இதனால் இளவரசி டயானாவின் இந்த கார், பழமையான கார் விரும்பிகளுக்கு நிச்சயம் ஒரு வரமாகும். இந்த ஃபோர்டு எஸ்கார்ட் காரில் பலமுறை டயானா நகரத்தில் உலா வந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட படங்கள் அந்த சமயத்தில் செய்திதாள்களில் வெளிவந்தன.

ஏலத்திற்கு வரும் இளவரசி டயானாவின் 1981 ஃபோர்டு எஸ்கார்ட்!! யாரும் அதிர்ஷ்டம் அடிச்சிருக்கோ...!

குறிப்பாக, இளவரசர் சார்லஸ் குதிரைகளுடன் விளையாடும் போலோ போட்டியில் கலந்துக்கொண்டு விளையாடி கொண்டிருந்ததை இளவரசி தனது இந்த காரில் அமர்ந்து பார்க்கும் புகைப்படம் அந்த நேரத்தில் உலகம் முழுவதும் வைரலானது. அத்தகைய சிறப்புக்கு சொந்தமானது இந்த ஃபோர்டு கார் ஆகும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Princess Diana's 1981 Ford Escort Ghia goes for auction
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X